அண்மையச்செய்திகள்

Friday 29 September 2017

தமிழக காவல்துறையின் கடிவாளம் யார் கையில் உள்ளது.. எடப்பாடி அரசிற்கு ஆதித்தமிழர் பேரவை கேள்வி?

தமிழக காவல்துறையின் கடிவாளம் யார் கையில் உள்ளது.. எடப்பாடி அரசிற்கு ஆதித்தமிழர் பேரவை கேள்வி?
""""'""''''''''''''''"""""""''''''''''''''''''''''''''''
தமிழக அரசால் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் இருந்து விடுதலையான திருமுருகன்காந்தி மீண்டும் கைது செய்யப்பட்டிருப்பதாக வரும் தகல்களும்,

நெல்லை பணகுடி காவல் நிலையத்தில் பத்திரிக்கையாளர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை கண்டித்து போராட்டம் நடத்திய நெல்லை பத்திரிக்கையாளர்கள் மீது காவல்துறை கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி கைது செய்திருப்பது,  கட்டுப்பாடற்ற தமிழக அரசின் கையாலாகாத நிர்வாக முறையையே காட்டுகிறது. இதை ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கிறது.

சனநாயக முறையில் ஆர்ப்பாட்டம் செய்த பத்திரிக்கையாளர்களின் சட்டையை கிழித்து, செல்போனை உடைத்து மண்டையை பிளந்து, தனது சர்வாதிகாரப் போக்கை  சனநாயக தூண்களில் ஒன்றான பத்திரிக்கையாளர்கள் மீது காட்டிருப்பதும், மத்திய பா.ச.க அரசின் மக்கள் விரோத செயலை கண்டித்து போராடி வரும் திருமுருகன்காந்தி மீண்டும் கைது செய்யப்பட்டிருப்பதும், மத்திய மோடி அரசை திருப்தி படுத்த எடுக்கப்படிருக்கும் நடவடிக்கையாகவே தெரிய வருகிறது. மத்திய பா.ச.க அரசின் கைக்கூலியாக செயல்பட்டு தமிழக உரிமைகளை பறிகொடுப்பதோடு, அடக்குமுறை கொடுமைகளை ஏவும் தமிழக எடப்பாடி அரசின் மக்கள் விரோத போக்கை தமிழக மக்கள் இனியும் வேடிக்கை பார்க்க மாட்டார்கள்.

நெல்லை பத்திரிக்கையாளர்களை தாக்கிய காவல்துறையினர் மீது கிரிமினல் வழக்கு தொடுத்து, உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும், அவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை உடனே திரும்பப் பெறவேண்டும், காயம் அடைந்த பத்திரிக்கையாளர்களுக்கு உரிய சிகிச்சை அளித்திட வேண்டும் என்பதோடு,  திருமுருகன்காந்தியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் ஆதித்தமிழர் பேரவை தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது.

இவண்
இரா.அதியமான்,
நிறுவனர், ஆதித்தமிழர் பேரவை.
கோவை.. 29.9.2017

Wednesday 27 September 2017

அமெரிக்காவில் Ambedkar king study circle சார்பில் நடைபெறும் உலக கருத்தரங்கில் அய்யா அதியமான் கருத்துரையாற்றுகின்றார்

அமெரிக்காவில் san francisco மாகாணத்தின் California பல்கலைகழகத்தில் Ambedkar king study circle சார்பில் நடைபெறும் உலக கருத்தரங்கில் ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள் கலந்துக் கொண்டு "இந்திய சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்காய் போராடிவரும் ஆதித்தமிழர் பேரவை கடந்து வந்த பாதைகள் " என்ற தலைப்பில் Conference CALL மூலம் கருத்துரையாற்றுகின்றார்,
அதனை தொடர்ந்து கருத்தரங்கத்தில் கலந்து கொண்டர்வர்கள் கேட்கும் கேள்விக்கு பதிலளிக்கவிருக்கிறார்
நேரம்
India
September 30 - 2017
Time 7am to 8 am
USA
September 29 - 2017
PST (USA)
6.30pm to 7.30pm
CST (USA)
8.30pm to 9.30pm
EST (USA)
9.30pm to 10.30pm

தில்லி வாழ் அருந்ததியர்கள் அய்யா அதியமான் அவர்களுக்கு வாழ்த்து

தில்லி வாழ் அருந்ததியர்கள்!
"""""""""""""""""""""""""
👆👆நேற்று ஒட்டன்சத்திரத்தில் நம்முடைய ஒட்டுமொத்த அருந்ததியர்களின் தலைவன் அய்யா அதியமான் அவர்களின் தலைமையில் நடைபெற்ற தன்னாட்சி உரிமை விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு அருந்ததியர்களுக்கான 3 சதவீத உள்இட ஒதுக்கிட்டின் வயிலாக முதல் மருத்துவரானதைக் கருத்தில் கொண்டு அந்த இடஒதுக்கீட்டைப் பெறுவதற்கு அரும்பாடுபட்டு பெற்றுத்தந்த அந்த மாபெரும் தலைவண் அய்யா அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து மகிழ்வித்த செல்வி மருத்துவர் இலக்கியா அவர்களுக்கு உங்களுடைய எண்ணங்கள் நிறைவேறவும் சமுதாயத்தில் எதிர்காலத்தில் ஒரு மிக சிறந்த மருத்துவராக நீங்கள் வரவேணடும் எனவும் எங்களுடைய தில்லிவாழ் ஒட்டுமொத்த அருந்ததியர்களின் சார்பாகத் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் இந்த பெண்னைப்பார்த்தாவது மற்ற இளைஞர்கள் ஆதித்தமிழர் பேரவையைப்பற்றி புரிந்துகொண்டு இது நமக்கான அமைப்பு என்று எண்ணி அய்யா அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என உங்களைத் தாழ்மையோடுக் கேட்டுக்கொள்கிறேன்.
--தில்லி.. ஜெயவேல்.



நீலச்சட்டை அணிந்த கருஞ்சட்டைகளின் கூட்டம் இது! - பொதுச்செயலாளர் நாகராசன்

நேற்று நீலவேந்தன் வீரவணக்க நாளில் ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற
தமிழக தன்னாட்சி உரிமை
விளக்க பொதுக்கூட்டத்தில்
அய்யா அதியமான் அவர்கள்!
"என்னை வழிநத்தும் ஆதித்தமிழர்களே!" என பேச்சை தொடங்கியபோது இரவு 9.30, அவரது உரையின் நிறைவாக தமிழக மண்ணில் பாசக காலூன்ற ஆதித்தமிழர்கள் ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது, என முடிக்கும் போது மணி 10.30
இந்த இடைப்பட்ட ஒரு மணி நேரத்துக்குள்ளாக வேகமும் சாரமும் குறையாத எத்தனை செய்திகள், ஒட்டன்சத்திரப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களை மட்டுமல்ல காவல் துறையின் மனதையும் கலங்க வைத்தது அந்த உரையின் சாரம். மொத்தத்தில் திராவிடர் கழக தோழர் சொன்னது போல்.. நீலச்சட்டை  அணிந்த கருஞ்சட்டைகளின் கூட்டம் இது!
அய்யாவுடன் நாம் இருப்பதே! பெரும் #மகிழ்ச்சி
பெரும் #எழுச்சி.
(பொதுச்செயலாளர் அண்ணன் நாகராசன் அவர்களின் முகநூல் பதிவு)



Tuesday 26 September 2017

*சுதந்திர போராட்ட தியாகி வீரத்தாய் குயிலியின் 237 வது நினைவு நாளில் (செப்டம்பர் 30) சிவகங்கையில் அமைந்துள்ள வீரத்தாயின் நினைவிடத்திற்கு வீரவணக்கம் செலுத்த குடும்பம் குடும்பமாக அணிதிரள்வோம் வாரீர். -- அழைக்கிறது ஆதித்தமிழர் பேரவை சிவகங்கை மாவட்டம்*


தமிழக அரசே...! சிவகங்கை வீரத்தாய் வேலுநாச்சியார் மணிமண்டபத்தில் அமைந்துள்ள வீரமங்கை குயிலி அவர்களின் நினைவாக வைத்துள்ள நினைவுத்தூணை அகற்றி அதே இடத்தில் வீரமங்கை குயிலியின் முழு உருவ வெங்கலச்சிலை அமைத்திடு என்கிற கோரிக்கை முழக்கத்தோடு

*சுதந்திர போராட்ட தியாகி வீரத்தாய் குயிலியின் 237 வது நினைவு நாளில் (செப்டம்பர் 30) சிவகங்கையில் அமைந்துள்ள வீரத்தாயின் நினைவிடத்திற்கு வீரவணக்கம் செலுத்த குடும்பம் குடும்பமாக அணிதிரள்வோம் வாரீர். -- அழைக்கிறது ஆதித்தமிழர் பேரவை சிவகங்கை மாவட்டம்*
**********************
ஆங்கிலயேர்களை எதிர்த்து தமிழ் மண்ணில் நடைபெற்ற அந்நிய எதிர்ப்பு போராட்டத்தில் ஒண்டிவீரன்,பூலித்தேவன்,சுந்தரலிங்கம்,வீரபாண்டிய கட்டபொம்மன் ,போன்ற தியாகிகள் பட்டியலில் சிவகங்கை சீமையின் இராணி வேலுநாச்சியார் ,மருது பாண்டியர்கள் ,வீரத்தாய் குயிலி போன்றவர்களின் வீரம் செறிந்த வரலாறுகள் தமிழக மண்ணில் அழிக்க முடியாதது.

ஜெர்மனிக்கும் ஜப்பானுக்கும் நீர்மூழ்கி கப்பலில் நடைபெற்ற யுத்தத்தில் ஜப்பானிய வீரர்களின் தியாகமே தற்கொலை போராட்டத்தின் துவக்கமாக கருதப்படுகிறது. ஆனால் இரண்டாம் உலக போர் நடைபெறுவதற்கு 150 ஆண்டுகளுக்கு முன்னரே பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்து தமிழ்மண்ணில் நடைபெற்ற போர்களத்தில் தான் முதன் முதலாக "தற்கொலை போராளி" உருவானார்கள் என்பது நாம் அறியாதது.

அந்த ஈகைக்கு உரிய வீரமங்கையின் பெயர் "குயிலி" அவள் பெண் என்பதால் மட்டுமல்ல தாழ்த்தப்பட்ட அருந்ததியர் என்பதுவும் வரலாற்றை பக்கங்களில் அவள் வஞ்சிக்க பட்டிருக்கிறாள் என்பதை நமக்கு உணர்த்துகிறது.

1780ம் ஆண்டு வேலுநாச்சியார் எட்டு ஆண்டுகளுக்குப்பிறகு திப்புசுல்தான் உதவியுடன் ஆங்கிலேயரிடம் கையிலிருந்த சிவகங்கையை மீட்டதற்காக மதுரையில் இருந்து தனது போர்படையுடன் வெற்றிவாகை சூடி வந்தார். விஜயதசமி திருவிழா சிவகங்கையில் உள்ள இராஜராஜேஸ்வரி கோவிலில் பெண்கள் மட்டும் வழிபாட்டிற்காக அனுமதிக்கப்படுவர்.இதை சாதகமாக பயன்படுத்தி இராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலுக்குள் நுழைந்தார்கள் வேலுநாச்சியார் ,குயிலி தலைமையிலான உடையாள் படையினர் கைகளில் ஆயுதங்களோடு உள்ளே நுழைந்தனர்.போர் மூண்டது அரண்மனை வெளியில் மருது சகோதரர்கள் தாக்குதல் நடத்தினார்கள்.வேலுநாச்சியார்,குயிலி தாக்குதல்களை சற்றும் எதிர்பாராத ஆங்கில தளபதி பாஞ்சோர் என்ன நடக்கிறது என்பதை அறிய முடியாமல் விழி பிதுங்கி நின்றான். ஆனால் இந்த போர் இது வரை நடந்த தாக்குதல்களிலிருந்து மாறுபட்டிருந்தது. ஆங்கிலேயர்களின் நவீன ஆயுதங்களுக்கு முன்பு வேலுநாச்சியார் படை தாக்கு பிடிக்க முடியவில்லை. தமிழர் பக்கம் அழிவு அதிகமாகி கொண்டிருந்தது. அரண்மனையிலிருந்து , ஆயுத கிடங்குகளிலிருந்தும் மேலும் மேலும் ஆயுதங்கள் ஆங்கில படைக்குச் சென்று கொண்டிருந்தது. என்ன செய்வதென சிந்திக்க கூட முடியாத சூழலில் ஓர் உருவம் எரி நெய்யை ஊற்றி கொண்டு அரண்மனை ஆயத கிட்டங்கியில் குதித்தது.
மறுநிமிடமே ஆயுத கிட்டங்கி வெடித்து சிதறியது உடல்கள் அங்கம் அங்கமாக சிதறியது. அவ்வுருவம் சுக்கு நூறாகி போனது. ஆயுத கிட்டங்கியில் அழிப்பு வேலுநாச்சியாரின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது.ஆயிரக்கணக்கானோர் மண்ணில் மடிந்தார்கள். ஆங்கில தளபதி பாஞ்சோர் வேலுநாச்சியாரிடம் மன்னிப்பு கேட்டு புறமுதுகு காட்டி ஓடினான்.வேலுநாச்சியார் வெற்றி பெற்றதாக அறிவிக்க பட்டார்.வெற்றியை கொண்டாட தன் தளபதிகளெல்லாம் நெருங்கி கொண்டிருந்த பொழுது குயிலியை தேடினார் வேலுநாச்சியார். குயிலியை கண்டறியாத முடியாத அளவிற்கு உருத்தெரியாமல் மண்ணோடு மண்ணாகிப் போயிருந்தாள் குயிலி.
சிவகங்கை மண்ணை அந்நிய ஆதிக்கத்திலிருந்து விரட்டிட இராணி வேலுநாச்சியாரின் சபதம் நிறைவேற்றிட தன்னையே ஈந்து தற்கொலைப் போராளியாய் அழிந்து போன வீரமங்கை குயிலியின் வீரம் இந்த தலைமுறைக்கு எடுத்து சொல்லப்பட வேண்டும். உலகில் தற்கொலை போராளிகளுக்கான விதை தமிழ் மண்ணில் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் குயிலியால் விதைக்கப்பட்டுள்ளது.ஈழத்தில் கரும்புலிகளின் ஈடு இணையற்ற தியாகம் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் மீதான தியாக உணர்வை மென்மேலும் உயாத்தியது என்றால் மிகையாகாது.அதுபோல் வீரத்தாய் குயிலியின் ஈகமும் தமிழர்களின் தியாக உணர்வை பறை சாற்றுகிறது

தென்மாவட்டத்தின் தியாகி இம்மானுவேல் சேகரனின் படுகொலைக்கு பின்னர் தேவேந்திர மக்கள் எழுச்சியுற்றனர்.
ஆனால் தன் சமூகம் இழிவிலிருந்து விடுதலை பெற வேண்டும் என எந்த சமூகத்திலும் நடைபெறாத உயிர் தியாகம் அருந்ததியர் சமூகத்தில் அதுவும் ஆதித்தமிழர் பேரவையின் மாநில பொருளாளர் பழ.நீலவேந்தன் (வழக்கறிஞர்) அவர்களும் மாநில மகளிரணிச் செயலாளர் திருச்சி ஆ.இராணி மற்றும் திருப்பூர் மாவட்ட துணைத்தலைவர் மகேசுவரன் அவர்களும் அருந்ததிய மக்களின் விடுதலைக்கு அடித்தளமாக இருக்கும் அருந்ததியர் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என தங்களையே தீக்கிரையாக்கி உயிர் நீத்த பின்பும் கூட இன்னும் எம்மக்கள் விழிப்படையாமல் இருப்பது நமது களப்பணியை இன்னும் வீரியத்துடன் செய்லபட வேண்டுமென்பதை உணர்த்தி நிற்கிறது.
மேலும் இச்சமூகத்தில் எல்.சி.குருசாமி அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு 1923இல் தான் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது வறுமையின் காரணமாக கல்வி கற்க முடியாத நிலையில் இருந்த குழந்தைகள் கல்வி கற்பதற்காக பல இரவு பாட சாலைகளை நிறுவினார்.மேலும் இக்குழந்தைகள் கல்வி கற்பதற்காக மத்திய உணவு திட்டத்திற்கும்,ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்க வேண்டும் முதன் முதலில் சட்டசபையில் கோரிக்கை வைத்தவர் எல்.சி.குருசாமி. அவர்கள்.

அவ்வழி தோன்றல் தான் ஆதித்தமிழர் பேரவை நிறுவன தலைவர் அய்யா அதியமான் அவர்கள் 1994-ல் தொடங்கப்பட்ட ஆதித்தமிழர் பேரவை பல போராட்டங்களும் ,மாநாடுகளும் நடத்தியதின் அடிப்படையில் தான் 2009-ம் ஆண்டு அருந்ததியர்களுக்கான 3% இட ஒதுக்கீட்டை வாங்கி கொடுத்தது.இவ்வாறு அருந்ததியர் வாழ்வில் உயர் நிலை வெளிச்சத்தை ஏற்படுத்தியவர் அய்யா அதியமான் அவர்கள் வழியில் நமது உரிமைகளை வெல்வோம். வென்றெடுப்போம்.

ஆதித்தமிழர்களே!!! ஆதித்தமிழச்சிகள்!! வீரத்தாய் குயிலி நினைவு நாளில் குடும்பம் குடும்பமாக ஒன்றுபடுவோம்!!! வாரீர்.... வாரீர்

புரட்சியாளர் அம்பேத்கார் வழியில் புரட்சி செய்வோம் !!!

தந்தை பெரியார் வழியில் கலகக்காரர்களாவோம் !!!

பேராசான் மார்க்ஸ் போல் தத்துவங்கள் படைப்போம் !!
மேதகு பிரபாகரன் போல் போர்க்குணம் கொண்ட போராளியாவோம் !!

ஆதித்தமிழர்களின் விடுதலை முகவரி தலைவர் அய்யா அதியமான் அவர்கள் வழியில் அமைப்பாவோம்
"ஆதித்தமிழர்பேரவை வலுப்படுத்துவோம்,ஆதித்தமிழர்களின் விடுதலையை விரைவாக்குவோம்"
_______
ஆதித்தமிழர் பேரவை சிவகங்கை மாவட்டம்




நெருப்புதமிழன் நீலவேந்தன் நினைவேந்தல் நிகழ்வுகள் " செப்டம்பர் 26 "

அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டை காக்கவும் உயர்த்தி தர கோரியும் தீக்குளித்து உயிர் நீத்த நெருப்புத்தமிழன் #நீலவேந்தன் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாளில் அறிவாசான் அய்யா #அதியமான் அவர்கள் தலைமையில் திருப்பூரில் நீலவேந்தன் நினைவிடத்தில் நீலச்சட்டை பட்டாளத்தோடு வீரவணக்கம் செலுத்தினார் பின்பு மாலை திண்டுக்கல் ஒட்டன்சத்திரத்தில்
தமிழக தன்னாட்சி உரிமை விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த அய்யா அதியமான் அவர்களுக்கு திண்டுக்கல் மாவட்ட நீலச்சட்டை தோழர்கள் சிறப்பான எழுச்சி மிகு வரவேற்பளித்தனர் தொடர்ந்து #டாக்டர் இலக்கியா அவர்கள் அய்யாவிற்கு தனது குடும்பத்துடன் வந்து மரியாதை செலுத்தினார் , தொடர்ந்து அய்யா அதியமான் அவர்கள் உரிமை விளக்கவுரை ஆற்றினார் இந்நிகழ்வில் நீலச்சட்டை இராணுவமும் மக்களும் மிகப்பெரிய எழுச்சியுடன் கலந்து கொண்டு தலைமுறையை விடுதலை தலைமுறையாக உருவாக்கியே தீருவோம் என முழக்கமிட்டும் தமிழர்களின் தன்னாட்சி உரிமையை யாருக்கும் விட்டுக்கொடுக்கமாட்டோம் என்று சபதமேற்றனர்

























அமராவதி ஆற்றில் சாயகழிவு நீர் வெளியேற்றப்படுவதை தடுக்க நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில்ஆதித்தமிழர் பேரவை

உண்ணாவிரத போராட்டம்
""""""""""""""""""""""""""""""""""""""""""""

கரூர் மாவட்டம்
_________________



சட்ட விரோதமாக அமராவதி ஆற்றில்
சாயகழிவு நீர் வெளியேற்றப்படுவதை
தடுக்க நடவடிக்கை எடுக்காத
மாசு கட்டுப்பாடு வாரியத்தை கண்டித்து
அனைத்து சமூக நல இயக்கம் சார்பில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில்
ஆதித்தமிழர் பேரவை சார்பில் கலந்து கொண்டு கண்டன உரை....

இரா.முல்லையரசு
மாவட்ட செயலாளர்
கரூர் மாவட்டம்....