அண்மையச்செய்திகள்

Friday 26 May 2017

கொல்லிப்பானையில் மனுவை வைத்து நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதித்தமிழர் பேரவையினர் நூதன போராட்டம்


நெல்லை மாநகரில் பாளை உழவர் சந்தை,பேட்டை எம்.ஜி.ஆர் நகர்,மற்றும் டவுன் மாடத்தெருவில் உள்ள மதுபானக்கடைகளை அகற்ற வலியுறுத்தி ஆதித்தமிழர் பேரவை சார்பிலும் பொதுமக்கள் சார்பிலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது கடந்த 4-5-17 அன்று மதுவை தரையில் கொட்டி ஆதித்தமிழர் பேரவையினர் போராட்டம் நடத்தினர். இன்றும் அதே கோரிக்கைகளை வலியுறுத்தி கொல்லிபானையில் மனுவை வைத்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டத்தை ஆதித்தமிழர் பேரவை சார்பில் நடத்தினர் .

மாவட்ட செயலாளர் கலைக்கண்ணன் கூறியதாவது
பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளில் மக்களுக்கு பெரும் தொந்தரவாகவும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பல்வேறு சிரமங்களையும் ஏற்படுத்தும் மதுபானக்கடைகளை அகற்ற வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்களும் வன்முறைசம்பவங்களும் கடைகள் உடைக்கப்படுவது போன்ற சம்பவங்கள் அன்றாடம் நடந்து வருகிறது...
நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது
தற்போது நெல்லை மாநகரில் உழவர் சந்தை ரயில்வே கேட் அருகிலும் பேட்டையில் மக்கள் குடியிருப்பு அதிகம் உள்ள எம்.ஜி.ஆர் நகர் பகுதியிலும்
டவுனில் மக்கள் குடியிருப்பு பகுதியான மாடத்தெருவிலும் உள்ள மதுபான கடைகளால் மக்களுக்கும் பெண்கள் குழந்தைகள் என அனைவருக்கும் சிரமங்கள் ஏற்படுவதால் குடியிருப்பு பகுதிகளில் உள்ள மதுபானகடைகளை அகற்ற வேண்டும்
மக்களின் நலனை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கவும் காலதாமதம் ஏற்படுமாயின் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நடக்கும் போராட்டங்களை போல நெல்லை மாநகரத்திலும் போராட்டம் நடைபெற நெல்லை மாவட்ட#ஆட்சித்தலைவர் காரணமாய் அமைய வேண்டாம் என ஆதித்தமிழர் பேரவை சார்பில் அன்போடு வேண்டுகோள் விடுக்கிறோம் என கூறினார்
26-5-17

காணொளியை காண இங்கு சொடுக்கவம்







No comments:

Post a Comment