அண்மையச்செய்திகள்

Monday 4 December 2017

நீதிக்கான தொடக்கம் ஆதித்தமிழர் பேரவை அழுத்தத்தால் முதல் நகர்வு

நீதிக்கான தொடக்கம் ஆதித்தமிழர் பேரவை அழுத்தத்தால் முதல் நகர்வு
"""""""""""""""""""""""""""""""""""""""""
கடந்த 24.11.2017 அன்று திண்டுக்கல் மாநகராட்சியில் ஒப்பந்த துப்புரவு பணியாளராக பணிபுரிந்த பாலமுருகன், மதுரைவீரன், சரவணன் ஆகிய மூன்று பேரையும் அதிகாலை பணியில் இருந்தபோது அடுத்தடுத்து சாதிவெறி சமூகவிரோதக் கும்பல் கொடூரமாக படுகொலை செய்தது.
அரசின் அலட்சியம்
.....,...............................................
இப்படுகொலை நிகழ்ந்து நான்கு நாட்களாகியும் கொலையாளிகளை கைது செய்யாமால் காவல்துறை காலம் தாழ்த்தியது. படுகொலையான மூவரும் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் சமூகத்தை சார்ந்தவர்கள், கொலையாளிகளோ ஆதிக்க சாதியை சார்ந்தவர்கள் என்பதால், உரிய விசாரணை மேற்கொண்டு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து, கொலையாளிகளை உடனடியாக கைது செய்திருக்க வேண்டும். ஆனால், எடப்பாடி பழனிச்சாமியின் எடுபுடி காவல்துறை, வழக்கம் போல கொலை வழக்கை ஐ.பி.சி யாக மட்டுமே பதிவு செய்து நீதிக்கு புறம்பாக நடந்து கொண்டது.
தலைவரின் வருகை:
"""""""""""""""""""""""""""""""""
கடந்த 27-11-2017 அன்று ஆதித்தமிழர்களின் அரசியல் முகவரி அய்யா அதியமான் அவர்கள் தலைமையில் மாநகராட்சி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு மாநாகராட்சியை முற்றுகையிட்டனர், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களையும் பாதிக்கப்பட்ட மூன்று குடுப்பத்தாரையும் சந்தித்து போராட்டத்தின் நோக்கம் குறித்தும், தொழிலாளர்களின் உரிமைகள் குறித்தும், அதற்கான அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்ல அமைப்பாக திரள்வதன் அவசியம் குறித்தும் உரையாற்றினார்.
ஆதித்தமிழர்களின் அதிரடி நடவடிக்கையால் அடங்கியது நிர்வாகம்!
""""""""""""""""""""'''''''''''''''''’''
நமது தலைவரின் வருகையை முன்பே அறிந்திருந்த திண்டுக்கல் மாவட்ட மற்றும் மாநாகராட்சி நிர்வாகம் முன்னெச்சரிக்கையாக அதிகஅளவு காவல்துறையை குவித்து வைத்திருந்தது, தொழிலாளர்கள் மத்தியில் தலைவர் பேசியதைக் கேட்ட நிர்வாகம், காவல்துறையை தூது அனுப்பி தலைவரிடம் பேசுவதற்கு அனுமதி கேட்டது. நிர்வாகத்தின் வேண்டுகோளை ஏற்று ஆணையாளரை சந்தித்தார் நம்தலைவர்.
தொழிலாளர்கள் துயர்துடைக்க ஆணையாளரின் கடமையை சுட்டிக் காட்டிய நிறுவனர்.
""""""''''''''''''''''''''''''''''''''''''''''''
மாநகராட்சி ஆணையாளரையும், காவல்துறை அதிகாரிகளையும் சந்தித்த நமது அரசியல் முகவரி நடத்த சம்பவத்திற்கு பேரவையின் சார்பில் தனது கண்டனங்களை பதிவு செய்துவிட்டு, இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்கக் கூடாது எனவும், மாவட்டத்தில் நிலவும் அசாதாராண சூழ்நிலையை விரிவான அறிக்கையாக தயாரித்து தமிழக முதல்வருக்கு ஆணையாளர் அனுப்ப வேண்டும். அனைத்து பணியாளர்களுக்கும் பணிப்பாதுகாப்பை உறுதி படுத்தவேண்டும். மற்ற தொழிலார்களுக்கு வழங்கப்படுகின்ற உரிமைகள் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை, காவல்துறை உள்ளிட்ட சீருடை பணியாளர்களுக்கு அரசால் வழங்கப்படும் சீருடைகளை துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கும்போது மட்டும், புகைப்படம் எடுத்து பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்கின்றனர். இதே அணுகுமுறையை மற்றவர்களுக்கு வழங்கப்படும் போது கடைபிடிப்பதில்லை, இதுதான் அரசுகள் கடை பிடிக்கும் தீண்டாமை என்றார். மேலும் பாதிக்கப்பட்ட மூன்று குடும்பத்திற்கு திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகம் சட்டப்படி உரிய இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும், வலியுறுத்திளார்.
காவல் துறை அதிகாரிகளிடத்தில் பேசிய தலைவர் இவ்வழக்கை உடனடியாக வன்கொடுமை வழக்காக பதிய வேண்டும், குற்றவாளிகள், அனைவரையும் வழக்கு முடியும்வரை குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும் என்றார், தவறும் பட்சத்தில், இந்தப் போராட்டம் இப்படியே தொடரும் என்று அறிவித்தார், உடனாடியாக காவல்துறை ஐ.பி.சி வழக்கை வன்கொடுமை வழக்காக மாற்றம் செய்தனர்
இன்று 30-11-2017 பாதிக்கப்பட்ட மூன்று குடும்பங்களுக்கும் தலா முதல் தவணையாக தலா 4,15,000/ (நான்கு லட்சத்து பதினைந்து ஆயிரம்) ரூபாயை தீர்வைத் தொகையாக தேசிய ஆணையம் வழங்கியுள்ளது. இது ஒரு இடைக்கால தீர்வு, நீதியின் தொடக்கம்.
கொலையாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்கும் வரை நமது போராட்டம் ஓயாது.....
----------------------------------------
ச.சு.ஆனந்தன் ..
*ஆதித்தமிழர் பேரவை*



No comments:

Post a Comment