அண்மையச்செய்திகள்

Wednesday 31 May 2017

தருமபுரியில் அரசு மற்றும் குண்டர்களால் அப்புறப்படுத்த பட்ட அம்பேத்கர் சிலையை! வெங்கலச் சிலையாக நிறுவ வீட்டிற்கு ஒரு வெங்கலப் பானையைக் கொடுத்த அருந்ததியப் பெண்கள்!

தருமபுரியில் அரசு மற்றும் குண்டர்களால் அப்புறப்படுத்த பட்ட அம்பேத்கர் சிலையை! வெங்கலச் சிலையாக நிறுவ வீட்டிற்கு ஒரு வெங்கலப் பானையைக் கொடுத்த அருந்ததியப் பெண்கள்!
"""""""""""""""""""
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி ஒன்றியம், கடத்தூர் ஊராட்சி தாதனூர் கிராம அருந்ததியர் மக்கள் தங்களது பகுதியில் அம்பேத்கர் சிலையை (சிமெண்டாலானது) நிறுவியுள்ளனர். இவற்றை கண்ட ஆதிக்க சாதியினர் காவல் துறையை தூண்டிவிட்டு அரசதிகாரிகள் மூலம் 25.05.2017 அன்று இரவு 12.மணிக்கு மின்சாரத் தடை ஏற்படுத்தி சிலையை இரவோடு இரவாக அகற்றியுள்ளனர். நீதிகேட்ட ஊர் பொதுமக்கள் பெண்கள் & ஆண்கள் என அனைவரையும் அடித்து உதைத்து துன்புறுத்தி சக்கிலியனுக்கெல்லாம் அம்பேத்கர் சிலை கேக்குதா என்று இழிவாக பேசி அவமதித்துள்ளனர்.

இடிக்க வந்த JCB இயந்திரத்துக்கு முன் படுத்து தடுக்க முற்பட்ட சிறுவனை காவல்துறை அதிகாரி

தொடர்புக்கு ஒருவன் பூட்ஸ் காலால் மிதித்து தள்ளியுள்ளான்.

தகவலறிந்த தருமபுரி மாவட்ட ஆதித்தமிழர் பேரவை நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மக்களை ஒருமுகபடுத்தி, மீண்டும் அதே இடத்தில் அம்பேத்கர் சிலையை நிறுவ அய்யா அதியமான் ஒப்புதலோடு எல்லா முயற்சிகளையும் எடுக்கலாம் என்று கூறிய போது.

சிமெண்ட் சிலை என்பதால்தானே எடுத்தார்கள், வெங்கலச்சிலை வைத்தால் என்ன செய்ய முடியும் என்று! தம்மை தலைநிமிர வைத்த தலைவரின் சிலையை மீண்டும் நிறுவ வீட்டிற்கு ஒரு வெங்கலப் பானையை தருகிறோம் என்று கூறி அருந்ததியப் பெண்கள் தங்கள் வீட்டிலிருந்து ஒரு வெங்கலப் பானையை கொடுத்தனர்.

புரட்சியாளரின் சிலையை அப்புறப்படுத்திய அதிகாரத் திமிர் கொண்ட அரசதிகாரிகளுக்கும் ஆதிக்க வர்க்கத்திற்கும் பதிலடி கொடுக்க அம்பேத்கர் சிலையை நிறுவ ஆயத்தமாவோம்.

சிவன் என்ற சித்தார்த்தன்
மாவட்ட செயலாளர்
9894252620




No comments:

Post a Comment