Friday, 17 November 2017

செகுடந்தாளி முருகேசனுக்கு நிறுவனர். தலைமையில் வீரவணக்கம்.17.11.2017

செகுடந்தாளி முருகேசனுக்கு நிறுவனர். தலைமையில் வீரவணக்கம்.17.11.2017

செகுடந்தாளி முருகேசனுக்கு நிறுவனர். தலைமையில் வீரவணக்கம்.(((புகைப்படம் மற்றும் காணொளி )))
~~~~~~~~~

நிகழ்வின் விடியோவை இங்கு சொடுக்கவும்

செகுடந்தாளி முருகேசன் புத்தகதின் முழு வரிகளை காண இங்கு சொடுக்கவும்

ஆதித்தமிழர் பேரவை வெளியிட்ட " சாதி ஒழிப்பு போராளி செகுடந்தாளி முருகேசன் " புத்தகத்தை காண இங்கு சொடுக்கவும்


கடந்த 17.11.1999 அன்று கோவை மாவட்டம் சோமனூர் அருகில் உள்ள செகுடந்தாளி கிராமத்தில்

புதிதாக திருமணமான முருகேசன் என்ற இளைஞன் தனது கர்ப்பிணி மனைவி கருப்பாத்தாளுடன், மருத்துவனைக்கு  சென்றுவிட்டு அரசுபேருந்தில் செகுடந்தாளிக்கு திருபிக்கொண்டிருந்த போது.

மயக்கமாக இருந்த கர்ப்பிணி மனைவியை காலியாக இருந்த பேரூந்தின் இருக்கை ஒன்றில்  அமரவைத்துள்ளார், அதே இருக்கையில் பக்கத்தில் அமர்ந்திருந்த கவுண்டர் சாதியை சேர்ந்த ஒருவன்.

ஒரு சக்கிலிச்சி என் அருகில் உட்காருவதா! என்று கருப்பாத்தாள் வயிற்றில் எட்டி உதைத்துள்ளான். அதனால் வயிற்றில் இருந்த சிசு கலைந்து ரத்தவெள்ளத்தில் மிதந்தார் கருப்பாத்தாள்.

இது சம்மந்தமான வழக்கைத்தான் திரும்ப பெறச்சொல்லி கவுண்டர்கள் கும்பலாக கூடி மிரட்ட,, மிரட்டலுக்கு அஞ்சிடாத முருகேசன் வழக்கை வாபஸ் பெறமுடியாது! என உறுதியாக இருந்ததனால்.

ஆத்திரம் அடைந்த் சாதிவெறி கவுண்டர்கள் செகுடந்தாளி பஸ் நிறுத்தத்தில் வைத்து கற்களால் அடித்து படுகொலை செய்தனர்.

வழக்கம் போல் குற்றவாளி ஈசுவரன் என்ற சாதிவெறியன் தண்டனையை கழித்து விட்டு தற்போது சுத்ந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கின்றான்,

ஆதிக்கத்திற்கும் அடக்குமுறைக்கும் அடங்க மறுத்து தன் இன்னுயிரை தந்த, அந்த மகத்தான போராளி முருகேசனின் நினைவு நாளில்
அய்யா அதியமான் தலைமையில்  சாதிவெறிக்கு எதிராக சபதமேற்று வீரவணக்கம் செலுத்தினர் நீலச்சட்டை போராளிகள்.
Thursday, 16 November 2017

தமிழகத்தில் அறிவிக்கப்பட்டாத ஆளுநர் ஆட்சிக்கு அடிக்கோலிடும் மத்திய அரசை ஆதித்தமிழர் பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது.--- தலைவர் அதியமான் கண்டனம்.

கோவையில் ஆளுநர் நிர்வாகத் தலையீடு
 """"""""""""""""""""”"""""""”""""""""
தமிழகத்தில் அறிவிக்கப்பட்டாத ஆளுநர் ஆட்சிக்கு அடிக்கோலிடும் மத்திய அரசை ஆதித்தமிழர் பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது.

தலைவர் அதியமான் கண்டனம்.
***********************
கோவையில், தமிழக ஆளுநர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டம். மாவட்ட ஆட்சியர், மாநகர ஆணையர் மற்றும் அதிகாரிகளுக்கு முன் கூட்டியே தகவல் கொடுத்துதான் கூட்டப்பட்டுள்ளது என்பதை கேள்விப்படுகிற போது, இதில் மத்திய அரசின் வழிகாட்டுதல் இருப்பது தெரியவருகிறது,

சட்டத்துக்குப் புறம்பான இத்தகைய செயலை வன்மையாகக் கண்டிப்பதுடன், தமிழகத்திற்கு யார்? முதல்வர் என்பதை தமிழக எடப்பாடி பழனிச்சாமி அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று ஆதித்தமிழர் பேரவை கேட்டுக்கொள்கிறது.

பா.ஜ.க ஆளாத மாநிலங்களில், அம் மாநில உரிமைகளின் மீது தனது அதிகாரத் திணிப்பை அவர்களால் நியமிக்கப்படும் ஆளுநர் மூலம் செய்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளது.

அதன் நீட்சியாகத்தான், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று கோயம்புத்தூரில் மாவட்ட ஆட்சியர், மாநகர ஆணையர் மற்றும் அதிகாரிகளைக் கூட்டி கலந்தாய்வுக் கூட்டத்தை நடத்தியிருக்கிறார்.

மரபுகளை மீறி ஆளுநர் நடத்திய இந்தக் கலந்தாய்வைக் கண்டித்து, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் நேரடியாக அங்கு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அனைத்தும் தங்களது கண்டனத்தைத் தெரிவித்தன.

ஆனால் ஆளும் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட அமைச்சர்களும், பாஜக மட்டும்தான் ஆளுநரின் இந்த நடவடிக்கையை நியாயப்படுத்தி பேசிவருகின்றனர்.

இப்படி எதிர்க்கட்சிகளின் கண்டனத்தையும் மீறி, 2ஆவது நாளும் கோவையில் கலந்தாய்வில் ஈடுபட்டுள்ளார் ஆளுநர். இதில் தமிழக அமைச்சர் வேலுமணியும் கலந்து கொண்டிருப்பது, பாஜக வின் பினாமி அரசாகத்தான் தமிழக அரசு செயல்படுகிறது என்பதையே நிரூபிக்கிறது.

ஆளுநரின் வரம்புக்கு உட்பட்ட மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து கோவை பேருந்து நிலையத்தில் பயோ டாய்லெட்டை ஆய்வு செய்த ஆளுநர், பிரதமரின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் குப்பைகளை அகற்றும் பணியிலும் ஈடுபட்டார்.

குப்பைகளை கூட்டி அள்ளி ஊடகங்களுக்கு செய்தி தந்துள்ள ஆளுனர், தூய்மைப் பணியாளர்களின் அவல நிலைகளையும், மலக்குழி மரணங்களையும், கந்து வட்டிக் கொடுமையால் வங்கிப் புத்தகத்தையும், ஏடிஎம் அட்டையையும் வட்டிக் கும்பலிடம் இழந்து நிற்பதையும், தூய்மைப் பணியாளர்களின் சுகதாரமற்ற வாழ்விடங்களையும் ஆய்வு செய்திருக்கலாம்.

அதையெல்லாம் செய்வதற்கு முன்வராத ஆளுனர் தனது வரம்பை தூய்மை இந்தியா திட்டத்தில் மட்டும் காட்டாமல் தமிழக அரசின் நிர்வாகத்திலும், மக்களின் நேரடி அமைப்பான உள்ளாட்சி அமைப்புகளிலும் காட்டுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

சட்டத்துக்குப் புறம்பான ஆளுநரின் இத்தகைய செயலை வன்மையாகக் கண்டிப்பதுடன், தமிழக மக்களால் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி அரசு வாக்களித்த தமிழக மக்களுக்கு உரிய விளக்கமளிக்க வேண்டும் என்று ஆதித்தமிழர் பேரவை வலியுறுத்துகிறது.

இவண்
இரா.அதியமான்
நிறுவனர்/தலைவர்
ஆதித்தமிழர் பேரவை.
15.11.2017, கோவை.
மதிப்பிற்குரிய அய்யா ஆ.கருப்பன் அவர்களுக்கு அவரின் இல்லத்தில் அய்யா அதியமான் அவர்கள் மலரஞ்சலி!!

மதிப்பிற்குரிய அய்யா ஆ.கருப்பன் அவர்களுக்கு அவரின் இல்லத்தில் அய்யா அதியமான் அவர்கள் மலரஞ்சலி!!
""""""""""""""""""""""""""""""""""""""""
மரியாதைக்குரிய தோழர் சித்தார்த்தன் அவர்களின் தந்தை போற்றுதலுக்குரிய அய்யா ஆ.கருப்பன் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த வருத்தங்களையும், இரங்கலையும் மதுரை கூடல்புதூரில் உள்ள அவரது இல்லத்திற்கு, அய்யா.அதியமான் அவர்கள் இன்று (16-11-2017) நேரில் சென்று மலரஞ்சலி செலுத்தி தனது வருத்தங்களையும் ஆறுதலையும் கூறினார். உடன் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை.திருவள்ளுவன்.மற்றும் மாநில முன்னணி பொறுப்பாளர்கள்.

மேலும், ஆதித்தமிழர் பேரவையின் மாநில நிர்வாகிகள், மாவட்ட.ஒன்றிய.கிளை நிர்வாகிகள் அனைவரும் உடனிருந்தனர்.

ஆதித்தமிழர் பேரவை.
மதுரை மாவட்டம்.


மதிப்புமிகு அய்யா மதுரை வீரன் அவர்களின் மறைவு ----அய்யா அதியமான் அவர்கள் நேரில் அஞ்சலி.!!

மதிப்புமிகு அய்யா மதுரை வீரன் அவர்களின் மறைவு ----அய்யா அதியமான் அவர்கள் நேரில் அஞ்சலி.!!
""''"""""""""""""""""""""""""""""""""""""
மதுரை மாவட்டம்.அலங்கை பேரூராட்சி தூய்மைத் தொழிலாளரும்.அலங்கை ஒன்றியம் காந்தி கிராம பேரவையின் கிளை நிர்வாகிகள் மணி சங்கிலி, மணிகண்டன் அகியோர்களின் தந்தையுமான மதிப்பு மிகு மதுரை வீரன் அவர்கள் உடல் நலக்குறைவினால் இன்று (16-11-2017) மரணமடைந்தார். இம் மறைவிற்க்கு பேரவையின் நிறுவனர் தலைவர் அவர்கள் அப்பகுதிக்கு மாலை 4 மணியளவில் நேரில் சென்று அஞ்சலியும்.ஆழ்ந்த வருத்தங்களையும் உறவினர்களுக்கு தெரிவிந்துக்கொண்டா.
உடன் மாநில பொறுப்பாளர்களும், மாவட்ட தலைவர் அலங்கை பாரதிதாசன்.அலங்கை ஒன்றிய செயலாளர் சரவணன் மற்றும் மாவட்ட.ஒன்றிய.பேரூர் நகரம்.கிளை பொறுப்பாளர்கள்.

ஆதித்தமிழர் பேரவை.
மதுரை மாவட்டம்.மரியாதைக்குரிய YGS மோகன் அவர்களை அவரது வீட்டில் சந்தித்து அய்யா அதியமான் அவர்கள் நலம் விசாரித்தார்!!

மரியாதைக்குரிய YGS மோகன் அவர்களை அவரது வீட்டில் சந்தித்து அய்யா அதியமான் அவர்கள் நலம் விசாரித்தார்!!
"""""""""""""""""""""""""""""""""""""""
நம் சமூகத்தின் மீது அக்கறையும்,பற்றும் வைத்துள்ளவரும் நமது பேரவையின் வளர்ச்சிக்கு நல் ஆலோசனைகளையும் ஒத்துழைப்பு வழங்கிவரும்,மதிப்பும், மரியாதையும் வைத்துள்ள மரியாதைக்குரிய,
YGS மோகன் (Rlwy / Retd)அவர்களை இன்று 16-11-2017 மதுரையிலுள்ள அவரது இல்லத்தில் பகல் 2 மணியளவில் நமது பேரவையின் நிறுவனர் தலைவர் அவர்களும் அய்யாவின் துணைவியார் அவர்களும் நேரில் சந்தித்து நலம் விசாரித்து பேரவையின் செயல்பாடுகளை சமூக நலன்களைப்பற்றி மகிழ்வோடு கலந்தாய்வு மேற்கொண்டார்கள் உடன் மாநில.மாவட்ட. ஒன்றிய, கிளை. நிர்வாகிகள் உறுப்பினர்கள்.

ஆதித்தமிழர் பேரவை.
மதுரை மாவட்டம்.
பட்டு அம்மாள் அவர்களின் மறைவிற்க்கு அய்யா அதியமான் அவர்கள் இன்று நேரில் அஞ்சலி.!!

பட்டு அம்மாள் அவர்களின் மறைவிற்க்கு அய்யா அதியமான் அவர்கள் இன்று நேரில் அஞ்சலி.!!
"""""""""""""""""""""""""""""""""""""""
இன்று 16-11-2017 மதுரை மேலப்பொன்னகரம் 4 வது தெருவில் வசிக்கும் மதிப்பிற்குரிய பட்டு அம்மாள் அவர்களின் மறைவிற்க்கு ஆழ்ந்த இரங்கலையும், வருத்தங்களையும் தெரிவித்துக்கொண்டு பேரவையின் நிறுவனர் தலைவர் அவர்கள் நேரில் பகல் 12 மணியளவில் அஞ்சலி செலுத்தினார்.
உடன் மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள்.
ஆதித்தமிழர் பேரவை.
மதுரை மாவட்டம்.தோழர் YGS மோகன் அவர்களை வீட்டில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் அய்யா அதியமான்


தோழர் YGS மோகன் அவர்களை வீட்டில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் அய்யா அதியமான்

இன்று 16.11.2017 மதுரை வருகை தந்த ஆதித்தமிழர்களின் அரசியல் முகவரி அய்யா அதியமான் அவர்கள் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ஓய்வில் இருந்த YGS மோகன் அவர்களை வீட்டில் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டு அறிந்து நலம் விசாரித்தார்.
Wednesday, 15 November 2017

கந்துவட்டி கொடுமைக்கு எதிராக மக்கள் அதிகாரம் நடத்திய ஆர்ம்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையினர்

கந்துவட்டி கொடுமைக்கு எதிராக
மக்கள் அதிகாரம் நடத்திய ஆர்ம்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையினர்
_______________________________________

கரூர் மாவட்ட
மக்கள் அதிகாரம் சார்பில் நடைபெற்ற கடனை கட்டாதே!
கந்துவட்டிக் கொடுமைக்கு முடிவு கட்டு!!
முழக்கத்தோடு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை கரூர் மாவட்டச்செயலாளர் தோழர் முல்லையரசு மற்றும் பேரவை தோழர்கள் கலந்து கொண்டனர்
15.11.17


தருமபுரி மாவட்டத்தில் தலித் பெண் மீது சாதி வெறி தாக்குதல் -- களத்தில் ஆதித்தமிழர் பேரவை

தருமபுரி மாவட்டத்தில் தலித் பெண் மீது சாதி வெறி தாக்குதல் -- களத்தில் ஆதித்தமிழர் பேரவை
*******
தருமபுரி மாவட்டம் ஏரியூர் ஒன்றியம் அஜ்ஜனஅள்ளி என்ற ஊரில் ராமு மனைவி மகேஷ் மீது ரேஷன் கடையில் வரிசையில் நின்றுக் கொண்டிருக்கும் போது வன்னியர் பெண் மீது தெரியாமல் கூட்டத்தில் அந்த பெண் மீது கை பட்டதிற்கு அந்த வன்னிய பெண் மல்லிகா மற்றும் மகேஷ் ஆகியோருடன் நீ சக்கிலி ஜாதி பொம்பள என்னை தொடரிய என்று
ஆரம்பித்து பின்பு சாதி பெயரை சொல்லி இழிவாக பேசி மல்லிகா,மகேஷ் மற்றும் இன்னும் ஐந்து பெண்களை சாதி வெறியுடன் தாக்கியுள்ளனர்......இதை அறிந்து களத்தில் தருமபுரி மாவட்ட ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் சிவன் ,மா.இ.அணி செயலாளர் சக்திவேல் ,மா.கொ.ப.செயலாளர் ராஜ்குமார்,மாவட்ட அமைப்பாளர் கார்த்திக் மற்றும் பேரவை தோழர்கள்.
14.11.17


வனவேங்கைகள் பேரவை நடத்திய உரிமை மீட்பு பொதுக்கூட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையினர்

வனவேங்கைகள் பேரவை நடத்திய உரிமை மீட்பு பொதுக்கூட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையினர்
*********
மதுரைமாநகரமாவட்டத்தில் வன வேங்கைகள் நடத்திய பழங்குடி உாிமை மீட்பு பொதுக்கூட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை தோழர்கள் மாநகர மாவட்டச்செயலாளா் க,சாமிகண்ணு , துணைபொதுச்செயலாளா் கபீா்நகா் காா்த்திக் ,கொள்கை பரப்புச்செயலாளர் ஜானகி அம்மா ,இளைஞரணி செயலிளர் இரா,செல்வம்,தொழிலாளர் பேரவை செயலாளர் தலித்ராஜா,செல்லபாண்டி,ராமேஸ்,அறுமுகம்,கௌரி,மாாிச்சாமி,முணிச்சாமி,உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
14.11.17மருத்துவமனை அலட்சிய போக்கை கண்டித்து மக்களுடன் ஆதித்தமிழர் பேரவையினர் சாலை மறியல்சங்கரன்கோவில் அருகில் நடுவகுறிச்சியில் தங்கராஜ் அவர்களின் மணைவி வயது 24/இன்று உடல் நிலை சரியில்லாமல் இறந்தார் அவர்களின் உடல் சங்கரன்கோவில் அரசு மருத்துவமணை அனுமதிக்கப்பட்டது பின்பு அரசு அதிகார அலச்சிய போக்கால் உடல் கூர் ஆய்வு தாமத படுத்தினார்கள் அதன் பிறகு ஆதித்தமிழர் பேரவை தோழர் தென்னரசு மற்றும் தமிழ்வளவன் ஆகியோர் மக்களை திரட்டி சாலை மறியல் செய்தனர் உடனடியாக நடவடிக்கை எடுத்து நல்லடக்கம் செய்யப்பட்டது

Tuesday, 14 November 2017

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் - அய்யா அதியமான் பங்கேற்பு


நவம்பர்.19
""""""""""""""""
முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் கோவை சிவானந்தா காலனியில் மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. திராவிட முன்னேற்றக் கழக செயல்தலைவர் தளபதி ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதில் பேரவை நிறுவனர் அய்யா அதியமான் அவர்களும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகிறார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் அழைப்பு விடுத்துள்ளார்.
_______
தகவல்
பொதுச்செயலாளர்.
14.11.2017


சிவகங்கை மாவட்டம் நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றது

சிவகங்கை மாவட்டம் நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றது
*******

13.11.2017 அன்று சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் தோழர் சண்முகம் அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் மாவட்டத்தலைவர் தோழர் பால்பாண்டி,மாவட்ட நிதிச்செயலாளர் தோழர் பிச்சைமுத்து,அமைப்புச்செயலாளர் தோழர் சன்முகம் ,காளையார் கோவில் ஒன்றிய செயலாளர் தோழர் மூக்கையா,தோழர் பாலு,தோழர் புரட்சிதாசன் ,சிறப்பு அழைப்பாராக மாநில இளைஞரணிச்செயலாளர் மற்றும் தோழர் இரா செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.மேலும் இக்கூட்டத்தில் டிசம்பர் 10 உள்ஒதுக்கீட்டு பாதுகாப்பு மற்றும் உயர்த்தி பெறுதல் குறித்து கருத்தரங்கம் நடத்துவதென முடிவெடுக்கப்பட்டுள்ளது

Monday, 13 November 2017

சித்தார்த்தன் அவர்களின் தந்தை பாசத்திற்குரிய *அய்யா ஆ.கருப்பன்* அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்தினார் பேரவையினர்


*ஆதித்தமிழர் பேரவை'*யின் புகழஞ்சலியும்!
மலரஞ்சலியும்!! சித்தார்த்தன் அவர்களின் தந்தை பாசத்திற்குரிய *அய்யா ஆ.கருப்பன்* அவர்களுக்கு
""""""""""""""""""""""""""""""""""""""""
 மரியாதைக்குரிய தோழர் சித்தார்த்தன் அவர்களின் தந்தை பாசத்திற்குரிய *அய்யா ஆ.கருப்பன்* அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி இன்று (13-11-2017) பகல் 12 மணியளவில் மதுரை கூடல்நகர் அவரது இல்லத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேரவையின் சார்பில் நினைவேந்தல் உரையினை மாநில துணைப்பொதுச்செயலாளர் தோழர் கபீர் நகர் கார்த்திக் அவர்களும்.நெல்லை கிழக்கு மாவட்டச் செயலாளர் தோழர் கு.கி.கலைக்கண்ணன் (நினைவேந்தல் உரை நிகழ்த்தினார்) அவர்களும்.மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் தோழர் பா.ஆதவன்.மாநகர் மாவட்டச் செயலாளர் தோழர் சாமிக்கண்ணு.
மாநகர நிதிச்செயலாளர் ரமேஷ்.ஆதித்தமிழர் தூய்மைத் தொழிலாளர் பேரவை மாநிலச் செயலாளர் தோழர் பெரு.தலித்ராஜா ஆகியோர்கள் பங்கேற்று புகழஞ்சலியும்! மலரஞ்சலியும்!! செலுத்தினார்கள்.
Sunday, 12 November 2017

கம்பம் நகராட்சி அலுவலித்தை ஆதித்தமிழர் பேரவையினர் முற்றுகையிட்டனர்

கம்பம் நகராட்சி அலுவலித்தை ஆதித்தமிழர் பேரவையினர் முற்றுகையிட்டனர்
*****
தற்போது கம்பம் நகராட்சி அலுவலகத்தை ஆதித்தமிழர் பேரவையினர் முற்றுகையிட்டனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோட்டை குரு தலைமையில் முருகன் முன்னிலையில் மோக.இளவேந்தன்Bscநெ.ராம்செழியன்BAவீர.அம்பேத்கோடி.MA நிர்வாகிகள் மற்றும் துப்பரவு பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தற்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்.இம்முற்றுகை போராட்டத்தில் இருபதுக்கும் மேற்பட்ட பெண்களும் கலந்து கொண்டனர். ஒப்பந்த துப்பரவு பணியாளர்களுக்கு கடந்த மூன்று மஆதங்களாக ஊதியம் வழங்காமல் இழுத்தடிக்கும் நகராட்சி அதிகாரகளை கண்டித்து ஆதித்தமிழர் தூய்மை தொழிலாளர்கள் பேரவை தோழர்களோடு மாணவர் பேரவை,ஆதித்தமிழர் பேரவை தோழர்களும் இம்முற்றுகை போராட்டத்தில் கலந்து கொண்டனர் மேலும் இத்தூய்மை பணியாளர்களுக்கு கடந்த ஆறு ஆண்டுகளாக சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட PFபணத்தை உடனடியாக வழங்க கோரியும் ,பிரதி மாதம் முதல் தேதியிலேயே ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கிட வேண்டுய் ,கம்பம்நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்திட வேண்டும் அரசானை படி ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய முழு சம்பளத்தை முழுமையாக வழங்கிட வேண்டும்,மேலும் இது போன்று தொடர்ந்து துப்புரவு தொழிலாளர்களை கண்டு கொள்ளாத தமிழக அரசை கண்டிக்கிறோம் என்ற கோரிக்கை முழக்கத்தோடு முற்றுகை போராட்டம் நடைபெற்று வருகிறது.
13-11-2017


 

தாராபுரத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது

தாராபுரத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது

12.11.2017 தாராபுரத்திற்கு உட்பட்ட பேரவை அலுவலகத்தில் செயற்குழு கூடடம் நடைபெற்றது.
கூட்டத்தை தலைமை ஏற்று நடத்தியவர் திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளர் ப. அர்ச்சுணன் .
கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மாவட்ட நிதிச் செயலாளர்
பொன். செல்வம் , மாவட்ட துணைக் செயலாளர்
P. S மணி,
மாவட்ட கொள்கைபரப்புச் செயலாளர் ஆட்டோ முருகேசன், தாராபுரம் நகரத் தலைவர் பழனிச்சாமி, தாராபுரம் நகரச் செயலாளர் சிவக்குமார், தாராபுரம் ஒன்றியத் தலைவர் சரவணன், தாராபுரம் ஒன்றியச் செயலாளர் மகுடிச்வரன் ,
தாராபுரம் ஒன்றிய இளைஞர்அணி செயலாளர் இராசேந்திரன், தாராபுரம் ஒன்றிய மாணவரணிச் செயலாளர், அ. சிவக்குமார் , மற்றும் தோழர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்கள்

கூட்டத்தின் நோக்கம்
தீர்மானம் 1:
புதிய பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கபட்டது

தீர்மானம் 2:
தாராபுரம் நகரத்தில் திசம்பர் 3ஆம் தேதி 5இடங்களில் கொடி ஏற்று விழா நடைபெறும் என்று தீர்மானிக்கப்பட்டது.

தீர்மானம் 3:
மாநாட்டின் களப்பணியில் ஒன்றியப் பகுதிகளில் தோழர்களை சந்தித்து மாநாட்டின் கொள்கைகளை மக்களிடம் கூறவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது

தீர்மானம் 4:
நவம்பர் 17 செகடன்தாளி முருகேசன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவதற்கு திருப்பூர் தெற்கு மாவட்டத்திலிருந்து 5வாகனங்கள் வரவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

தீர்மானம் 5:
நவம்பர் 26 திருச்சி ராணி அக்கா நிகழ்வுக்கு திருப்பூர் தெற்கு மாவட்டத் தோழர்கள் அனைவரும் கண்டிப்பாக கலந்து கொள்ளவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளர் ப. அர்ச்சுணன்
ஆதித் தமிழர் பேரவை
7 தூத்துக்குடி தெற்கு மாவட்டம் திருவைகுண்டம் ஒன்றியம் உட்பட்ட சாயர்புரம் கக்கன்ஜி நகர் பகுதியில் ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

12.11.2017 தூத்துக்குடி தெற்கு மாவட்டம் திருவைகுண்டம் ஒன்றியம் உட்பட்ட சாயர்புரம் கக்கன்ஜி நகர் பகுதியில் ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

தலைமை:
முனியாண்டி ஒன்றிய தலைவர் ,
முன்னிலை:
கதிர்வேல் ஒன்றிய செயலாளர்,
கொம்பன் ஒன்றிய துணை தலைவர் ,
வைகை செல்வன் ஒன்றிய இளைஞரணி செயலாளர் ,
அருந்ததி முத்து ஒன்றிய மாணவரணி செயலாளர்,
சிறப்பு அழைப்பாளர்கள்:
சோ.அருந்ததி அரசு மாநில அமைப்பு செயலாளர்,
காயல் முருகேசன் தொழிலாளர் பேரவை மாநில அமைப்பு செயலாளர்,
சபா தொல்காப்பியன் மாவட்ட துணை செயலாளர்,
செ.சந்தனம் மாவட்ட மாணவரணி செயலாளர்,
மற்றும் பொருப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
""""""""""""""""""""""""""""""""""""""""""""""
1, நவம்பர் 26 வீரமங்கை ராணி தோழர் நினைவு நாள் பொதுக்கூட்டத்திற்கு திருச்சிக்கு பெரும் திரளாக கலந்து கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.

2, திசம்பர் 17 நிறுவனர் அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தின் வருகையொட்டி ஸ்ரீவைகுண்டம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கொடி மற்றும் பெயர் பலகை திறப்பதென தீர்மானிக்கப்பட்டது.

3, திசம்பர் 18 சாதி ஒழிப்பு போராளி வள்ளியூர் மகாராசன் நினைவேந்தல் கூட்டத்திற்கு பெரும் திரளாக கலந்து கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.

4, ஸ்ரீவைகுண்டம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சாயர்புரத்திற்கு புதிய நகர பொறுப்பாளர்களை தேர்வு செய்து மாவட்ட ,மாநில தலைமைக்கு பரிந்துரைக்கப்பட்டது.

5, ஏப்ரல் 6 திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நடைபெற இருக்கிற "உழைக்கும் மக்கள் உரிமை மாநாட்டிற்கு" ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய சார்பாக 15 க்கும் மேற்பட்ட வாகனங்களில் செய்வதென தீர்மானிக்கப்பட்டது.

ஆதித்தமிழர் பேரவை
தூத்துக்குடி தெற்கு மாவட்டம்