அண்மையச்செய்திகள்

Thursday 16 November 2017

தமிழகத்தில் அறிவிக்கப்பட்டாத ஆளுநர் ஆட்சிக்கு அடிக்கோலிடும் மத்திய அரசை ஆதித்தமிழர் பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது.--- தலைவர் அதியமான் கண்டனம்.

கோவையில் ஆளுநர் நிர்வாகத் தலையீடு
 """"""""""""""""""""”"""""""”""""""""
தமிழகத்தில் அறிவிக்கப்பட்டாத ஆளுநர் ஆட்சிக்கு அடிக்கோலிடும் மத்திய அரசை ஆதித்தமிழர் பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது.

தலைவர் அதியமான் கண்டனம்.
***********************
கோவையில், தமிழக ஆளுநர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டம். மாவட்ட ஆட்சியர், மாநகர ஆணையர் மற்றும் அதிகாரிகளுக்கு முன் கூட்டியே தகவல் கொடுத்துதான் கூட்டப்பட்டுள்ளது என்பதை கேள்விப்படுகிற போது, இதில் மத்திய அரசின் வழிகாட்டுதல் இருப்பது தெரியவருகிறது,

சட்டத்துக்குப் புறம்பான இத்தகைய செயலை வன்மையாகக் கண்டிப்பதுடன், தமிழகத்திற்கு யார்? முதல்வர் என்பதை தமிழக எடப்பாடி பழனிச்சாமி அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று ஆதித்தமிழர் பேரவை கேட்டுக்கொள்கிறது.

பா.ஜ.க ஆளாத மாநிலங்களில், அம் மாநில உரிமைகளின் மீது தனது அதிகாரத் திணிப்பை அவர்களால் நியமிக்கப்படும் ஆளுநர் மூலம் செய்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளது.

அதன் நீட்சியாகத்தான், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று கோயம்புத்தூரில் மாவட்ட ஆட்சியர், மாநகர ஆணையர் மற்றும் அதிகாரிகளைக் கூட்டி கலந்தாய்வுக் கூட்டத்தை நடத்தியிருக்கிறார்.

மரபுகளை மீறி ஆளுநர் நடத்திய இந்தக் கலந்தாய்வைக் கண்டித்து, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் நேரடியாக அங்கு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அனைத்தும் தங்களது கண்டனத்தைத் தெரிவித்தன.

ஆனால் ஆளும் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட அமைச்சர்களும், பாஜக மட்டும்தான் ஆளுநரின் இந்த நடவடிக்கையை நியாயப்படுத்தி பேசிவருகின்றனர்.

இப்படி எதிர்க்கட்சிகளின் கண்டனத்தையும் மீறி, 2ஆவது நாளும் கோவையில் கலந்தாய்வில் ஈடுபட்டுள்ளார் ஆளுநர். இதில் தமிழக அமைச்சர் வேலுமணியும் கலந்து கொண்டிருப்பது, பாஜக வின் பினாமி அரசாகத்தான் தமிழக அரசு செயல்படுகிறது என்பதையே நிரூபிக்கிறது.

ஆளுநரின் வரம்புக்கு உட்பட்ட மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து கோவை பேருந்து நிலையத்தில் பயோ டாய்லெட்டை ஆய்வு செய்த ஆளுநர், பிரதமரின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் குப்பைகளை அகற்றும் பணியிலும் ஈடுபட்டார்.

குப்பைகளை கூட்டி அள்ளி ஊடகங்களுக்கு செய்தி தந்துள்ள ஆளுனர், தூய்மைப் பணியாளர்களின் அவல நிலைகளையும், மலக்குழி மரணங்களையும், கந்து வட்டிக் கொடுமையால் வங்கிப் புத்தகத்தையும், ஏடிஎம் அட்டையையும் வட்டிக் கும்பலிடம் இழந்து நிற்பதையும், தூய்மைப் பணியாளர்களின் சுகதாரமற்ற வாழ்விடங்களையும் ஆய்வு செய்திருக்கலாம்.

அதையெல்லாம் செய்வதற்கு முன்வராத ஆளுனர் தனது வரம்பை தூய்மை இந்தியா திட்டத்தில் மட்டும் காட்டாமல் தமிழக அரசின் நிர்வாகத்திலும், மக்களின் நேரடி அமைப்பான உள்ளாட்சி அமைப்புகளிலும் காட்டுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

சட்டத்துக்குப் புறம்பான ஆளுநரின் இத்தகைய செயலை வன்மையாகக் கண்டிப்பதுடன், தமிழக மக்களால் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி அரசு வாக்களித்த தமிழக மக்களுக்கு உரிய விளக்கமளிக்க வேண்டும் என்று ஆதித்தமிழர் பேரவை வலியுறுத்துகிறது.

இவண்
இரா.அதியமான்
நிறுவனர்/தலைவர்
ஆதித்தமிழர் பேரவை.
15.11.2017, கோவை.




No comments:

Post a Comment