அண்மையச்செய்திகள்

Wednesday 31 May 2017

தருமபுரியில் அரசு மற்றும் குண்டர்களால் அப்புறப்படுத்த பட்ட அம்பேத்கர் சிலையை! வெங்கலச் சிலையாக நிறுவ வீட்டிற்கு ஒரு வெங்கலப் பானையைக் கொடுத்த அருந்ததியப் பெண்கள்!

தருமபுரியில் அரசு மற்றும் குண்டர்களால் அப்புறப்படுத்த பட்ட அம்பேத்கர் சிலையை! வெங்கலச் சிலையாக நிறுவ வீட்டிற்கு ஒரு வெங்கலப் பானையைக் கொடுத்த அருந்ததியப் பெண்கள்!
"""""""""""""""""""
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி ஒன்றியம், கடத்தூர் ஊராட்சி தாதனூர் கிராம அருந்ததியர் மக்கள் தங்களது பகுதியில் அம்பேத்கர் சிலையை (சிமெண்டாலானது) நிறுவியுள்ளனர். இவற்றை கண்ட ஆதிக்க சாதியினர் காவல் துறையை தூண்டிவிட்டு அரசதிகாரிகள் மூலம் 25.05.2017 அன்று இரவு 12.மணிக்கு மின்சாரத் தடை ஏற்படுத்தி சிலையை இரவோடு இரவாக அகற்றியுள்ளனர். நீதிகேட்ட ஊர் பொதுமக்கள் பெண்கள் & ஆண்கள் என அனைவரையும் அடித்து உதைத்து துன்புறுத்தி சக்கிலியனுக்கெல்லாம் அம்பேத்கர் சிலை கேக்குதா என்று இழிவாக பேசி அவமதித்துள்ளனர்.

இடிக்க வந்த JCB இயந்திரத்துக்கு முன் படுத்து தடுக்க முற்பட்ட சிறுவனை காவல்துறை அதிகாரி

தொடர்புக்கு ஒருவன் பூட்ஸ் காலால் மிதித்து தள்ளியுள்ளான்.

தகவலறிந்த தருமபுரி மாவட்ட ஆதித்தமிழர் பேரவை நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மக்களை ஒருமுகபடுத்தி, மீண்டும் அதே இடத்தில் அம்பேத்கர் சிலையை நிறுவ அய்யா அதியமான் ஒப்புதலோடு எல்லா முயற்சிகளையும் எடுக்கலாம் என்று கூறிய போது.

சிமெண்ட் சிலை என்பதால்தானே எடுத்தார்கள், வெங்கலச்சிலை வைத்தால் என்ன செய்ய முடியும் என்று! தம்மை தலைநிமிர வைத்த தலைவரின் சிலையை மீண்டும் நிறுவ வீட்டிற்கு ஒரு வெங்கலப் பானையை தருகிறோம் என்று கூறி அருந்ததியப் பெண்கள் தங்கள் வீட்டிலிருந்து ஒரு வெங்கலப் பானையை கொடுத்தனர்.

புரட்சியாளரின் சிலையை அப்புறப்படுத்திய அதிகாரத் திமிர் கொண்ட அரசதிகாரிகளுக்கும் ஆதிக்க வர்க்கத்திற்கும் பதிலடி கொடுக்க அம்பேத்கர் சிலையை நிறுவ ஆயத்தமாவோம்.

சிவன் என்ற சித்தார்த்தன்
மாவட்ட செயலாளர்
9894252620




சென்னை ஐ.ஐ.டி. மாணவர் மீதான கொலைவெறித் தாக்குதலை ஆதித்தமிழர் பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது.-- நிறுவனர் அய்யா அதியமான் கண்டனம்

சென்னை ஐ.ஐ.டி. மாணவர் மீதான கொலைவெறித் தாக்குதலை ஆதித்தமிழர் பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது.
""""""""""""""""""""
நிறுவனர் அய்யா அதியமான் கண்டனம்
சென்னை ஐ.ஐ.டியில் மாட்டிறைச்சி விழாவிற்கு ஏற்பாடு செய்த
PhD, ஆய்வு மாணவர் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தின் செயல் பாட்டாளர் சூரஜ் பார்ப்பனிய ஏபிவிபி ஆதரவு மாணவர்களால் திட்டமிட்டு கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
இப்படி மாணவர் மத்தியில் மோதலை உருவாக்க திட்டமிடும் பார்பன பயங்கரவாதிகளை ஆதித்தமிழர் பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது.

மாட்டிறைச்சிக்கு தடைவிதித்து தாழ்த்தப்பட்ட இசுலாமிய பிற்படுத்தப்பட்ட உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தையும், உணவு உரிமையையும் பறித்திடும் நோக்கில் அறிவிப்பு ஆணை வெளியிட்டிருக்கும் மத்திய பா.ச.க மோடி அரசிற்கு எதிராக நாடெங்கும் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கும் சூழலில், ஐ.ஐ.டி மாணவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது மேலும் தாக்குதல் நடத்துவோம் என்றும் பார்ப்பனத் திமிரோடு கூறியிருக்கும் ஏபிவிபி மாணவ அமைப்பினரின் செயல் என்பது.
வட மாநிலங்களில் பசுவதை தடுப்பு என்ற பெயரில் நடந்தேறிய பல வன்செயல்களை தமிழகத்திலும் அரங்கேற்ற திட்டமிட்டிருப்பதாகவே தெரிய வருகிறது. இந்த கொலைவெறிச் செயலுக்கு காரணமான பார்ப்பன வெறிகொண்ட மாணவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளவேண்டும்.
தாக்குதலுக்கு ஆளாகி கண் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர் சூரஜ் க்கு உயர் மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்வதோடு,
மாணவர் மீதான இத்தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு, கேரளமுதல்வர் கடிதம் எழுதியிருப்பது பா.ச.க விற்கு காவடிதூக்குக் எடப்பாடியின் கையாலாகாதத் தனத்தையே காட்டுகிறது, இப்படி மோடிக்கு காவடி தூக்கும் வேலையை மட்டுமே தமிழக அரசு செய்து கொண்டிருப்பதால்தான் இதைப்போன்ற அண்டை மாநில முதல்வரிடம் இருந்து ஆலோசனைக் கடிதம் வருகிறது,
நாடே தங்களை பற்றிய நிலையை அறிந்திருக்கும் போது தமிழக மக்கள் அறியாமல் இல்லை, இதேநிலை இப்படியே நீடிக்குமே ஆனால் எப்போதும் போல் அமைதியான வழியில் தமிழக மக்கள் போராடுவார்கள் என்று நினைக்க வேண்டாம் என்பதை எடப்பாடி அரசிற்கு எச்சரிக்கையாக சொல்வதோடு,
இனிமேலும் தமிழக அரசு மவுனம் காக்காமல்,
மோடிக்கு பயந்து மாட்டிறைச்சிக்கான தடை விடயத்தில் அமைதிகாப்பதுபோல் மாணவர் தாக்குதலிலும் அமைதிகாக்காமல் தமிழக காவல்துறைக்கு உத்தரவிட்டு பார்பனிய காவி பயங்கரவாதிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என தமிழக அரசை ஆதித்தமிழர் பேரவை வலியுறுத்துகிறது.
இவண்
இரா.அதியமான்
நிறுவனர், ஆதித்தமிழர் பேரவை.
தலைமையகம் கோவை
31.5.2017


Monday 29 May 2017

மே17 இயக்கத்தைச் சார்ந்த திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் குண்டர் சட்டத்தில் கைது: ஆதித்தமிழர் பேரவை வண்மையாக கண்டிக்கிறது.

மே17 இயக்கத்தைச் சார்ந்த திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் குண்டர் சட்டத்தில் கைது:
ஆதித்தமிழர் பேரவை வண்மையாக கண்டிக்கிறது.
'''''''''"""""""""""""
ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா அதியமான் அறிக்கை.
மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன் உள்ளிட்டோரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தமிழகக் காவல்துறை கைது செய்திருக்கிறது.
கடந்த மே21 இலங்கை முல்லிவாய்க்கால் இனஅழிப்பு சம்பவத்தில் பலியான தமிழகர்களுக்காக நினைவேந்தல் கூட்டம் நடத்துவதற்கு முறையான அனுமதி கோரியுள்ளனர், அதற்கு தமிழக காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டதால் அரசின் தடையை மீறி கூட்டம் நடத்த முற்பட்டதாக கூறி ஏற்கெனவே உள்ள வழக்குகளை இணைத்து திருமுருகன் உள்ளிட்டோர் மீது குண்டர் சட்டத்தை ஏவியுள்ளது.
தடையை மீறி தமிழகத்தில் தமிழ் மக்களுக்காக ஒரு கூட்டம் நடத்ததுவதற்கு தடைவிதித்து குண்டர் சட்டத்தை ஏவி கைது செய்திருப்பது வேதனைக்குரியது, வெக்கக் கேடானது, தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்போரின் குரல்வலையை நசுக்கும் செயலில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.
பா.ஜ.க ஆளாத மாநிலம் பலவற்றில் மாநில உரிமைகள் மீது மத்திய அரசு தலையீடு செய்வதை எதிர்த்து போராட்டங்கள் நடைபெறுகின்ற போது, தனது மாநில உரிமைகளை மத்திய அரசின் காலடியில் போட்டுவிட்டு மண்டியிட்டுக் கிடக்கும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி அவர்கள் மத்திய பாஜகவின் அழுத்தத்திற்கு ஆடும் பொம்மையாக தனது ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதை திருமுருகன் கைது வெட்டவெளிச்சமாக்கி உள்ளது.
வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்யாமல், மே.17 இயக்க தோழர்களான திருமுருகன், டைசன் மற்றும் இளமாறன் மீதான குண்டர் சட்டத்தை ரத்துசெய்து உடனடியாக அனைவரையும் விடுதலை செய்ய வேண்டுமென ஆதித்தமிழர் பேரவை சார்பில் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
இவண்
இரா.அதியமான்
நிறுவனர், ஆதித்தமிழர் பேரவை.
29.5.2017

பத்து பன்னிரென்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு நேற்று சங்கரன் கோவிலில் பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது..

ஆதித்தமிழர் பேரவை நெல்லை கிழக்கு மாவட்டம் சார்பில் பத்து பன்னிரென்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு நேற்று சங்கரன் கோவிலில் பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது..





 

Sunday 28 May 2017

அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டை உயர்த்தி தர கோரி தீக்குளித்து உயிர்நீத்த மகேசுவரனின் வீரவணக்க பொதுக்கூட்டம் திருப்பூர் வாவிபாளையதில் நடைபெற்றது.


 அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டை 6 சதவீதமாக உயர்த்த வலியுறுத்தி திருப்பூர் பூங்கா சாலையில் கடந்த 12.4.2017 அன்று தீக்குளித்து உயிர் ஈகம் செய்திட்ட திருப்பூர் மாவட்ட துணைத்தலைவர் வாவிபாளையம் மாவீரன்.மகேசுவரன் நினைவேந்தல் மற்றும் வீரவணக்க பொதுக்கூட்டம் நேற்று 28.5.2017 மாலை 6 மணிக்கு வாவிபாளையதில் நடைபெற்றது. முன்னதாக மாலை 4.30 மணியளவில் அவர் உயிர் தியாகம் செய்திட்ட பூங்கா சாலையில் பேரவை நிறுவனர்/தலைவர் அய்யா அதியமான் தலைமையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தீர்மானம்.1
"""""""""""""""""
இரங்கல் தீர்மானம்
""""""""'''''''''"''''''''''''''''''''"'''
சமூகநீதி அடிப்படையில் அருந்ததியர் மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கும், 3 சதவீத உள் இடஒதுக்கீட்டை இவர்களது சமூகநிலைக்கும் மக்கள் தொகைக்கும் ஏற்றவாறு 6 சதவீதமாக உயர்த்தி வழங்கிட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி உயிர் ஈகம் செய்திட்ட பேரவை திருப்பூர் மாவட்ட துணைத்தலைவர் தோழர் வாவிபாளையம் மகேசுவரன் அவர்களுக்கும், பேரவை மேனாள் மாநில நிதிச்செயலாளர் தோழர் வழக்கறிஞர் நீலவேந்தன் மற்றும் பேரவை மேனாள் மாநில மகளிரணிச் செயலாளர் தோழர் திருச்சி ராணி அவர்களுக்கும், இந்த கூட்டம் தனது இரங்கலையும் வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம்.2
"""""""""""""'''''
மாட்டுக்கறிக்கு விதித்திருக்கும் தடைக்கு எதிரான தீர்மானம்
"""""''''''''''''''''''''''''''''''''''''''
பசுவதை தடைச்சட்டம் இந்தியா முழுமைக்கும் கொண்டுவரப்பட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் மோடி ஆட்சிக்கு பிறப்பித்த ஆணையை அப்படியே ஏற்று மாநில அரசுகளை கலந்து ஆலோசிக்காமலேயே மத்திய அரசு சுற்றுச்சூழல் துறை வழியாக சந்தைகளில் கால்நடைகளை இறைச்சிக்காக விற்பதற்கு தடை போட்டு விட்டது.
பசு மாடு மட்டுமல்ல காளை, எருமை, கன்றுக்குட்டி, கறவை ஒட்டகம் உள்ளிட்ட அனைத்து கால்நடைகளையும் இறைச்சிக்காக இனி சந்தைகளில் இந்தியா முழுவதும் விற்கக்கூடாதாம்.

சந்தைகளில் கால்நடைகளை விற்றால் விவசாயிகள் இறைச்சிக்காக விற்கவில்லை என்று எழுத்துப்பூர்வமாக உறுதி மொழி தரவேண்டுமாம்.

வாங்குவோர் விற்போர் இருவரும் நிலத்தின் உரிமைப்பத்திரம், விவசாயி என்பதற்கான அடையாள சான்று உள்ளிட்ட ஆவணங்களை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும். அப்படி வாங்கிய கால்நடைகளையும் அடுத்த 6 மாதத்திற்கு வேறு எவருக்கும் விற்கக்கூடாதாம். இப்படி கூறுகிறது மோடி ஆட்சியின் சட்டம்.
இனி ஒவ்வொரு வீட்டிலும் இறைச்சி சமைத்தால் சமைத்த உணவை கண்காணிப்புக் குழுவின் பரிசோதனைக்கு உட்படுத்தி சமைக்கப்பட்டது மாட்டிறைச்சி அல்ல என்று உள்ளூர் வருவாய் அலுவலர் கால்நடை மருத்துவரிடம் தடையில்லா சான்றிதழ் பெற்ற பிறகே சமைத்த உணவை குடும்பத்தினர் சாப்பிடவேண்டும் என்று அவசர சட்டம் கூட வரலாம். ஆச்சரியப் படுவதற்கில்லை.

மோடி ஆட்சியின் இந்த சர்வாதிகாரச்சட்டம் விளிம்பு நிலை மக்களுக்கும் சிறுபான்மை சமூகத்திற்கும் விவசாயிகளுக்கும் எதிராக கொண்டுவரப்பட்ட சட்டம், தனது வாழ்வாதரத்திற்கு போராடும் விவசாயி பயன்தராத மாடுகளை எப்படி காப்பாற்றிக் கொண்டிருக்க முடியும். இந்த அதிகார அடக்குமுறையை மக்கள் பொறுமையாக சகித்துக் கொண்டிருக்கவே மாட்டார்கள்.

தமிழ்நாட்டில் திமுக, உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது, கேரள மாநில முதல்வர் இதனை ஆர்.எஸ்.எஸ். செயல் திட்டம் என்றுகூறி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். மாநில உரிமைகளை காலில் போட்டு மிதித்து மக்களின் வாழ்வாதாரம் உணவு உரிமைகளை தடுப்பதோடு ஒடுக்கப்பட்ட சிறுபான்மை விளிம்பு நிலை மக்களின் தொழில் வணிகங்களுக்கு பொருளாதார நெருக்கடிகளை உருவாக்கியுள்ளன.

அனைத்திற்கும் மேலாக இந்தியா முழுமைக்கும் ஆர்.எஸ்.எஸ் அதிகார கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக்கூடிய முயற்சியாக பார்ப்பனியமே இந்தியா.

பார்ப்பன பண்பாடே இந்திய பண்பாடு என்றவகையில் ஏற்று அடிபணிந்து வாழவேண்டும் என்பதுதான் குடிமக்களின் கடமை என்ற ஒற்றைப் பார்ப்பன கலாச்சாரத் திணிப்பை மேடியின் அரசு அறிவித்துள்ள ஆணை நிலை நிறுத்துகிறது.

இதன் மூலம் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் மக்களின் எளிய உணவாக, சத்தான ஒரே புரத உணவாக இருக்கும் மாட்டிறைச்சியை உண்பதற்கு தடைவிதித்திருப்பது, தாழ்த்தப்பாட்ட இசுலாமிய சிறுபான்மை மக்களின் வெறுப்பு அரசியலையையே இது காட்டுகிறது.

எனவே மோடி அரசு கொண்டு வந்திருக்கும் மாட்டிறைச்சி உண்பதற்கான தடைச்சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என இந்த கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம்.3
*************
உயிர் ஈகம் கூடாது
கண்டிப்புத் தீர்மானம்
""""""""""""""""""""""""""""""""
போராடி சாதிக்க வேண்டிய தோழர்கள் தன்னைத் தானே எரித்துக் கொண்டு தற்கொலைப் போராட்டங்கள் நடத்துவது பேரவையின் கொள்கைக்கு எதிரானது, 2013 செப்டம்பர். 26. ல் தோழர் நீலவேந்தன் அவர்களும், அதே ஆண்டு நவம்பர். 26 ல் தோழர் ராணி அவர்களும், தங்களது உயிரை மாய்த்துக் கொண்ட மனவலி குறையும் முன்பே, தற்போது தோழர் மகேஸசுவரன் அவர்களும் அதே வழியில் உயிர் ஈகம் செய்திருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. எனவே இனிமேல் இது போன்று உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்களில் ஈடுபடக் கூடாது என பேரவைத் தோழர்கள் அனைவரையும் இந்த கூட்டம் கண்டிப்புடன் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம்.4
"""""""""""""""""
தளபதியாருக்கு
நன்றி தீர்மானம்
"""""""""""""""""""""""""""
தோழர் மகேசுவரனின் உயிர் ஈகச் சம்பவத்தை அறிந்த திராவிட முன்னேற்றக் கழக செயல் தலைவரும், தமிழக சட்டப் பேரவை எதிர்கட்சி தலைவருமான மாண்புமிகு, மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது வருத்தத்தையும் இரங்கலையும் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி வாயிலாக தெரிவித்துக் கொண்டதோடு, தி.மு.க. மாநில பொறுப்பாளரையும், திருப்பூர் மாவட்ட செயலாளரையும் மகேசுவரனின் இல்லத்திற்கு நேரில் அனுப்பி வைத்து அவரது குடும்பதாருக்கு ஆறுதல் சொல்லியது, அருந்ததியர் மக்கள் மீது தி.மு.க கொண்டிருக்கும் மாறாத பற்றையும் அக்கரையையும், காட்டுகிறது. தோழர் மகேசுவரனின் உயிர் ஈகத்திற்கு மதிப்பளித்து அவரது இழப்பிற்கு இரங்கல் தெரிவித்த மரியாதைக்குறிய தளபதியார் அவர்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் இந்த கூட்டம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம்.5
*************
தமிழக அரசை வலியுறுத்தி
"""''''''''''"'"'"""'''''''''''
தமிழகத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களில் மூன்றில் ஒருபங்காக வாழக்கூடிய அருந்ததியர் மக்களுக்கு திமுக ஆட்சியில் வழங்கப்பட்டுள்ள 3 விழுக்காடு இடஒதுக்கீட்டை முழுமையாக நடைமுறைப் படுத்தாமலும், அருந்ததியர்களுக்கு ஒதுக்கப்படும் பணி வாய்ப்பு நியனங்களில் இன்ன பிற சமூகத்தை சார்ந்தவர்களிடம் கையூட்டுப் பெற்றுக்கொண்டு மாற்றி வழங்குவது போன்ற முறைகேடுகளும் நடந்து வருகிறது, இதை தற்போதைய அரசு கண்டும் காணாமல் இருப்பது அருந்ததியர் மக்களுக்கு இழைக்கப்டும் அநீதியாகும். எனவே தமிழக அரசு இதில் உரிய கவனம் செலுத்தி அருந்ததியர் மக்களுக்கு கிடைக்கவேண்டிய இட ஒதுக்கீட்டுப் பலன்களை முழுமையாக கிடைத்திட கண்காணிப்புக் குழு ஒன்றை அமைத்து கண்காணிக்க வேண்டும் என்று இந்த கூட்டம் தமிழக அரசை வற்புறுத்துகிறது.

தீர்மானம்.6
*************
சமூகநீதிப் போராளிகளாக அறிவிக்க கோரும் தீர்மானம்
"""""""""""""""""""""""""""""""""""""
அருந்ததியர் மக்களின் முன்னேற்றத்திற்காக ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கும் 3 விழுக்காடு இட ஒதுக்கீடு என்பது, இவர்களின் மக்களின் மக்கட் தொகைக்கு ஏற்றவாறு போதுமானதாக இல்லை என்பதனால் 3 விழுக்காடு இட ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்கிட வேண்டும் என ஆதித்தமிழர் பேரவை நிர்வாகிகளான திருப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் நீலவேந்தன், திருச்சியை சேர்ந்த இராணி, மற்றும் திருப்பூர் வாவிபாளையத்தைச் சேர்ந்த மகேஸ்வரன் மூவரும் அய்ம்பது லட்சத்திற்கும் மேல் உள்ள அருந்ததியர் மக்களின் வாழ்வாதாரத்தை அரசு காக்க வேண்டுமென தீக்குளித்து மரணமடைந்துள்ளனர், இவர்களின் தியாகத்திற்கு மதிப்பளித்து இவர்களை சமூகநீதிப் போராளிகள் என அறிவித்து உரிய அரசு மரியாதை அளித்திட வேண்டும் என தமிழக அரசை இந்த கூட்டம் வலியுறுத்துகிறது.

மேற்கண்ட தீர்மானங்களை தங்களது மேலான நாளிதழ் / தொலைக்காட்சியில் வெளியிட்டு உதவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
______________
தலைமைக்காக
தலைமை நிலைய செயலாளர்

நாள். 28.5.2017
இடம். திருப்பூர்





Saturday 27 May 2017

மாட்டுக் கறிக்கு தடைவிதித்துள்ள மோடி அரசை ஆதித்தமிழர் பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது

மாட்டுக் கறிக்கு தடைவிதித்துள்ள மோடி அரசை ஆதித்தமிழர் பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது.
"""""""""""""""""""""""""""
இறைச்சிக்காக மாடுகளை விற்க தடைவிதித்துள்ள மத்திய மோடி அரசிற்கு கடும் கண்டனத்தை தெரிவிப்பதோடு, உடனடியாக இவ்வறிப்பை திரும்ப பெற வேண்டும் என ஆதித்தமிழர் பேரவை மோடி அரசை வற்புறுத்துகிறது.
கால்நடை சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்யும் வர்த்தக விதிமுறையில் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ள மோடி அரசு அந்த ஆணையை நாடுமுழுவதும் நடைமுறைப் படுத்துவதற்கு உடனடி அறிவிப்பும் செய்திருக்கிறது.
இறைச்சி மற்றும் தோல் பொருட்கள் தயாரிப்புக்காக மாடு, கன்று குட்டி, எருமை, ஒட்டகம் போன்ற கால்நடைகளை விற்க மத்திய அரசு தடை விதித்திருப்பது தாழ்த்தப்பட்ட, இசுலாமிய குறிப்பாக உழைக்கும் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் மக்கள் மீது திணிக்கப்பட்டிரும் உணவுப் பண்பாட்டு உரிமை மீறலையும், பொருளியல் ஒடுக்குமுறையையுமே காட்டுகிறது.
பசுவதை தடுப்புச் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த ஆணையின் மூலமாக மத சுதந்திரம், தனிமனித சுதந்திரம், மதச்சார்பற்ற தன்மை, போன்ற அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமைகள் அனைத்தையும் பறிக்கும் விதத்தில் ஆர்.எஸ்.எஸ்.ன் செயல் திடங்கள் ஒவ்வொன்றாக நடைமுறைப் படுத்துகிறது, இந்த அதிரடி அறிவிப்பின் மூலமாக,
இப்படியான அறிவிப்பு ஏதோ இசுலாமிய மக்களை குறிவைத்து நடத்தப்படும் தாக்குலாக நாம் குறுக்கிப் பார்த்துவிட முடியாது, பிற்படுத்தப்பட்ட உழவர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கின்ற நோக்கில், ஏற்கனவே பயிர்கள் கருகி உயிரை மாய்த்துக் கொண்டிருக்கும் உழவர்களை மேலும் முடக்கி அழிக்கும் எண்ணத்தோடு, சந்தைகளில் மாடுகளை விற்கும் போது சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் என்று நடைமுறைக்கு ஒவ்வாத பெரிய பட்டியலையே அறிவிப்பு செய்திருக்கிறது.
மேலும் இறைச்சி சமைக்கும் இல்லங்களில் இது என்ன இறைச்சி என்று ஆய்வுகளும் நடத்தப்படும் என வட மாநிலங்களில் நடந்தேறிய மனிதனின் தோலை உரித்த கோர நிகழ்வுகளை சுட்டிக்காட்டி அச்சுறுத்தும் அறிவிப்பும் அதில் அடங்கியுள்ளது.
இது சம்மந்தமாக மாநில அரசுகளிடம் எவ்வித கருத்தும் கேட்காமல் மத்தியில் முழுபலத்துடன் இருக்கிறோம் என்ற அகந்தையில் மாநில அரசுகளின் மாநில சுய சார்பு உரிமையில் தலையிடுவது ஏற்றுக்கொள்ள இயலாதது.
எனவே தாழ்த்தப்பட்ட அருந்ததியர் மக்களுக்கும் இசுலாமிய, பிற்பட்ட உழவர் பெருமக்களுக்கும் எதிரான இந்த அறிவிப்பை மத்திய மோடி தலைமையிலான பா.ச.க அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்துவதோடு, இந்த அறிவிப்பு ஆணைக்கு எதிராக தமிழக அனைத்து மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலத்தை முற்றுகையிடும் போராட்டத்தை ஆதித்தமிழர் பேரவை விரைவில் அறிவிக்கும் என மோடி அரசிற்கு எச்சரிக்கை விடுகிறது.
இவண்
இரா.அதியமான்
நிறுவனர், ஆதித்தமிழர் பேரவை
27.5.2017.

Friday 26 May 2017

திருச்சி , பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இராமகிருட்டிணன் அவர்களுடன் குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான கூட்டமைப்பு சந்திப்பு

திருச்சி , பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இராமகிருட்டிணன் அவர்களுடன் குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான கூட்டமைப்பு மண்டலா ஒருங்கிணைப்பாளர் எஸ் .பிரபு மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர் இக்கூட்டமைப்பு சார்பாக ஆதித்தமிழர் பேரவையினரும் கலந்துகொண்டனர்



திமுக தலைவர் கலைஞர் வைரவிழாவிற்கு ஆதித்தமிழர் பேரவைக்கு அழைப்பு

திமுக தலைவர் கலைஞர் வைரவிழாவிற்கு ஆதித்தமிழர் பேரவைக்கு அழைப்பு


பெரம்பலூர் மாவட்ட திமுக செயலாளர் குன்னம் சி இராஜேந்திரன் அவர்களை பெரம்பலூர் மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர் மரியாதையை நிமித்தமாக சந்தித்தனர்

 பெரம்பலூர் மாவட்ட திமுக செயலாளர் குன்னம் சி  இராஜேந்திரன் அவர்களை பெரம்பலூர் மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர் மரியாதையை நிமித்தமாக சந்தித்தனர்







ஆணவபடுகொலைதடைச்சட்டம் இயற்றகோரி முற்றுகை போராட்டம்.மதுரை தபால் நிலையம் முற்றுகை ஆதித்த்தமிழர் பேரவை பங்கேற்பு



ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட பேரையூர் சுகன்யாவை பெற்றோரே எரித்து கொன்ற கொடூரம்.
தலைமறைவாகியுள்ள கொலைகாரன் சுகன்யாவின் தம்பியை கைது செய்ய கோரியும்..

ஆணவ படுகொலை தடைச் சட்டத்தை இயற்றாமல் காலங்கடத்தும் மோடி அரசைக் கண்டித்தும் மதுரை திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் தலைமை தபால் நிலையம் முற்றுகை இடப்பட்டது.

இதில் ஆதித்தமிழர் பேரவை துனை பொதுச்செயலாளர் கபீர் நகர் கார்த்தி

வனவேங்கைகள் பேரவை பொதுச்செயலாளர்.இரணியன் உள்ளிட்ட தோழர்கள் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்க பட்டனர்
23-7-17





கொல்லிப்பானையில் மனுவை வைத்து நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதித்தமிழர் பேரவையினர் நூதன போராட்டம்


நெல்லை மாநகரில் பாளை உழவர் சந்தை,பேட்டை எம்.ஜி.ஆர் நகர்,மற்றும் டவுன் மாடத்தெருவில் உள்ள மதுபானக்கடைகளை அகற்ற வலியுறுத்தி ஆதித்தமிழர் பேரவை சார்பிலும் பொதுமக்கள் சார்பிலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது கடந்த 4-5-17 அன்று மதுவை தரையில் கொட்டி ஆதித்தமிழர் பேரவையினர் போராட்டம் நடத்தினர். இன்றும் அதே கோரிக்கைகளை வலியுறுத்தி கொல்லிபானையில் மனுவை வைத்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டத்தை ஆதித்தமிழர் பேரவை சார்பில் நடத்தினர் .

மாவட்ட செயலாளர் கலைக்கண்ணன் கூறியதாவது
பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளில் மக்களுக்கு பெரும் தொந்தரவாகவும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பல்வேறு சிரமங்களையும் ஏற்படுத்தும் மதுபானக்கடைகளை அகற்ற வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்களும் வன்முறைசம்பவங்களும் கடைகள் உடைக்கப்படுவது போன்ற சம்பவங்கள் அன்றாடம் நடந்து வருகிறது...
நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது
தற்போது நெல்லை மாநகரில் உழவர் சந்தை ரயில்வே கேட் அருகிலும் பேட்டையில் மக்கள் குடியிருப்பு அதிகம் உள்ள எம்.ஜி.ஆர் நகர் பகுதியிலும்
டவுனில் மக்கள் குடியிருப்பு பகுதியான மாடத்தெருவிலும் உள்ள மதுபான கடைகளால் மக்களுக்கும் பெண்கள் குழந்தைகள் என அனைவருக்கும் சிரமங்கள் ஏற்படுவதால் குடியிருப்பு பகுதிகளில் உள்ள மதுபானகடைகளை அகற்ற வேண்டும்
மக்களின் நலனை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கவும் காலதாமதம் ஏற்படுமாயின் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நடக்கும் போராட்டங்களை போல நெல்லை மாநகரத்திலும் போராட்டம் நடைபெற நெல்லை மாவட்ட#ஆட்சித்தலைவர் காரணமாய் அமைய வேண்டாம் என ஆதித்தமிழர் பேரவை சார்பில் அன்போடு வேண்டுகோள் விடுக்கிறோம் என கூறினார்
26-5-17

காணொளியை காண இங்கு சொடுக்கவம்







குடிநீர் வசதி கேட்டு நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை ஆதித்தமிழர் பேரவை 25 பேர் கைது

வைராவி குளம் ஊராட்சி அம்பை தாழுகா சங்குமுத்துநகர் அருந்ததியர் பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை சரிசெய்ய வலியுறுத்தி ஆதித்தமிழர் பேரவை சார்பில் பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு காலி குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தீனோம் பெண்கள் 9 பேர் உட்பட 25 தோழர்கள் கைது


Thursday 25 May 2017

நெல்லையில் திராவிட முன்னேற்ற கழகம்சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு நீட் தேர்வு எதிர்ப்பு கருத்தரங்கத்தில் ஆதித்தமிழர் பேரவை


நெல்லையில் திராவிட முன்னேற்ற கழகம்சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு 

நீட் தேர்வு எதிர்ப்பு கருத்தரங்கம் நடைபெற்றது ஆதித்தமிழர்பேரவை சார்பில் நானும் மாவட்ட தலைவர் அண்ணன் முத்துவீரன் மற்றும் திருகுமரன் மதன் தளபதிவிஜய் ஜோதிவிஜய் தோழர்கள் கலந்து கொண்டனர்....

 




நெல்லை மாவட்டம் சிவந்திபுரம் அருந்ததியர் நகரில் ஆதித்தமிழர் பேரவை கிளை புதிதாய் உருவாக்கப்பட்டது


​நெல்லை மாவட்டம் சிவந்திபுரம் அருந்ததியர் நகரில் ஆதித்தமிழர் பேரவை கிளை புதிதாய் உருவாக்கப்பட்டது..

உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது...தோழர்கள் மதிவானன் திருமுருகன் மதன் ஜோதிவிஜய் தளபதிவிஜய் கல்லிடை சரவணன் கண்ணன் போன்ற நிர்வாகிகளுடன் களப்பணியில் நெல்லை தோழர்கள்

அய்யா அதியமான் தலைமையேற்றோம்

அருந்ததியர் விடுதலையை வென்றெடுப்போம்,

கு.கி.கலைகண்ணன்


மாவட்ட செயலாளர்

நெல்லை கிழக்கு மாவட்டம்

 



Thursday 18 May 2017

துப்புரவு பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் குறைதீர்க்கும்கூட்டம் நடத்த வலியுறுத்தி நெல்லை மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது

துப்புரவு பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் குறைதீர்க்கும்கூட்டம் நடத்த வலியுறுத்தி நெல்லை மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது 

ஆதித்தமிழர் பேரவை நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் கு.கி கலைக்கண்ணன் வழங்கிய செய்தியாளர்கள் சந்திப்பில் விவசாயிகளுக்கு ஆட்சியர் தலைமையில் குறைதீர்க்கும் கூட்டம் நடத்த படுவது போல துப்பரவு பணியாளர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என ஆதித்தமிழர் பேரவை கோரிக்கை வைக்கிறது. ஏனெனில் துப்பரவு பணியாளர்கள் வேலை பார்க்கும் தளங்களில் மாற்று சமூகத்தினர் பலர் துப்பரவு பணி செய்யாமல் துப்பரவு பணி செய்பவர்கள் என பணி நியமன ஆணை பெற்று வைத்துள்ளனர்.

துப்பரவு பணியாளர்களில் குறிப்பாக பெண்களுக்கு தாங்கள் வேலை பார்க்கும் இடங்களில் பாலியல் வன்கொடுமைகள் பல இடங்களில் நடைபெற்று வருகிறது, மேலும்  பணி மூப்பு அடிப்படையிலும் அவர்களின் கல்வி அடிப்படையிலும் உயர் பதவியில் பணி உயர்வு பெறுவதற்கு தடை விதிக்க படுகிறது அவர்களுக்கு உயர் பதவிகளுக்கு வர தகுதிகள் இருந்தும் அவர்கள் பணி உயர்வு பெறாதவாறு அங்குள்ள மேலதிகாரிகளால் தடுக்கப்படுகின்றனர்.துப்பரவு பணியாளர்கள் ஓய்வு பெற்ற பின்பு வரக்கூடிய பண தவணைகளை கொடுக்காமல் , அதனை கொடுப்பதற்கு லஞ்சம் கேட்டு மேலதிகாரிகள் துணுபுறுத்துகின்றனர் .இதனால் துப்பரவு பணியாளர்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய பணம் கிடைக்காமல் பெரிதும் கஷ்ட நிலையில் தங்கள் வாழ்க்கையை  வாழ்ந்து வருகின்றனர் .அதுமட்டும்மல்லாமல் அரிசியல் கட்சி தலைவர்கள் , அரசு ஊழியர்கள் போன்றோர்களின் இல்லங்களில் துப்பரவு பணியாளர்களை விதிமுறைகளை மீறி பணி செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள் ,இவர்களின் இல்லங்களில் செப்டிக் டங் சுத்தம் செய்ய கட்டாய படுத்தப்படுகிறார்கள், இதனை எதிர்த்து கேள்வி கேட்டால் அவர்களை வேலையை விட்டு நீக்கிவிடுவோம் என்று மிரட்டும் அவல நிலை நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து இருந்து வருகிறது .

உச்ச நீதிமன்ற தீர்ப்பை  நடைமுறை படுத்தாமல் அத்தீர்ப்பை மீறும் வகையில் ஓடைகளிலும் ,சாக்கடைகளிலும் எந்த வித பாதுகாப்பு உபகாரணங்களுமின்றி துப்பரவு பணியாளர்களை பணியில் அமர்த்துகிறார்கள் ,இரண்டு நாட்களுக்கு முன்பு கீழப்பாவூர் பகுதியில் இது போன்ற சம்பவம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல் தொடர்ச்சியாக துப்பரவு பணியாளர்களை தனியார் உணவகங்களில் ஏற்படுகின்ற பாதாள சாக்கடை அடைப்புகளை சரி செய்வதற்காக இரவு நேரங்களில் விதிமுறைகளை மீறி இரக்கி வேலை வாங்குகின்றனர்.இதனால் பல்வேறு இடங்களில் உயிரிழப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
மேலும் துப்பரவு பணியாளர்கள் குடியிருக்கும் குடியிருப்பு பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தராமல் அரசு திட்டமிட்டு புறக்கணித்து வருகிறது .

இது போன்ற பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டு இருக்கும் துப்பரவு பணியாளர்களின் வாழ்க்கை மேம்பட வேண்டுமென்றால் விவசாயிகளுக்கு குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படுவது போல் துப்பரவு பணியாளர்களுக்கும்  மாவட்ட ஆட்சியர் தலைமையில் குறைதீர்க்கும் கூட்டம் நடத்த பட வேண்டும் ,இக்கூட்டம் நடத்தும் பட்சத்தில் துப்பரவு பணியாளர்கள் சந்தித்து வரும் குறைந்தளவு பிரச்னைகளாவது முடிவுக்கு கொண்டு வரும் என்ற அடிப்படையில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் இந்த கோரிக்கையை முன்வைத்து பத்திரிகையாளர் மன்றத்தில் தெரிவிக்கிறோம்.

துப்பரவு பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் குறைதீர்க்கும் கூட்டம் நடத்த படவேண்டும் என்ற எங்கள் கோரிக்கை செய்தியை மாவட்ட ஆட்சியருக்கு நாங்கள் தெரியப்படுத்துகிறோம். குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்படாமல் காலம் தாழ்த்துவர்களேயானால் நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைத்து துப்பரவு பணியாளர்களையும் ஒருங்கிணைத்து மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம் என தெரிவித்து கொள்கிறோம்

கு கி கலைக்கண்ணன்
மாவட்ட செயலாளர்
நெல்லை கிழக்கு
ஆதித்தமிழர் பேரவை

Monday 15 May 2017

காவிரி ஆற்றை பாதுகாக்க வலியுறுத்தும் வகையில் பேரணி& பொதுக்கூட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையினர்


13.5.17
காவிரி ஆற்றை பாதுகாக்க
வலியுறுத்தும் வகையில்
பேரணி& பொதுக்கூட்டம்
நடைபெற்றது இதில்
ஆதித்தமிழர் பேரவை சார்பில் தோழர் முல்லையரசு கலந்து கொண்டு உரையாற்றினார்




நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் தோழர் கலைக்கண்ணன் அவர்கள் இல்லத்தில் பொதுச்செயலாளர்



நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர்  தோழர் கலைக்கண்ணன் தோழர் பத்மா இணையர்களுக்கு 12-5-17 அன்று பிறந்த ஆண் குழந்தையுடன் பொதுச்செயலாளர் நாகராசன் அவர்கள் கொள்கை பிறப்பு செயலாளர் ஜானகி அம்மாள் மற்றும் பேரவையின் மாநில மாவட்ட நிர்வாகிகள்


விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் நகரத்தின் smc காலனியில் கொடியேற்றம் மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது


விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் நகரத்தின் smc காலனியில் மாவட்ட செயற்குழு கூட்டமும் ,கிளை கொடியேற்றமும் நடைபெற்றன.ஆதித்தமிழர் பேரவையின்
மாநில அமைப்பு செயலாளர் அருந்ததியரசு ,மாவட்ட செயலாளரும் கலந்து கொண்டனர்.