அண்மையச்செய்திகள்

Friday, 15 December 2017

திருப்பூர் அரசு மருத்துவமனை ஆதித்தமிழர் பேரவையினரால் முற்றுகை - பரபரப்பு

திருப்பூர் அரசு மருத்துவமனை ஆதித்தமிழர் பேரவையினரால் முற்றுகை - பரபரப்பு
*******
திருப்பூர் மாவட்டம் பெருந்தொழவு கரட்டுபாளையம் அருந்ததியர் குமரன் 14.12.17 நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்..15.12.17 இன்று காலை 11 மணிக்கு திருப்பூர் அரசு மருத்துவமனை நிர்வாகமும் காவல்துறையினர் தாமதபடுத்யியதால் உறவினர்கள் 150 பேர் மற்றும் ஆதித்தமிழர்பேரவை நிர்வாகிகள் சோழன்,பிரபாகரன்,பழனிச்சாமி,வீரசக்திவேல் மற்றும் மக்கள் அதிகாரம் தோழர் கார்த்திக் ஆகியோர் மருத்துவமனை முன்பு முற்றுகை....
====
முந்தைய செய்தி
இன்று திருப்பூர் அரசு மருத்துவமணையை ஆதித்தமிழர் பேரவையினர் முற்றுகை போராட்டம்
******
திருப்பூர் மாவட்டம் அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள எஸ்பி அப்பியரல் கம்பெனியில் தமிழகம் மற்றும் வெளி மாநில தொழிலாளர்கள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.இந்த கம்பெனியில் தொடர்ந்து மர்ம முறையில் தொழிலாளர்கள் இறந்து வருகின்றனர்..இந்நிலையில் இன்று ஒரிசா மாநிலத்தை சேர்ந்த 21வயதுள்ள இளம்பெண் ஒருவர் திடீரென காய்ச்சல் காரணமாக இறந்து விட்டார் என்று மேற்படி கம்பெனி நிர்வாகம் கூறுகிறது தொழிலாளர்கள் மத்தியில் இது மர்ம மரணம் என்று கூறி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனனர்....தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிர்வாகத்தை கண்டித்தும் தொடர்ந்து மர்ம மரணங்கள் ஏற்படுவதை கண்டித்தும் மர்மான முறையில் இறந்த பெண் தொழிலாளருக்கு நீதி கேட்டு ஆதித்தமிழர்பேரவை சார்பில் 15.12.17 காலை 10மணிக்கு திருப்பூர் அரசு மருத்துவமனை முற்றுகை...தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று கூடுவோம் தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்பு உரிமைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில்....வாரீர் வாரீர்...
சோழன்
மாநில தொழிர்சஙக துணைச்செயலாளர் ஆதித்தமிழர்பேரவை...
Chozhan Atp
தொடர்பு எண்:9976165029.
தொடரும் படுகொலைகள் - நாமக்கல்லில் ஆதித்தமிழர் பேரவை நடத்திய மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்

 தொடரும் படுகொலைகள் - நாமக்கல்லில் ஆதித்தமிழர் பேரவை நடத்திய மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்


 அய்யா அதியமான் செய்தியாளர்கள் சந்திப்பு  காணொளி


நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் குச்சிக்காடு பகுதியைச் சுரேஷ் படுகொலையைக் கண்டித்தும்,
ரிக்வண்டி உரிமையாளர் கொலைகாரன் தனசேகரனுக்கு வழக்கு முடியும் வரை பிணை வழங்ககூடாது எனவும்,
இதுவரை காணாமல் போனர்களை கண்டுபிடிக்க சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் எனவும்.

சுரேஷ் படுகொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, உடுமலை சங்கர் வழக்கில் வழங்கப்பட்டிருக்கும் தண்டனை போல தண்டனை வழங்க வேண்டும் எனவும்,
வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில் வழங்கப்பட வேண்டிய உரிய தீருதவிகளை வழங்கிட வேண்டும் எனவும்,
ரிக்வண்டி வேலைக்கு அழைத்து செல்லப்படும், தொழிலார்களை பாதுகாக்க, அவர்களின் விபரங்களை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும்,
மேலும் ஆணவக் கொலைகளை தடுத்து நிறுத்த தனிச்சட்டம் இயற்ற வேண்டும் எனவும்.
நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டத்தின் சார்பில் நாமக்கல் பேரூந்து நிலையம் பார்க் சாலையில் மக்கள் திரள் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று 15.12.2017 காலையில் நடைபெற்றது.
பேரவைத் தலைவர் அய்யா அதியமான் அவர்கள் கண்டன பேருரை ஆற்றினார். பொதுச்செயலாளர், நாகராசன், து.பொ.செயலாளர், சந்திரன், ஊடகவியல் செயலாளர். வீரவேந்தன், தூய்மைத் தொழிலாளர் பேரவை தலைவர் பாண்டியன், உள்ளிட்ட மாநில நிர்வாகிகளும், நாமக்கல் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகளும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்ட ஏற்பாட்டினை, கிழக்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் மற்றும் மேற்கு மாவட்ட செயலாளர் சரவணக்குமார். சிறப்பாக செய்திருந்தனர்.
செய்தி..
-ஆ.நாகராசன்.
15.12.2017


Thursday, 14 December 2017

காஞ்சிபுரத்தில் சாதிவெறியாட்டம் -- களத்தில் ஆதித்தமிழர் பேரவை

காஞ்சிபுரத்தில் சாதிவெறியாட்டம் -- களத்தில் ஆதித்தமிழர் பேரவை
**********
காஞ்சிபுரம் மாவட்டம் நிமிலிச்சேரியில் இன்று (14-12-2017) அருந்ததியர் வெங்கட்ராமன் இவரது மனைவி விஜயா மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய தேவர் சாதிவெறியர்கள் இருவர் கைது எட்டுபேர் தப்பியோட்டம்...!
ஓடி ஒளிந்த தேவர் சாதி ரவுடிகளை காவல்துறையே தப்பவிடாதே உடனே கைது செய் போராடத்தூண்டாதே...!
வெங்கட்ராமன் மற்றும் விஜயா சென்னை அரசு மருத்துவ மனையில். களத்தில்
ஆதித்தமிழர் பேரவை தோழர்கள்.
இரா.செல்வம் ஆதித்தமிழர் பேரவைஈவிகேஸ்இளங்கோவன் அவர்களுடன் பேரவையினர் ஆர்கேநகர் திமுக தேர்தல் பணிமனையில் சந்திப்பு

காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் அண்ணன் ஈவிகேஸ்இளங்கோவன் அவர்களுடன் பேரவையினர் ஆர்கேநகர் திமுக தேர்தல் பணிமனையில் சந்திப்பு

உயிர்வலியோடு கதறும் மீனவர்கள்! அலச்சியமாக நடந்துகொள்ளும் மத்திய,மாநில அரசுகளை கண்டித்து... தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்

உயிர்வலியோடு கதறும் மீனவர்கள்!
அலச்சியமாக நடந்துகொள்ளும் மத்திய,மாநில அரசுகளை கண்டித்து...
தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்
**************
ஓகிப்புயல் பேரிடர் மீட்புப் போராட்டக்குழுவினர் இன்று உயிர்வலியோடு கதறும் மீனவர்கள் ,
அலச்சியமாக நடந்துகொள்ளும் மத்திய,மாநில அரசுகளை கண்டித்து இன்று 14-12-17 நடத்திக்கொண்டிருக்கிற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில்
ஆதித்தமிழர் பேரவை*சார்பில்
மாநில அமைப்பு செயலாளர்
தோழர் சோ. அருந்ததி அரசு அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். உடன்
மாவட்ட மாணவரணி செயலாளர்
தோழர் செ.சந்தனம் மற்றும் பேரவையினர்

ஆதித்தமிழர் பேரவை
தூத்துக்குடி தெற்கு மாவட்டம்
14-12-17


Wednesday, 13 December 2017

முன்றாவது நாளாக ஆதித்தமிழர் பேரவையினர் திமுக வேட்பாள Marudhu Ganesh அவர்களை ஆதரித்து வீதி வீதியாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர் ..

திமுக வேட்பாள Marudhu Ganesh அவர்களை ஆதரித்து முன்றாவது நாளாக ஆதித்தமிழர் பேரவையினர் வீதி வீதியாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர் ...
வருகிற 21-12-17அன்று ஆர்கேநகரில் நடைபெறும் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆதித்தமிழர் பேரவை ஆதரவு பெற்ற திராவிட முன்னேற்ற கழக வெற்றி வேட்பாளர் தோழர் மருது கணேஷ் அவர்களை ஆதரித்து ஆர்கே நகர் பகுதி முழுவதும் ஆதித்தமிழர் பேரவையினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் தற்போது இராஜிவ் காந்தி.நகரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்
#dmk
#atp
#rknagar
#byelection


14-12-17 ஆதித்தமிழர்கள் ஏன் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு ஆதரவு அளிக்கவேண்டும் ?

ஆதித்தமிழர்கள் ஏன் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு ஆதரவு அளிக்கவேண்டும் ?
******
தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் குழப்பநிலை செயலற்ற எடப்பாடி.பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க பினாமி அரசினால் தமிழகத்தில் நிலவுகின்ற பல்வேறு நெருக்கடிகளை சமாளிக்க முடியாமலும், தமிழக நலனுக்கு ஏற்றவாறு முடிவெடுக்க முடியாமலும் திணறிக்கொண்டு இருக்கிறது,

தங்களது கட்சிக்குள் உள்ள உட்கட்சி குழப்ப நிலையை சமாளிக்கும் முயற்சியில் மட்டுமே தங்களது முழுக்கவனத்தை செலுத்தி வருவதால், தமிழக மக்களின் நலன் குறித்து எந்தவித கவலையும், அக்கறையும் காட்டாமல் மக்களின் நம்பகத்தன்மையை அ.தி.மு.க அரசு இழந்து நிற்கிறது.
இந்நிலையில் மீனவர் படுகொலை, கந்துவட்டி தற்கொலைகள், ஆள்கடத்தல், கூலிப்படை கொலைகள், விவசாய நிலங்களை பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டம், பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் கேரளஅரசின் அடாவடித்தனம் போன்ற, நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழகம் முழுவதும் மக்கள் போராடிக் கொண்டிருக்கின்ற நிலையில், தமிழப் பெண்களுக்கான பாதுகாப்பும் கேள்விக்குறியாகி கொலை கொள்ளை வழிப்பறி திருட்டு என தமிழக அரசின் சட்ட ஒழுங்கும் சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது.

தி.மு.க ஆட்சியின் போது கொண்டுவரப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் முடக்கப்பட்டு, தமிழகத்தை அழிவுப் பாதையை நோக்கி அழைத்துச் சென்று மக்கள் விரோத செயலில் ஈடுபட்டு வருகிறது,
தி.மு.க ஆட்சியில் அறிவிக்கப்பட்ட அருந்ததியர் மக்களுக்கான 3 விழுக்காடு உள் இடஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்தாமலும், பல்கலைக் கழக இணை மற்றும் துணைப் பேராசிரியர்கள் நியமங்களிலும், தமிழக அரசுத்துறையில் உள்ள பல்வேறு துறைகளில் உள்ள வேலைவாய்பு நியமனங்களிலும் நேரடியாக ஆளும் அ.தி.மு.க அமைச்சர்கள் தலையிட்டு பல லட்சம் ரூபாயை கையூட்டாகப் பெற்றுக் கொண்டு அருந்ததியர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை பறித்து அவற்றை பிற சமூகத்தவருக்கு மடைமாற்றி விடுகின்ற முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் மனிதக் கழிவுகளை மனிதன் அகற்றும் இழிவினை ஒழித்திடும் முயற்சியில், தூய்மை தொழிலாளர்களின் மேம்பாட்டிற்காகவும், மறுவாழ்விற்காகவும் தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தூய்மைத் தொழிலாளர் நலவாரியத்தை அ.தி.மு.க அரியணை ஏறியது முதல் அதை கிடப்பில் போட்டு செயலிழக்கச் செய்து, நவீனக் கருவிகள் வாங்குவதற்கான முயற்சிகள் ஏதும் எடுக்காதனால் மலக்குழி மரணங்கள் நாளும் நாளும் அதிகரித்துக் கொண்டே போகிறது, இதனால் அவர்களது வாழ்வு கேள்விக்குறியாகி வருகிறது.

இப்படி எந்த துறைகளும் முன்னேற்றம் காணாமல் முற்றிலும் முடங்கிக் கிடக்கும் செயலற்ற அ.தி.மு.க பினாமி ஆட்சியை அகற்றுவதற்கு மக்கள் தயாராகிவிட்டனர், அதனுடைய வெள்ளோட்டம்தான் இந்த இடைத்தேர்தல், ஆகவே ஆர்.கே.நகர் வாக்காளப் பெருமக்கள் கையில் கிடைத்திருக்கின்ற இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி மக்களுக்காகவும், தமிழக முன்னேறத்திற்காவும் முழு நேரமாக உண்மை உணர்வோடு உழைத்து வரும் தலைவர் கலைஞர் அவர்களால் அடையாளம் காட்டப்பட்டுள்ள தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரம் திராவிட முன்னேற்றக் கழக செயல்தலைவரின் லட்சியத்தை நிறைவேற்ற அவர் அறிவித்திருக்கும் வேட்பாளர் சகோதரர் மருதுகணேஷ் அவர்களுக்கு, நமது வாக்குகளை அளித்து தமிழக வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையை உருவாக்கிட வேண்டும்.

----
அய்யா அதியமான் அவர்கள் கடந்த 26-11-17 அன்று வெளியிட்ட ஆர்கேநகர் இடைத்தேர்தலில் திமுகவிற்கு அளித்த ஆதரவு கடிதத்திலிருந்து வரிகள் )

---
வெல்வோம் ஆதித்தமிழர்களாய்


தருமபுரியில் கந்து வட்டி கொடுமை -- களத்தில் ஆதித்தமிழர் பேரவை

தருமபுரியில் கந்து வட்டி கொடுமை -- களத்தில் ஆதித்தமிழர் பேரவை
**************
தருமபுரி மாவட்டம் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த தங்கவேல் என்பவரை வெற்றுப்பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டு அவர் குடியிருந்த வீட்டையும் அபகரித்துள்ளனர்.இந்த கடனைப் பற்றி தெரியாத தங்கவேல் மகன் உடல் ஊனமுற்ற சுந்தர் அவர்கள் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தார்.களத்தில் தருமபுரி மாவட்ட ஆதித்தமிழர் பேரவை மா.இ.அணி செயலாளர் சக்திவேல், மா.கொ.ப.செயலாளர் ராஜ்குமார் மற்றும் மாவட்ட அமைப்பாளர் கார்த்திக்.......

***
*குறிப்பு* மனு இணைக்கப்பட்டுள்ளது...