அண்மையச்செய்திகள்

Tuesday 31 October 2017

*நவம்பர் 8 கறுப்பு நாள்* - தமிழகத்தில் முன்னெடுக்கும் தி.மு.க விற்கு ஆதித்தமிழர் பேரவை ஆதரவு.



*நவம்பர் 8 கறுப்பு நாள்* - தமிழகத்தில் முன்னெடுக்கும் தி.மு.க விற்கு ஆதித்தமிழர் பேரவை ஆதரவு.

*நவம்பர் 8 கறுப்பு நாள்*
பண மதிப்பிழப்பு செய்து இமாலய ஊழல் புரிந்த மக்கள் விரோத மோடி அரசின் பொருளாதாரத் தோல்வியை மக்களிடன் எடுத்துச் சொல்ல இந்திய அளவில் ஒருங்கிணைப்படும் போராட்டத்தை தமிழகத்தில் முன்னெடுக்கும் தி.மு.க விற்கு ஆதித்தமிழர் பேரவை ஆதரவு.
"""""""""""""""""""""""""""""""""""""
தலைவர் அதியமான் அறிவிப்பு.
"""""""""""""""""""""""""""""""""""""
கடந்த ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி மோடி அரசு பணமதிப்பிழப்பு முடிவை முன்னறிவிப்பின்றி அறிவித்தது. அதன் முதலாண்டு நிறைவு நாளை கறுப்பு நாளாக கடைபிடித்து, மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாடு மிகப்பெரிய பொருளாதார தோல்வியை சந்தித்து உள்ளது என, மக்களுக்கு எடுத்துச் சொல்ல தேசிய அளவில் காங்கிரஸ், இடசாரி உள்ளிட்ட 18 எதிர்க்கட்சிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பின் அடிப்படியில் நவம்பர் 8 ஆம் தேதி அன்று தமிழகத்தில் தி.மு.க தலைமை ஏற்று மாவட்டம் தோறும் கருப்புச்சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் என்று செயல்தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். இதை ஆதித்தமிழர் பேரவை வரவேற்கிறது. நடைபெறவுள்ள இந்த போராட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை தோழர்கள் பெரும் திரளாக பங்கேற்று போராட்டத்தை வலுவடையச் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

மோடி அரசின் பண மதிப்பிழப்பு அறிவிப்பால் தமது சொந்த பணத்தை வங்கியில் போட்டுவிட்டு அதை எடுப்பதற்காக வரிசையில் காத்திருந்ததில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்த செய்திகளும், ஏராளமான சிறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பை சந்தித்ததும், உள்நாட்டு மொத்த உற்பத்தியில் சுமார் 3 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதையும், ரிசர்வ் வங்கியே இப்போது ஒப்புக்கொண்டுள்ள நிலையில்,

கறுப்புப் பணத்தைப் பிடிப்பதற்காகத்தான் இந்த நடவடிக்கை என்றும், இதை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், பிரதமர் மோடி மிகவும் ஆவேசமாக முழங்கினார். ஆனால் கடந்த ஓராண்டில் கறுப்புப்பண முதலைகள் எவரையும் பாஜக அரசு கண்டுபிடிக்கவோ கைது செய்யவோ இல்லை, என்பதுதான் கடந்த ஓராண்டின் வரலாறு சொல்கிறது.

பழைய நோட்டுகளுக்குப் பதிலாக புதிய நோட்டுகளை மாற்றித்தரும் சட்டவிரோத செயல்களில் பாஜகவினர் பலர் ஈடுபட்ட செய்திகள்தான் அப்போது வெளிவந்து கொண்டே இருந்தது. சுதந்திர இந்திய வரலாற்றில் மோடி அரசின் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைதான் மிகப்பெரிய ஊழல் என்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

பொருளாதார சிந்தனையோ நாட்டு மக்கள் மீது அக்கறையோ இல்லாமல் கர்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக மோடி அரசு எடுத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் தோல்விக்காகவும், அதில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பலியானதற்காகவும், பிரதமர் மோடி அவர்கள் நாட்டு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும். என்று ஆதித்தமிழர் பேரவை வலியுறுத்துகிறது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பாதிப்புக்குள்ளான மக்களின் நிலை குறித்து பேச வேண்டிய எடப்பாடி பழனிச்சாமி அரசு, வாக்களித்த மக்களுக்கு துரோகமிழைத்து மோடி அரசிற்கு காவடி தூக்கும் பினாமி அரசாக செயல்பட்டு வரும் நிலையில், மோடி அரசின் பொருளாதார தோல்விகளை மக்களிடம் விரிவாக எடுத்துச்சொல்ல தி.மு.க தலைமையில் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் பங்கெடுப்பதோடு, மோடி அரசின் பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த போராட்டம் தமிழகம் மற்றும் இந்திய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று ஆதித்தமிழர் பேரவை விரும்புகிறது,

எனவே பேரவை தோழர்கள் அந்தந்த மாவட்டத்தில் தி.மு.க நடத்தும் போராட்டத்தில் பங்கேற்று போராட்டத்தை வலுவடையச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவண்
இரா.அதியமான்
நிறுவனர்/தலைவர்,
ஆதித்தமிழர் பேரவை.
29.10.2017 கோவை.



No comments:

Post a Comment