அண்மையச்செய்திகள்

Monday 31 July 2017

மக்கள் குடியிருப்புகளை அகற்ற நினைக்கும் அரசை கண்டித்து மக்களுக்கு பேரவையினர் ஆலோசனை

29/7/2017 இரவு 7 மணியளவில் ஈரோடு ஒடைபகுதி..
ஈரோடை மாநகரில் ஒடை புறம்போக்கு ஆக்கிரமிப்பு அகற்றம் என்கிற பெயரில் பல நூறு ஆண்டுகள் மாநகரத்தின் மையத்தில் வாழும் பல்லாயிரக்கணக்கான மக்களை மாநகரத்தின் மையத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் குடியமர்ந்த திட்டமிடும் தமிழக அரசு.
ஈரோடு மாநகரத்தில் சென்ட்ரல் தியேட்டர் பின்புறம் ஓடை பகுதியில் உள்ள 300 குடும்பங்களை தமிழக அரசு நீங்கள் ஒடை புறம்போக்கு நிலத்தில் உங்கள் குடியிருப்புகள் உள்ளது ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், எனவும் விரைவில் மாநகர எல்லையில் உள்ள சித்தோடு பகுதிக்கு செல்லுங்கள் என்று அரசு அதிகாரிகள் நோட்டிஸ் வழங்கியுள்ளனர்..
இந்நிலையில் மாநகர மாவட்டம் சார்பாக ஆதித்தமிழர் பேரவையின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மக்களுடன் ஆலோசிக்கப்பட்டது..
இந்நிகழ்வில் மாநகர் மாவட்ட செயலாளர் .பழ. வீரக்குமார் மாநகர் மாவட்டத் தலைவர். இரா. இராமகிருஷ்ணன் .மாநகர் மாவட்ட நிதி செயலாளர் சிவ .ராதா.மாநில ஊடக பிரிவு செயலாளர் இரா .வீரவேந்தன்.ஆகியோர் கலந்து கொண்டனர்..
Comment

No comments:

Post a Comment