அண்மையச்செய்திகள்

Monday 18 December 2017

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி ஒன்றியத்தில் வசிக்கும் அருந்ததியர் மக்களுக்கு அடிப்படை வசதிகள் கேட்டு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையினர் மனு

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி ஒன்றியத்தில் வசிக்கும் அருந்ததியர் மக்களுக்கு அடிப்படை வசதிகள் கேட்டு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையினர் மனு
******************************************************
நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் டேனிஷ்பேட்டை ஊராட்சி இராஜமன்னார் காலனி பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் கலந்து கொண்டு எங்கள் பகுதிக்கு அருகில் தான் காவிரி நீர் டேங்க் உள்ளது அதிலிருந்து ஆதிக்க சாதிக்கு மட்டும் தண்ணீர் வழங்கப்பட்டு வருகின்றனர் ஆனால் நமது பகுதிக்கு தண்ணீர் வழங்குவது இல்லை. எங்களுக்கு உப்பு தண்ணீர் மட்டுமே வழங்குகின்றனர் அந்த தண்ணீரும் எங்களுக்கு சரியாக வழங்குவது இல்லை எனவும். அந்த நீர் மஞ்சள் நிறத்தில் வருவதால் பகுதியில் அடிக்கடி குழந்தைகளுக்கும்,மக்களுக்கும் உடல் நிலை சரியில்லாம் போகிறது என்றும் கூட்டத்தில் பேசினார்கள்.பிறகு காடையாம்பட்டி ஒன்றியத்தில் இதே போன்று தொட்டம்பட்டி காலனியில் பிரச்சனைகள் இருந்தது.அதை பேரவை கையில் எடுத்து மக்கள் குறைதீர்க்கும் நாள்கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.ஆட்சியாளர்கள் நேரில் வந்து ஆய்வு செய்து பைப் லைன் அமைத்து மேட்டூர் நீர் அந்த பகுதிக்கு வழங்கப்படுகிறது என கூறிய பின் தோழர்கள் நாங்கள் பேரவையில் இணைந்து செயல்படுகிறோம் என்று கூறினார்கள்.களத்தில் ஒன்றிய செயலாளர் துரை.மாதேசு,ஒன்றிய தலைவர் ஏ.ஜெயபால்,ஒன்றிய கொ.ப.செயலாளர் செ.வினோத் மற்றும் ஒன்றிய மாணவர் பேரவை பொறுப்பாளர் வீரமணி,இளைஞர் பேரவை பொறுப்பாளர் துரைசிங்கம் ஆகியோர் சென்று பேரவை சார்பில் மனு அளிக்கப்பட்டது.
அதேபோன்று கடந்த 31-07-17 அன்று பூசாரிப்பட்டி பகுதிக்கு வீட்டுமனை வேண்டி மனு அளிக்கப்பட்டது.மனு மீது நடவடிக்கை இல்லை என்பதால் நினைவூட்டல் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.
தகவலுக்காக
துரை.மாதேசு
ஒன்றிய செயலாளர்,
காடையாம்பட்டி ஒன்றியம்,
சேலம் மாவட்டம். (வடக்கு)






No comments:

Post a Comment