அண்மையச்செய்திகள்

Wednesday 24 August 2016

மாமன்னர் ஒண்டிவீரன் வீரவணக்க நாள் தீர்மானங்கள் - ஆதித்தமிழர் பேரவை

மாமன்னர் ஒண்டிவீரன் வீரவணக்க நாள் தீர்மானங்கள் - ஆதித்தமிழர் பேரவை
"""""""""""""""""""""
முதல் இந்திய விடுதலை போராட்ட வீரர் நெல்லை நெற்கட்டான் செவ்வயல் பாளையத்தலைவர் ஒண்டிவீரன் நினைவு நாளான இன்று (20-8-2016) ஆதித்தமிழர் பேரவையின் சார்பில் பேரவையின் நிருவனத்தலைவர் இட ஒதுக்கீட்டு போராளி அய்யா அதியமான் அவர்களின் தலைமையில் பல்லாயிரக்கணக்கான நீலச்சட்டை தொண்டர்கள் வீரவணக்கம் செலுத்தினர்.
*நிகழ்வு விபரம்*
""""""""""""""""""""""""
காலை 11.30 மணியளவில் நெற்கட்டான் செவ்வயலில் வீரவணக்க அஞ்சலி செலுத்திய பின்னர் இளைஞர்கள் மத்தியில் *செத்தமாட்டை தூக்கமாட்டோம், மலக்குழியில் இறங்க மாட்டோம், மானத்தோடு வாழ்வதற்கு 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும்* என நான் அரசுகளை வலியுறுத்தி முழக்கமிட இளைஞர்களும் தொடர்ந்து முழக்கமிட்டு சபதமேற்றுக்கொண்டனர்.
பின்னர் நெல்லையில் உள்ள மணிமண்டபத்திற்கு மாலை 5.30 மணியளவில் வண்ணாரப்பேட்டையில் இருந்து ஊர்வலமாக சென்று மாமன்னர் ஒண்டிவீரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது, அங்கும் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டு இளைஞர்களும், பேரவை தொண்டர்களும் சபதமேற்றுக் கொண்டனர்.
_மாமன்னர் ஒண்டிவீரன் வீரவணக்க நிகழ்வில்_
_ஆதித்தமிழர் பேரவை
சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்_
*கண்டனத் தீர்மானம்*
************************
தீர்மானம்.1)
ஒவ்வொரு ஆண்டும் இயல்பாக நடக்க வேண்டிய சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் அவர்களின் நினைவு நாளான ஆகஸ்ட் 20-ம் தேதி முதல் தமிழக அரசின் வழிகாட்டுதலால் 144 தடை உத்தரவு போட்டு காவல்துறையினர் மக்கள் மத்தியில் கடும் அச்சுருத்தலை ஏற்படுத்துவது மக்கள் விரோத செயலாகும் இம் மக்கள் விரோதச்செயலை ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கின்றது,
முறையாக காவல்துறை அனுமதி கோரி *மத்திய அரசின் புதிய குலக்கல்விக் கொள்கைக்கு* எதிராக கோவில்பட்டியில் நடக்க இருந்த பொதுக்கூட்டத்திற்கு கடைசி நேரத்தில் அனுமதி மறுத்து கோவில்பட்டி காவல்துணை கண்காணிப்பாளர் வழங்கியுள்ள உத்தரவு மக்கள் உரிமை போராட்டத்தை நசுக்கும் செயலாகும். எனவே தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் நடத்தும் பொதுக்கூட்டம் மற்றும் மக்கள் உரிமைப் போராட்டங்களுக்கு தொடர்ந்து அனுமதி மறுத்து வருவதும் மக்கள் விரோத நடவடிக்கையே காட்டுகிறது இச்செயலையும் ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கின்றது.
*மத்திய அரசை வலியுறுத்தி*
""""""""""""""""""""""""""""""""""""""""
தீர்மானம்.2)
மத்திய மோடி அரசு கொண்டுவர இருக்கிற *புதிய கல்வி கொள்கையை* உடனடியாக கைவிட வேண்டும், புதிய கல்விக்கொள்கை என்ற பெயரில் *குலக்கல்வி* முறையைக் கொண்டு வந்து ஒடுக்கபட்ட மக்களின் பிள்ளைகளின் படிபைத் தொடரமுடியாமல் இடைமுறிவை ஏற்படுத்தி அம் மாணவர்களை மலம் அள்ளுவது, முடி வெட்டுவது, துணி வெளுப்பது, செருப்புத் தைப்பது போன்ற சாதி சார்ந்த தொழில்களில் ஈடுபடுத்த மோடி அரசு திணிக்க நினைக்கும் பார்பனிய சதியை முறியடிக்க எங்கள் அமைப்பு தனியாகவும், தோழமை இயக்கங்களுடனும் இணைந்து தொடர் நடவடிக்கைகளில் ஈடுபடும் என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம்.3)
பசுப்பாதுகாப்பு என்ற பெயரில் நாடு முமுவதும் நடந்தேரும் இந்து மதவெறியர்களின் கொலைவெறிச் சம்பவங்கள் மற்றும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை தடுத்து நிறுத்தி கடும் நடவடிக்கை எடுத்து தாழ்த்தப்பட்ட மற்றும் இசுலாமிய மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொள்வதோடு, இதைப்போன்ற கொடூரச் செயல்களை தடுத்து நிறுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய பிரதமர், மாறாக இனிமேல் தாக்குதல் நடத்துவது என்றால் என்னைத் தாக்குங்கள் என்று கூறியிருப்பது மக்களை ஏமாற்றும் செயலாகும், இப்படி மக்களை ஏமாற்றுவது மட்டுமில்லாமல் இந்து மதவெறியர்களை ஊக்கபடுத்தும் செயலாகவே இது அமைந்துள்ளது, இந்த செயலை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.
தீர்மானம்.4)
செத்த மாட்டைத் தூக்கமாட்டோம் மலக்குழியில் இறங்கமாட்டோம், மறுவாழ்வு பெற்றிட ஜந்து ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என குஜராத்தில் நடந்து வரும் ஒடுக்கப்பட்டடோர் உரிமை முழக்க போராட்டத்தை எங்கள் அமைப்பு வரவேற்று முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கின்றது,
மேலும் இதே போன்ற போராட்டத்தை தமிழகத்திலும் விரைவில் ஆதித்தமிழர் பேரவை தொடங்கும் என்று இக்கூட்டம் முடிவு செய்கிறது.
*தமிழக அரசை வலியுறுத்தி*
*******************************
தீர்மானம்.5)
நெல்லை மாநகரில் அமைந்துள்ள மணிமண்டபத்துக்கு ஒதுக்கப்பட்ட 64 செண்ட் நிலத்தையும், முழுப்பயன்பாட்டிற்கு எடுத்து பூங்கா மற்றும் குடிநீர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்துவதோடு, பொதுமக்களின் பார்வைக்கு ஒண்டிவீரன் பற்றிய குறிப்புகள் அடங்கிய கல்வெட்டுக்களை வைக்க வேண்டும் என்றும், அதேபோன்று குதிரையில் அமர்ந்தபடி உள்ள மாமன்னர் ஒண்டிவீரன் சிலையை மணிமண்டபத்துக்கு வெளியே வைக்க வேண்டும் எனவும், மண்டபத்துக்குள்ளும் சிலை நிறுவ வேண்டும் எனவும் தமிழக அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம்.6)
மாமன்னர் ஒண்டிவீரன் வாரிசுதாரர்களை கணக்கெடுத்து அவர்களுக்கு, அரசுக்குடியிருப்பும், உழவுநிலம் பென்சன் போன்றவைகளை உடனடியாக வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசைக் இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
நன்றி.
என்றும் அய்யாவின் வழியில்...
ஆ .நாகராசன்.
பொதுச்செயலாளர்
ஆதித்தமிழர் பேரவை
20.8.2016
திருநெல்வேலி

No comments:

Post a Comment