அண்மையச்செய்திகள்

Monday 29 August 2016

விருதுநகர் மாவட்டம் செப்டம்பர்.5 அன்று நடைபெற இருக்கும் வினாயகர் சதூர்த்தி விழாவில் அரசு முன்மொழிந்துள்ள சட்ட வழிகாட்டுத்தலை கடைபிடிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் ஆதித்தமிழர் பேரவை கோரிக்கை

விருதுநகர் மாவட்டம் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
கடவுளின் பெயரால் கலவரத் தீ மூட்டப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என, 'அய்யா' அதியமான் அவர்கள் வழிகாட்டுதலின் பேரில்..
29.8.2016 இன்று அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவரிடம் ஆதித்தமிழர் பேரவை மனு.
""""""""""""""""""""""""""""""""""""""""""

செப்டம்பர்.5 அன்று நடைபெற இருக்கும் வினாயகர் சதூர்த்தி விழாவில் அரசு முன்மொழிந்துள்ள சட்ட வழிகாட்டுத்தலை கடைபிடிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் ஆதித்தமிழர் பேரவை கோரிக்கை.
"""""""""""""""
அனுப்புனர்,
மாவட்ட செயலாளர்
___________ மாவட்டம்,
பெறல்,
மாவட்ட ஆட்சித்தலைவர், அவர்கள்,
_________ மாவட்டம்
செப்டம்பர்.5 அன்று நடைபெறவுள்ள வினாயகர் சதூர்த்தி விழாவின் போது தடைசெய்யப்பட்ட பிளாஸ்டர் பாரிஸ் விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க அனுமதிக்க கூடாது. காரணம் கடல் முகத்துவாரத்தில் மீன்கள் உற்பத்தியை பாதிக்கும் இந்த பிளாஸ்டர் பாரிஸ் நச்சு திரவம் கலந்த விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்,
செப்டம்பர் 5 அன்று நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில் இது போன்ற அத்துமீறல்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டுமெனவும், ஆதித்தமிழர் பேரவை கேட்டுக்கொள்கிறது.
மேலும் விநாயகர் சிலைகளை இயற்கை வளமான ஆறு, கிணறு, கடல்நீரை அசுத்தப்படுத்தும் ரசாயண கலவையைக் (Pastra) கொண்டு தயார் செய்வது மாசுக் கட்டுப்பாடு வாரியத்தால் தடை செய்யப்படுள்ளது. ஆனால் அதை கருத்தில் கொள்ளாமல் ரசாயணக் கலவை மூலம் தயாரிக்கப்படும் சிலைகளை பார்வைக்கு வைக்கப்படும் முன்னே தடைச்செய்ய வேண்டும்.
சரக்கு வாகனங்களில் மனிதர்களை ஏற்றுவது போக்குவரத்து காவல் சட்டப்படி குற்றமாகும். பக்தர்கள் என்ற போர்வையில் கூட்டம் கூட்டமாக சரக்கு வாகனங்களில் ஏறிக்கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலமாக போவதை தடைச் செய்வதோடு, அந்த வாகனங்களை பறிமுதல் செய்து அதன் போக்குவரத்து உரிமையை ரத்து செய்ய வேண்டும்.
இரவு பத்து மணிக்கு மேல் ஒலி பெருக்கியை உபயோகப்படுத்துவது சட்டத்திற்கு புறம்பானது. அவ்வாறு உபயோகப் படுத்தினால் அவற்றை பறிமுதல் செய்ய வேண்டும்.
செப்டம்பர் 5 அன்று நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில் இது போன்ற அத்துமீறல்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை அந்தந்த துறையின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவரைக் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு,
மாவட்ட செயலாளர்
ஆதித்தமிழர் பேரவை
____________ மாவட்டம்.
நாள்.29.8.2016
இடம்._________







No comments:

Post a Comment