அண்மையச்செய்திகள்

Thursday 2 November 2017

மார்க்சிஸ்ட் அலுவலகத்தின் கட்சிக் கொடியை எரித்து தமிழத்தில் வன்முறையை தூண்ட பாஜக மாணவர் அமைப்பு ஏபிவிபி சதி! *தமிழகஅரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்* *தலைவர் அதியமான் வலியுறுத்தல்*

பாஜக அணியினரின்
பாசிச வெறியாட்டம்!
"""""""""""""""""""”""""""""""""
மார்க்சிஸ்ட் அலுவலகத்தின் கட்சிக் கொடியை எரித்து தமிழத்தில் வன்முறையை தூண்ட பாஜக மாணவர் அமைப்பு ஏபிவிபி சதி! 

*தமிழகஅரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்* 

*தலைவர் அதியமான் வலியுறுத்தல்*

*************************
சென்னை தியாகராயர் நகரில் அமைந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் முன்பாக உள்ள கட்சிக் கொடியை எரித்து பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபியைச் சார்ந்த 11 பேர் கொண்ட கும்பல் வன்முறை வெறியாட்டத்தை நடத்தியுள்ளது. இதை வன்மையாகக் கண்டிப்பதோடு, வன்முறையில் ஈடுபட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழகக் காவல்துறையை ஆதித்தமிழர் பேரவை வலியுறுத்துகிறது. 

ஏற்கனவே தலைநகர் தில்லியில் செய்தியாளர் வேடத்தில் தோழர் யெச்சூரியை தாக்க முற்பட்டது, கோவை மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது, மயிலாடுதுறையிலும், கரூரிலும் விசிகவினர் மீது தாக்குதல் நடத்தி கொடியை எரித்தது போன்ற பல்வேறு வன்முறை சம்பவங்களை கட்டவிழ்த்து விடும் பாஜக மற்றும் அதன் அணியினர். தமிழ்நாட்டில் வன்முறையைத் தூண்டி இதை ஒரு கலவரபூமியாக மாற்றும் திட்டத்தோடு செயல்பட்டு வருவது மிகவும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 

இந்த வன்முறை செயல்களை வேடிக்கை பார்க்காமல் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழகம் அமைதிப் பூங்காவாக தொடர உரிய நடவடிக்களை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக எடப்பாடி பழனிச்சாமி அரசை ஆதித்தமிழர் பேரவை அக்கரையோடு கேட்டுக் கொள்கிறது. 

தமிழ்நாட்டில் எப்படியாவது கால் ஊன்றிவிட வேண்டும் என்ற நோக்கத்தோடு பாஜக பல்வேறு ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. மோசமான பொருளாதாரக் கொள்கையின் காரணமாக இந்தியா முழுவதும் பாஜக கடுமையான எதிர்ப்பை மக்களிடம் சந்தித்து வரும் நிலையில், பாஜகவின் மதவாத செயல்திட்டத்தினால் கருத்துரிமைக்கு எதிரான படுகொலைகள் மட்டுமின்றி தனியார்மயம் தாராளமயம் என நாட்டை அடகுவைக்கும் போக்கை, அம்பலப்படுத்தி இடதுசாரிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருவதாலும்,  மதவெறிக்கு எதிரான சமரசமில்லாத பல்வேறு போராட்டங்களை இந்தியா முழுமைக்கும் முன்னெடுத்து வருவதாலும் ஆத்திரம் கொண்ட பாஜக தனது துணை அமைப்புகளை ஏவி இப்படிப்பட்ட வன்முறைகளை கட்டவிழ்த்து விடுகின்றன.  

இது தமிழகத்தின் அமைதியைக் குலைத்து கலவரத்தை தூண்டி குஜராத் பூமியாக தமிழகத்தை மாற்றுவதற்கான முயற்சி என்றே தெரிய வருகிறது, தமிழக அரசு இதை வேடிக்கை பார்க்காமல் வகுப்புவாத எதிர்ப்பில் உறுதிகாத்து நடவடிக்களை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்வதோடு,

உழைக்கும் மக்களின் விடுதலைக்காகக் களத்தில் நிற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பாஜகவின் பாசிச செயலால் ஒடுக்கிவிடலாம் என எண்ணினால் அதை ஒருபோதும் ஆதித்தமிழர் பேரவை போன்ற ஜனநாயக சக்திகள் வேடிக்கை பார்க்காது. ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக போராடும் ஜனநாய சக்திகளுடன் இணைந்து பார்பனிய மதவெறி பாஜக கும்பலுக்கு பாடம் புகட்ட ஒன்றிணைந்து நிற்போம் என ஆதித்தமிழர் பேரவை வலியுறுத்துகிறது. 

இவண்
இரா.அதியமான்
நிறுவனர்/தலைவர் 
ஆதித்தமிழர் பேரவை.
கோவை 1.11.2017.

No comments:

Post a Comment