அண்மையச்செய்திகள்

Monday 29 May 2017

மே17 இயக்கத்தைச் சார்ந்த திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் குண்டர் சட்டத்தில் கைது: ஆதித்தமிழர் பேரவை வண்மையாக கண்டிக்கிறது.

மே17 இயக்கத்தைச் சார்ந்த திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் குண்டர் சட்டத்தில் கைது:
ஆதித்தமிழர் பேரவை வண்மையாக கண்டிக்கிறது.
'''''''''"""""""""""""
ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா அதியமான் அறிக்கை.
மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன் உள்ளிட்டோரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தமிழகக் காவல்துறை கைது செய்திருக்கிறது.
கடந்த மே21 இலங்கை முல்லிவாய்க்கால் இனஅழிப்பு சம்பவத்தில் பலியான தமிழகர்களுக்காக நினைவேந்தல் கூட்டம் நடத்துவதற்கு முறையான அனுமதி கோரியுள்ளனர், அதற்கு தமிழக காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டதால் அரசின் தடையை மீறி கூட்டம் நடத்த முற்பட்டதாக கூறி ஏற்கெனவே உள்ள வழக்குகளை இணைத்து திருமுருகன் உள்ளிட்டோர் மீது குண்டர் சட்டத்தை ஏவியுள்ளது.
தடையை மீறி தமிழகத்தில் தமிழ் மக்களுக்காக ஒரு கூட்டம் நடத்ததுவதற்கு தடைவிதித்து குண்டர் சட்டத்தை ஏவி கைது செய்திருப்பது வேதனைக்குரியது, வெக்கக் கேடானது, தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்போரின் குரல்வலையை நசுக்கும் செயலில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.
பா.ஜ.க ஆளாத மாநிலம் பலவற்றில் மாநில உரிமைகள் மீது மத்திய அரசு தலையீடு செய்வதை எதிர்த்து போராட்டங்கள் நடைபெறுகின்ற போது, தனது மாநில உரிமைகளை மத்திய அரசின் காலடியில் போட்டுவிட்டு மண்டியிட்டுக் கிடக்கும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி அவர்கள் மத்திய பாஜகவின் அழுத்தத்திற்கு ஆடும் பொம்மையாக தனது ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதை திருமுருகன் கைது வெட்டவெளிச்சமாக்கி உள்ளது.
வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்யாமல், மே.17 இயக்க தோழர்களான திருமுருகன், டைசன் மற்றும் இளமாறன் மீதான குண்டர் சட்டத்தை ரத்துசெய்து உடனடியாக அனைவரையும் விடுதலை செய்ய வேண்டுமென ஆதித்தமிழர் பேரவை சார்பில் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
இவண்
இரா.அதியமான்
நிறுவனர், ஆதித்தமிழர் பேரவை.
29.5.2017

No comments:

Post a Comment