அண்மையச்செய்திகள்

Tuesday 23 August 2016

மெத்தப்படித்த மேதாவிகள் என எண்ணிக்கொள்ளும் படித்தவர்களை நம்பி ஏமாந்து போனேன், இது புரட்சியாளர் அம்பேத்கரின் அனுபவம் மிக்க கூற்று. - ச.சு.ஆனந்தன்

வழக்கறிஞர் ஆனந்தனின் பதிவு.. *கொஞ்சம் நீண்ட பதிவு*
வாசிக்காமல் விட்டிவிடாதீர்கள்
*வரலாறுதான் நமக்கு வழிகாட்டும்.*
*அனைவருக்கும் பரப்புங்கள்.*
நன்றி
******
*மெத்தப்படித்த மேதாவிகள் என எண்ணிக்கொள்ளும் படித்தவர்களை நம்பி ஏமாந்து போனேன், இது புரட்சியாளர் அம்பேத்கரின் அனுபவம் மிக்க கூற்று.*
""""""""""”""""""""
அம்பேத்கர் சொன்ன அந்தக் கூற்றில் எவ்வளவு உண்மை உள்ளது, என்பதை ஒரு சில நிகழ்வுகளின் மூலம் இப்போதும் உணர முடிகிறது.
தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த ஒரே கரணத்திற்காக கிடைக்கப் பெற்ற கல்வி, வேலைவாய்ப்பு அதன்மூலம் கிடைக்கப்பெற்ற பொருளியல் சமூக அந்தஸ்து, இன்னும் எண்ணற்ற உரிமைகள் என ஏகபோகத்திற்கு அனுபவித்துக்கொண்டு, இவை அனைத்தும் தங்களது தனித் திறமையினால்தான் கிடைக்கப்பெற்றது என பீற்றிக்கொண்டு வெட்டி கவுரவத்தோடு மேட்டுக்குடித்தன வாழ்க்கை நடத்தும் பலர்.
பதவி, அதிகாரத்தில் இருந்தபோது ஒரு துரும்மைக்கூட கிள்ளிப்போடாமல் தான் உண்டு தனது பெண்டு பிள்ளைகள் என இருந்து விட்டு, பணிக்காலம் முடிந்து பதவிகள் பறிபோன பின்பு, ஒரு சிலர் ஏதோ ஞானம் வந்தவர்கள் போல் இந்த சமூகத்தின் மீது அக்கரை கொண்டு நாடகமாடுவது வேடிக்கை என்பதா? இல்லை விபரீதம் என்பதா?
*அடிமை சேவகம் செய்யவா? IAS பதவி.*
"""""""""”""""
இட ஒதுக்கீட்டின் மூலம் கிடைக்கப்பெற்ற IAS என்ற அதிகாரத்தைக் கொண்டு அப்போதெல்லாம் ஒன்றும் செய்ய திராணியற்ற மணிவண்ணன் IAS போன்றவர்கள், பதவி முடிந்து பல் பிடுங்கப்பட்ட பாம்பாக மாறிய பின், தான் பிறந்த அருந்ததியர் சமூகத்தைக் காப்பாற்றப் போவதாக சொல்லிக்கொண்டு சுயநலப் பருந்துகளாய் வட்டமிடத் தொடங்கியுள்ளது நம் சமூகத்தை காப்பாற்றவா? இல்லை காவுகொடுக்கவா?
பதவி காலத்தில் பல்லை இழித்துக்கொண்டு ஆதிக்கசாதி அதிகாரக் கும்பலுக்கு அடிமை சேவகம் செய்துவிட்டு, அவர்கள் வாழுகின்ற பகுதிக்குள்ளேயே அக்ரகார ஆசாமிகள் போல் சொந்தச்சாதியை மறைத்துக் கொண்டு சூடு சுரணையற்று கிடந்து விட்டு இப்போது சமூக உனர்வோடு இருக்கும் ஒரு சில அரசு ஊழியர்களை நாடி வருவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது.
*IAS பதவி என்பது தான் சார்ந்த சமூக மக்களின் முன்னேற்றத்திற்கானதே!*
""""""""""""""""
இதே காலகட்டத்தில் பணியில் இருந்த சக தலித் சமூகத்தை சார்ந்தவர்களான பள்ளர் சமூகத்தில் கிருஸ்துதாஸ்காந்தி பறையர் சமூகத்தில் சிவகாமி, கருப்பன் போன்றவர்கள் தாங்கள் சார்ந்த சமூகத்திற்கு செய்த சேவைகளில் கடுகளவாது செய்திருப்பாரா
கிருஸ்துதாஸ்காந்தி ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த போது தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் ஆழ்துளைக் குழாய் அமைத்து அனைவருக்கும் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்த போது அங்கிருந்த சாதி ஆதிக்க சக்திகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர், அந்த எதிர்ப்பையும் மீறி தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில்தான் ஆழ்துளை குழாய் அமைப்பேன் உங்களுக்கு விருப்பம் இருந்தால் குடிநீர் குடியுங்கள் இல்லை என்றால் அவர் அவர் வீடுகளில் சொந்தமாக பைப் அமைத்து கொள்ளுங்கள் என்று தாழ்த்தப்பட்ட மக்களின் சார்பாக உறுதியோடு நின்றவர்,
சிறப்பு உட்கூறு திட்டத்தின் மூலம் தொடங்கிய தொழிற்சாலைகளில் அதிக அளவு தாழ்த்தப்பட்ட இளைஞர்களை பங்கு பெற வைத்து பல தொழில் அதிபர்களை உருவாக்கியவர், தான் சார்ந்த சமூகத்தில் படித்த இளைஞர்களை வெளிநாட்டு பணிகளுக்கு சென்று வேலை செய்யுமாறு இன்றுவரை வலியுறுத்தியும் வழிகாட்டி வருகிறார்.
அதே போல்தான் சிவகாமி.I.A.S. அவர்கள் வெள்ளையர் ஆட்சிகாலத்தில் வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்களை மீட்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கிட ஆவண செய்து மீட்டும் கொடுத்துள்ளார்.
மேலும் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்ககனராக இருந்த போது தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியாளர்களுக்கும், காவல் கண்காணிப்பாளர்களுக்கும் (S.P) துணைக் காவல் கண்காணிப்பாளர்களுக்கும், (D.S.P) ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் 'அய்யா' அதியமான் புதுவையைச் சார்ந்த கிராமிய எழுச்சி பாடகர் பேராசிரியர் டாக்டர்.குணசேகரன், தியாகி இம்மானுவேல் பேரவை பொதுச்செயலாளர் பூ.சந்திரபோஸ் உள்ளிட்ட தலைவர்களைக் கொண்டு வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்க பயிற்சியினை ஏற்பாடு செய்தார்.
ஆனால் நம் சமூகத்தை சார்ந்த மணிவண்ணன்.I.A.S போன்றவர்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியராக இருந்த போதும், சென்னை மாநகரின் கமிசனராக இருந்த போதும், இருக்கும் இடம் தெரியாமல் அரசிற்கு விசுவாசம் காட்டிவிட்டு தான் சார்ந்த சமூகத்திற்கு எந்தவித பயனுமற்று இருந்தார் என்பதே உண்மை.
அருந்ததியர் சமூகத்தில் பிறந்த ஒரே காரணத்திற்காக பணிக்காலம் முடிந்தும் அய்ந்து ஆண்டுகள் தில்லியில் ஒரு அரசுப் பதவியில் நீட்டிப்பு செய்து இருந்தபோதும் அருந்ததியர் சமூகத்திற்கு ஒன்றும் செய்ததாக பதிவு இல்லை,
ஆனால் 25 ஆண்டுகளுக்கும் மேலாக போராடிப் பெற்ற உள்இடஒதுக்கீடு, அது அறிவிக்கப்பட்ட காலம் வரை அமைதி காத்து விட்டு இப்போது, அதற்கு காரணம் நாங்கள்தான் என்று இனிசியல் போட ஊர் ஊராய் சுற்றி, சொகுசு விடுதிகளில் கூட்டம் நடத்தி சொந்தச்சாதி மக்களை சுரண்டிக்கொழுக்க அற்பபொய்களை அள்ளிவீசி படித்த அரசு ஊழியர்கள்மத்தியில் நாடகமாடி நல்ல வசூல் வேட்டையாடுவது தான் மட்டுமே படித்த I.A.S என்பதால் தற்போது கூட ஆந்திரப் பிரதேச மாதிகாக்கள் ஆந்திர பிரதேசத்திலும் உள் இட ஒதுக்கீடு கேட்டு மந்த கிருஸ்ணா மாதிகா அவர்களின் தலைமையில் டில்லியில் நடத்தும்.போராட்டத்தை தன்னுடைய (மணிவண்ணன்) தலைமையில் நடைபெறும் போராட்டம் என்பது போல துண்டறிக்கை அடித்து ஊர் முமுவதும் வசூலித்து வருகிறார்........
*தற்போது ஜீலை 19 ஆம் தேதியில் தொடங்கி ஆகஸ்ட் 22-வரை ...24- நாட்கள் தொடர்ச்சியாக டில்லியில் நடைபெறும் போராட்டம் யாருக்கானது*
""""""""""""""""
கடந்த 22 வருடங்களாக ஆந்திரா தெலுங்கானா மாநிலத்தில் நடந்து கொண்டிருக்கின்ற sc இட ஒதுக்கீடு விரிவுபடுத்தல் கோரிக்கைக்காக 24 நாட்கள் தொடர்ச்சியாக இசைகலைஞர் அணியில் தொடங்கி வழக்குரைஞர் அணி மருத்துவர் அணி மாணவர் அணி ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் அணி துப்புரவு தொழிலாளர் அணி என்று 24-ன்கு அணிகள் MRPS மாதிக இட ஒதுக்கீடு போராட்ட சமிதி நிறுவனர் திரு மந்தா கிருஸ்னா மாதிக தலைமையில் நடைபெறும் போராட்டம் என்பது தமிழகத்தில் வழங்கப்பட்டுள்ள அருந்ததியர் உள் இடஒதுக்கீடு போல ஆந்திராவிலும் மாதிகாக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மந்தகிருஸ்ன மாதிகா அவர்களால் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள இளைஞர் மற்றும் மாணவர் முற்போக்கு இயக்கங்களை வழக்குரைஞர் அணி மருத்துவர் அணி ஒருங்கிணைத்து நடத்தம் போராட்டமே ஆகும்....
*2012-ஆம் ஆண்டு மத்திய அரசு பணிகளில் உள் இட ஒதுக்கீடு கேட்டு டில்லியில் ஆதித்தமிழர் பேரவை போராட்டம்!*
"""""""""""""""""
2009-ஆம் ஆண்டு தமிழகத்தில் உள் இடஒதுக்கீட்டை போராடி பெற்று தந்ததுடன், 2012-ல் மத்திய அரசுப் பணிகளிலும் உள் ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என தில்லி ஜந்தர்மந்தரில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தியதும் ஆதித்தமிழர் பேரவை.
*புதுவையிலும் அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டுக்கு அடித்தளமிட்டது! ஆதித்தமிழர் பேரவை*
""""""""""""""""""
ஆதித்தமிழர் பேரவை முன்னாள் நிதிச்செயலாளர் மறைந்த நெருப்பு போராளி நீலவேந்தன் அவர்கள் தலைமையில் 2012 .ல் புதுச்சேரியிலும் அருந்ததியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என அப்போதைய ரங்கசாமி அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தி அரசுச் செயலரிடம் மனுவளித்தது புதுவையிலும் உள் இட ஒதுக்கீட்டு போராட்டத்தை தொடங்கி வைத்தது ஆதித்தமிழர் பேரவை,
*உள் இட ஒதுக்கீடு பரிதாபப்பட்டு தந்ததல்ல!*
"""""""""""""""""""
அருந்ததியர் மக்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடு என்பது பரிதாபப்பட்டோ, படித்து பதவியில் இருந்தவர்களின் முயற்சியாலோ கிடைக்கப்பெற்றதல்ல.. அது கால் நூற்றாண்டு கால ஆதித்தமிழர் பேரவையின் ஒப்பில்லா ஒய்வில்லா போராட்டத்தின் மூலம் இடது சாரி இயக்கங்கள் முற்போக்கு இயக்கங்களின் ஆதரவில் விளைந்த பலன்.
நான் கற்ற கல்வி எனது மக்களுக்கு பயன்படவில்லை என்றால், என்னை நானே சுட்டுக்கொள்வேன், என்று கூறிய, அம்பேத்கரையும், பெரியாரையும் படித்து அவர்களின் தத்துவங்களை ஆயுதமாக்கிஆளும் அரசுகளின் அடக்குமுறை நெருக்கடிகளுக்கு அசராமல் ஆதித்தமிழர் பேரவை எனும் பேரியக்கத்தை கட்டமைத்து இன்று வரை விலை போகாமல், தடம் மாறாமல் உறுதியோடு போராடும் ஆயிரமாயிரம் நீலச்சட்டை இளைஞர்களின் அரசியல் பயணம் என்பது, ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் படுத்துறங்குகின்ற பட்டுமெத்தை வாழ்க்கையல்ல, பொய் வழக்குகளையும், குண்டாந் தடியடிகளையும், கொடுஞ்சிறைத் தண்டனைகளையும் எதிர்கொண்ட கொடூரப் பயணம்..
*உள் இட ஒதுக்கீடு கோரிய பயணங்கள்*
.............................................
10-4-2000 முதல் 15-4-2000 வரை ஈரோடு மாவட்டம் சக்தியமங்கலத்தில் இருந்து ஈரோடு வரை அய்ந்து நாட்கள் சமூக நீதி நடைபயணம் .....
23-5-2005 முதல் 3-6-2005 வரை 10-நாட்கள் தாராபுரத்திலிருந்து சக்தி வரை சமூக நீதி நடைபயணம்..
21-1-2006 முதல் உள் இடஒதுக்கீட்டை வலியுறுத்தி தமிழகம் முமுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் கவண ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்...
2-9-2007-ல் தொடங்கி 2009-வரை ஈரோட்டில் தொடங்கி இருபது மாவட்டங்களில் உள் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி மாவட்ட மாநாடுகள் அய்ம்பதுக்கும் மேற்பட்ட ஒன்றிய மாநாடுகள்...
*உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து 2009-ல் கூடிய அனைத்து கட்சிக்கூட்டம்*
........................................
ஆதித்தமிழர்களின் தொடர்ச்சியான போராட்டத்தின் விளைவாக ஆளும் அரசு 2009-ல் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியது அனைத்து கட்சிக் கூட்டத்தில் அருந்ததியர்களின் சமூக அவல நிலையை தமிழக முதல்வரிடம் எடுத்துரைத்து உள் இட ஒதுக்கீட்டின் அவசியத்தை வலியுறுத்தியது ஆதித்தமிழர் பேரவை.......
*ஜனார்த்தனம் ஆனையம்*
.............................................
அனைத்து கட்சி கூட்டத்தில் ஒரு சில கட்சிகளின் எதிர்ப்புக்கு இடையே அருந்ததியர்களின் இழி நிலையை புள்ளி விபரங்களோடு எடுத்துரைத்து உள் இட ஒதுக்கீட்டின் அவசியத்தை வலியுறுத்திய ஆதித்தமிழர் பேரவையும் அதற்கு துணை நின்ற முற்போக்கு இயக்கங்களின் நெருக்கடியின் காரணமாக தமிழக அரசு உள் இட ஒதுக்கீடு குறித்து ஆய்வு பணிகளை மேற்கொள்ள ஜனார்த்தனம் ஆணையத்தை அமைத்தது.உடனடியாக தமிழகம் முமுவதும் அருந்ததியர்களின் நிலை குறித்து புள்ளி விபரங்களோடு தொகுக்கப்பட்ட புத்தகத்தை ஜனார்த்தனம் ஆனைத்திடம் ஒப்படைத்து அருந்ததியர்களுக்கு உள் இட ஒதுக்கீட்டை வழங்குவதின் அவசியத்தை வலியுறுத்தியது ஆதித்தமிழர் பேரவை....
3சதவீத உள் இட ஒதுக்கீடு போதாது அதை 6சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டி மீண்டும் அன்றைய தமிழக முதல்வரை சந்தித்து வெறும் மக்கள் தொகையை மட்டும் கணக்கில் கொல்லாமல் சமூக நீதி அடிப்படையில் இழிவுகளையும் கொடுமைகளையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்று மூன்று சதவித இட ஒதுக்கீட்டை ஆறு சதவீதமாக உயர்ந்த வேண்டும் தமிழக அரசை வலியுறுத்தியது ஆதித்தமிழர் பேரவை.....
*இட ஒதுக்கீட்டை காக்க நீதிமன்றங்களிலும் சட்ட போராட்டம்.*
.......................,.......................... அருந்ததியர்களுக்கு வழங்கிய உள் இட ஒதுக்கீட்டை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்த போது அரசு தரப்போடு இனைந்து வழக்கை எதிர் கொண்டு வழக்கில் வெற்றி பெற்று உள் இட ஒதுக்கீட்டை காத்ததும் தற்போது உச்ச நீதி மன்றத்தில் நடக்கும் உள் இட ஒதுக்கீடு வழக்கில் பஞ்சாப் அரியான மாநில அரசோடு ஆதித்தமிழர் பேரவையும் இணைந்து இன்று வரை இட ஒதுக்கீட்டை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்..
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டுதான் இருப்பார்கள் என்பதற்கு ஓப்பாக இருந்து விடாமல், அருந்ததியர் சமூகமே, படித்த மேதாவிகளே, இளம் தலைமுறையினரே, எதிரியாக இருந்தால் இனம் கண்டு அழித்துவிடலாம், ஆனால் நம்மோடு இருந்து கொண்டு நம் சமூகத்தை ஏமாற்றும் இப்படியான போலிகளை இனம் கண்டு எச்சரிக்கையாக இருக்க விழிப்பாய் இருப்போம்!
உண்மையான போராட்ட வரலாறுகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்து சொல்வோம், இழிவை ஒழிக்க இடைவிடாது போராடுவோம்,
இதில் போட்டியோ பொறாமையோ கொள்ளாமல் போராட்ட குணம் கொண்ட, அடக்குமுறை நெருக்கடிகளுக்கு அஞ்சிடாத நீலப்படை வீரர்களை ஊக்கபடுத்துங்கள்
"இந்த தலைமுறையை தியாகத் தலைமுறையாக்குவோம்!
எதிர்காலத் தலைமுறையை விடுதலைத் தலைமுறையாக்குவோம்!" என்று இறுதிவரை முழங்கி இட ஒதுக்கீட்டுக்காவே உயிர் ஈகம் செய்திட்ட நெருப்பு போராளி நீலவேந்தனின் லட்சியத்தை நிறைவேற்றுவோம்.
.......................
சமூக விடுதலைப் பணியில். *ச.சு.ஆனந்தன்*

1 comment:

  1. மணிவண்ணன் IAS ஆக இருந்த காலத்தில் கூட்டுறவு வங்கிகளில் ஏராளமான தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களை பனியமர்த்தம் செய்த்துள்ளார் அவர் டெல்லிக்கு பனிமாற்றம் அடைந்த பின்னர் அவரால் பனி கிடைத்த அந்த தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை என்ன ஆனது உங்களுக்கு தெறியுமா

    ReplyDelete