அண்மையச்செய்திகள்

Wednesday 26 July 2017

இன்று (ஜீலை 25) சமூக நீதி மீட்பர் தாத்தா எச்.எம்.ஜெகநாதன் அவர்களின் நினைவு தினம்

இன்று (ஜீலை 25) சமூக நீதி மீட்பர் தாத்தா எச்.எம்.ஜெகநாதன் அவர்களின் நினைவு தினம்
----------------------------------------
அய்யா ஜெகநாதன் 25.10.1894 ல் சென்னையில் பிறந்தார். தந்தையின் பெயர் முனியசாமி. தந்தையில் பிரிட்டீஷ் அரசாங்கத்திடம் ராணுவத் தளவாடங்கள் (தோல் பொருட்கள்) தயார் செய்து தரும் ஒப்பந்ததாரர்.
ஜெகநாதன் அவர்கள் கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் நீதிக் கட்சியில் இணைந்து சமூகப் பணிகளைத் தொடர்ந்தார். பின்னர் 1920 ல் அய்யா எல் சி குருசாமி அவர்களுடன் இணைந்து சென்னை மாகாண அருந்ததியர் சங்கத்தினை நிறுவி அதன் தலைவராக பொறுப்பு வகித்தார். சிறந்த கல்வியாளர் ;பகுத்தறிவாளர்.
ஒடுக்கப்பட்ட நம் சமூக மக்களின் விடுதலைக்கு கல்வியே சிறந்த ஆயுதம் என்பதை உணர்ந்த அய்யா தலைமையிலான அருந்ததியர் சங்கம இரவு பாடசாலைகளை சென்னையில் ஒட்டேரி, ராயபுரம், பெரம்பூர் - அருந்ததியர் புரம், புளியந்தோப்பு, பெரியமேடு, மக்டூன் செரிப் தெரு ஆகிய இடங்களில 1920ல் நிறுவி இருபதாண்டுகளுக்கும் மேலாக நடத்தியது. இப்பள்ளிகளில் அருந்ததியர் குழந்தைகள் மட்டுமல்லாமல் அனைத்து தாழ்த்தப்பட்ட சமூகக் குழந்தைகளும் பயின்றனர். பிற்காலத்தில் இப்பள்ளிகளை அரசே எடுத்து நடத்தியது. இதுமட்டுமல்லாமல், நம் தலைவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களின் மீதான வன்கொடுமைகளை எதிர்த்து களத்தில் நின்றார்கள்.
1932 ம் வருடம் எரவாட சிறையில் பாபாசாகேப் அம்பேத்கரும் காந்தியும் பூனா ஒப்பந்தம் செய்த போது அய்யா ஜெகநாதன் அவர்கள் அம்பேத்கருடன் இருந்து அவ்வொப்பந்தத்தில் கையெழுத்திட்டார். பிரிட்டிஷ் இந்திய அரசின் வாக்காளர் வரைவுக்குழுவிற்கு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வாக்குரிமை கோரி கோரிக்கை வைத்தார். ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளின் குரலாக"ஜெயபேரிகை "என்ற இதழை நடத்தினார்.
சுதந்திர இந்தியாவின் முதல் அருந்ததியர் சட்டமன்ற உறுப்பினாராக வேலூர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அப்போதைய தமிழக முதல்வர் ராஜாஜி அவர்கள் குலக்கல்வி முறையை அறிமுகம் செய்த போது சட்டமன்றத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக இத்திட்டத்தையும், முதல்வரையும் வன்மையாக கண்டித்தார்.
ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாகவும், சமூக நீதிக்காகவும் வாழ்வை அர்பணித்த தாத்தா அவர்கள் ஜூலை 25, 1966 ல் இவ்வுலகை விட்டு மறைந்தார்.
# தாத்தா அவர்களுக்கு வீரவணக்கம்.
..
LikeShow more reactions
Comment

No comments:

Post a Comment