அண்மையச்செய்திகள்

Tuesday 23 August 2016

மாமன்னருக்கு தலைவர் அதியமான் தலைமையிலான நீலச்சட்டை பட்டாளம் செலுத்தும் வீரவணக்கம் விண்ணை முட்டட்டும்.... மோடி அரசின் குலக்கல்வி மண்னோடு மண்ணாகட்டும்... ---- ச.சு.ஆனந்தன்


ஈராயிரம் ஆண்டுகளாக கல்வி மறுக்கப்பட்டு கல்வியை காதில் கேட்டால் ஈயத்தை காய்ச்சி ஊற்றவும் திருப்பி சொன்னால் நாக்கை அறுக்கவும் கூறி இருந்த இந்து மதத்தின் விழா எலும்பை உடைத்த புரச்சியாளரை படித்து ... .

குலக்கல்வித் திட்டத்தை இராஜாஜி போன்ற பார்பன பூனூல்கள் கொண்டு வந்த போது மண்ணெண்ணை கொண்டு விரட்டி அடித்த பெரியாரின் பாசறையில் வளர்ந்து ஆளும் அரசுகளின் அடக்குமுறை நெருக்கடிகளுக்கு அசராமல் ஆதித்தமிழர் பேரவை எனும் பேரியக்கத்தை கட்டமைத்து இன்று வரை விலை போகாமல், தடம் மாறாமல் உறுதி கொண்ட எஃகு மனிதராய் இமயம் போன்ற தலைவராய் அருந்ததிய இளைஞர்களின் நாடி நரம்புகளை சூடாக்கிக் கொண்டிருக்கும் நிகரில்லா தலைவர் அதியமான் அவர்களின் தலைமையில் நாளை நடக்கின்ற வீரவணக்க நிகழ்வு என்பது ஏதோ சடங்கிற்க்காவோ சம்பிரதாயத்திற்காவோ நடக்கின்ற நிகழ்வு அல்ல

வீரவணக்கம் விண்ணை முட்டட்டும்..!! மோடி அரசின் தேசிய கல்விக் கொள்கை மண்னை கவ்வட்டும்..!!
.......................................
தேசிய கல்விக் கொள்கை 2016 வரைவுக்கான சில உள்ளீடுகள்...........
பிரிவு எண் 3 என்ன கூறுகிறது எனில் இப்போது நடைமுறையில் இருக்கும் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களை தேர்வில் பெயிலாக்காமல் பாஸ் செய்கின்ற முறை மாற்றப் பட்டு அந்த வசதி ஜந்தாம் வகுப்புடன் நிறுத்தி கொள்ளப் படும் ஜந்தாம் வகுப்பிலிருந்து அடுத்த வகுப்புக்கு செல்ல தேர்வுகளில் தேர்ச்சி பெறுதல் கட்டாயமாக்கப் படும் ...........

இந்த முறை கடந்த காலங்களில் நடைமுறையில் இருந்து இருந்தாலும் கிராமப்புறங்களில் முதல் தலைமுறை மாணவர்கள்
கடந்த காலத்தில் இடைநிறுத்தம் அதிகமாக இருந்த காரணத்தால் அதை குறைப்பதற்கு எட்டாம் வகுப்பு வரை ஒரு மாணவரை கூடபெயிலாக்ககூடாது என்ற நடைமுறை அறிமுகப் படுத்தப் பட்டது.

இப்போது இருக்கும் நடைமுறையால் கல்வித் தரம் பாதிக்கப் படுகிறது என்று கூறி புதிய கல்வி முறையை மீண்டும் புகுத்தினால் பெருவாரியான முதல் தலைமுறை இரண்டாம் தலைமுறையாக கல்வி கற்கும் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட குடும்பங்களில் பிள்ளைகள் இடைநிற்றல் அதிகமாகும்

சுப்ரணியம் குழு அறிக்கை என்ன சொல்கிறது என்றால் பதினோறு வயதிலிருந்து தேர்வில் தோல்வியுற நேரும் குழந்தைகள் அவர்களுக்கேற்ற தொழில் பயிற்சிக்கு அனுப்பப்படுவர்.
ஆக இந்த அறிக்கை கூறுகிற வேதகாலக் கல்வி அதாவது குலக்கல்விக்கு மக்களை திருப்புவதும் சாதியத்தை நிலை நிறுத்தவும் பன்னாட்டு முதலாளிகளுக்கு மலிவு விலையில் வேலைக்கு ஆட்களைதயார்படுத்துவதும்தான் இந்த கல்விக் கொள்கையின் திட்டம்........

மாணவர் வருகை குறைவாக இருக்கும் பள்ளிகள் அருகருகாமையிலுள்ள பள்ளிகளுடன் இணைக்கப்படும்.
இதனால் மீண்டும் கிராமங்களில் பள்ளிகள் இல்லாத சூழலும் மாணவர்கள் பள்ளிகளுக்கு பழைய காலங்கள் போல் நீண்ட தூரம் செல்ல வேண்டிய தேவையும் ஏற்படும். இதனால் மீண்டும் கல்வியில்லாத தலைமுறை உருவாக நேரிடலாம்.

கலைத் திட்டம் அல்லது பாடத் திட்டம் புதுப்பித்தலும் தேர்வுமுறை சீர்திருத்தங்களும்
பாடத் திட்டங்களை மாற்றியமைக்கும் பொறுப்பு NCERT எனப் படும் தேசிய அளவிலான பாடத் திட்டக் குழுவிடம் விடப்பட இருக்கிறது......

பார்பன கூடாரமாக திகழும் NCERT எனப்படும் தேசிய அளவிலான குழு........
.................................................
இந்த குழுவிற்குக் கீழ் உள்ள பள்ளிகளில்தான் புரட்சியாளர் அம்பேத்கரை அவமதிக்கும் விதமான பாடங்கள்(நத்தை மீது அம்பேத்கர் அமர்ந்து செல்வதும் நேரு சவுக்கால் அம்பேத்கர் அவர்களை அடிப்பது போன்று.) இருந்ததையும் தமிழ்நாட்டில் நடந்த மொழிப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக பாட திட்டங்களை உறுவாக்கின....

கல்விக்கான உதவித் தொகை 10 இலட்சம் மாணவர்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப் பட்டு பொருளாதார அடிப்படையில் உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கிறது.
சாதி அடிப்படையிலான ஒதுக்கீடுகள் மற்றும் உதவித் தொகை பற்றி கள்ள மவுனம் காக்கிறது. இதன் மூலம் சாதி ரீதியான இடஒதுக்கீடுகளை எடுத்து விடுவதற்கான அடித்தளமாக இந்த கல்விக் கொள்கை அமையும்.....

பள்ளிகள் அருகாமையிலிருக்கும் ஆசிரமங்களிலிருந்து தங்களுக்கான வழிகாட்டுதலை பெற்றுக் கொள்ளும் என்று கூறுகிறது.
மதச்சார்பற்ற நாட்டில் இது போன்றதொரு கொள்கைத் திட்டத்தை வகுப்பதில் உள்ள R.S.S. இன் இந்து மத வெறிக்கொள்கை அப்படியே அடியொற்றி இருக்கிறது.

ஆசிரமங்களின் யோக்கியதை என்ன என்பதை நாம் அறிவோம் குழந்தைகளுக்கு அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் முறையை ஒழித்து விட்டு மூட நம்பிக்கையை வளர்க்கவே சாமியார்களால் முடியும் தேசிய திறன் வளர்த்தல் மற்றும் தொழில் முனைவுக் கொள்கை 2015 ல் கண்டுள்ளபடி திறன் வளர்க்கும் கல்வி இந்த பொதுக் கல்வித் திட்டத்துடன் இணைக்கப் படும்.

தேசிய திறன் வளர்த்தல் மற்றும் தொழில் முனைவுக் கொள்கை அடிப்படையான தொழிலாளிகளின் தேவை பற்றி கூறுகிறது உதாரணமாக செங்கல் சூளையில் வேலை செய்வது அழகு நிலையங்களில் வேலை செய்வது கட்டிடத் தொழில் மரத் தொழில் புகைப்படத் தொழில் இது போன்ற தொழில் பற்றிய படிப்புகளை பள்ளி அளவில் இணைக்க வேண்டும் என்று சொல்கிறது

யாரிந்த படிப்புகளுக்காக தேர்வு செய்யப் படுவார்கள் அடிப்படையில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மானவர்களை தவிர... மேலும்
மாணவர்கள் ஊதியம் பெறும் வேலைவாய்ப்பைப் பெற அல்லது சொந்த நிறுவனங்களைத் தொடங்க துறைத் திறன் மன்றங்களும் பள்ளி கல்லூரி நிருவாகமும் இணைந்து வழங்கும் சான்றிதழ்கள்
பள்ளிக் கல்வி முடிந்ததும் குறிப்பிட்ட அளவில் மாணவர்கள் வேலைகளுக்கு சென்று விட வேண்டும் என்ற அரசாங்கத்தின் திட்டமிடல் தெளிவாகத் உள்ளது..

ஆசிரியர் பயிற்சியும் மத்திய அரசின் பிடிக்குள் கொண்டு செல்லுவதற்கான பல பிரிவுகள் இடம் பெற்றுள்ளன. இதன் மூலம் ஆசிரியர் நியமனமும் மத்திய அரசின் கட்டுப்பட்டுக்குள் செல்லும் ஒரு வேளை இந்தி மட்டுமே தெரிந்த ஆசிரியர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள் மற்றவர்களின் நிலை கேள்விக்குறியே.....

இதில் 1 ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை மாநில மொழியில் (தமிழில்) பயில மாநிலங்கள் விரும்பினால் (??) படித்துக் கொள்ளலாம். ஆனால் 6 ம் வகுப்பில் என்ன மொழியில் பாடம் நடத்தப் படும் என்று சொல்லப் படவில்லை. மேலும் பள்ளிகளிலும் கல்லுரிகளிலும் சமஸ்கிருதம் கற்றுத் தரப்படும் என்று சொல்லப் பட்டிருப்பதுடன் சமஸ்கிருதத்தை வளர்க்க முயற்சி எடுக்கப் படும் என்று சொல்லப் பட்டிருக்கிறது.
கல்வியை கனிணிமயமாக்குவதற்கும் கற்றல் திறனை மேம்படுத்தவதற்கும் சமஸ்கிருதம் எதற்கு???இப்படியான குலக்கல்வி முறையை மண்னொடு மண்ணாக்க ஒரு பிடி நெல் மனியை கூட பரங்கியர்க்கு வரியாக தர மறுத்து பரங்கியர்களின் தலையை பந்தாடிய மாமன்னர் ஒண்டிவீரனாரின் மன்னில் வாளும் ஒண்டி வீரர் அய்யா அதியமான் அவர்களின் தலைமையில் வீர வணக்கம் விண்ணை முட்டட்டும் மோடி அரசின் குலக்கல்வி மண்ணை கவ்வட்டும்.............
என்றும் அய்யாவின் வழியில்
ச.சு.ஆனந்தன்....


No comments:

Post a Comment