அண்மையச்செய்திகள்

Friday 3 November 2017

ஆதித்தமிழர்பேரவையின் தேனி மாவட்ட செயற்க்குழு :போடி ஒன்றியத்தில் 3-11-17 இன்று நடைபெற்றது


இக்கூட்டத்திற்கு
போடி ஒன்றியச்செயலாளர் வீ.காட்டுராசா தலைமை தாங்கினார் ,
ஒன்றியத்தலைவர் சுருளி, நகரப்பொறுப்பாளர்கள் N.P குமார், ரா ராஜ்குமார் ,M மதுரைவீரன், மு.கார்த்தி ல.அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் ,
மாவட்டசெயலாளர் இரா இளந்தமிழன் , மாவட்ட தலைவர் கா.தீப்பொறி அரசு , மாவட்ட மாணவரணிச்செயலாளர் தமிழவன் , மாவட்ட துணைச்செயலாளர் பழ விடுதலைவேந்தன்,மாவட்ட செய்தித்தொடர்பாளர் நீ சிவா, கம்பம் நகரச்செயலாளர் கோட்டை குருமுருகன் ஆகியோர் கருத்துரை ஆற்றினர், இக்கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில தொழிலாளர் பேரவை செயலாளர் மா.நீலகணலன் கலந்து கொண்டார், கூட்டத்தின் முடிவில் ஒன்றிய இளைஞரணிச் செயலாளர் க.மாரீஸ்வரன் நிறைவுரை வழங்கினார்
இக்கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
தீர்மானங்கள் ;-
1.கந்துவட்டி தடைச்சட்டம்,வன்கொடுமை தடைச்சட்டம்,கையால் மலம் அள்ளும் தடைச்சட்டம் நடைமுறைபடுத்த அரசு குழு அமைத்து கண்காணிப்பதுடன் வறுமை கோட்டிற்கு கீழ்வாழும் ஏழை கூலித் தொழிலாளர்களுக்கு அரசு வங்கிகளில் கடனுதவி பெறுவதற்க்கு முன்னுரிமை வழங்கு.
#தீர்மானம்2.
போடி நகராட்சி காலனியில் குடியிருக்கும் அருந்ததியர் மக்களுக்கு சொந்தமான சமுதாயக் கட்டிடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ள நகராட்சி நிர்வாகத்தை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது அந்த ஆக்கிரமைப்பை உடனடியாக அகற்று மேலும் அந்த பகுதியில் குப்பை கழிவுகள் நீண்ட நாட்களாக அகற்றபடாமல் குப்பை மேடுகள் இருக்கிறது டெங்கு காயச்சல் பரவும் அபாயம் உள்ளதால் போர்க்கால அடிப்படையில் குப்பை கழிவுகளை அகற்றபட வேண்டும்
#தீர்மானம்3
எதிர்வரும் நவம்பர் 26திருச்சியில் நடைபெறும் வீரமங்கை இராணி அவர்களின் நினைவு நாள் பொதுகூட்டத்திற்க்கு தேனி மாவட்டத்தில் இருந்து திரளாக கலந்து கொள்ள வேண்டும்
#தீர்மானம்4.
போடி ஒன்றியம் கிராமங்களில் அடிப்படை வசதிகள் இன்றி சுகாதாரமற்ற நிலையில் டெங்கு பரவும் அபாயம் உள்ளது துரித நடவடிக்கை எடுக்கபட வேண்டும்
போன்ற தீர்மானங்கள் ஒருமனதாக எடுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது .
 இச்செயற்குழுவில் பல்வேறு கட்சியிலிருந்து விலகி 30 க்கும் மேற்பட்டோர் தங்களை ஆதித்தமிழர் பேரவையில் மாவட்ட செயலாளர் இளந்தமிழன் முன்னிலையில் இணைத்து கொண்டனர்.





No comments:

Post a Comment