அண்மையச்செய்திகள்

Monday 7 March 2016

தொடங்கட்டும் மீண்டும் ஒரு வரலாறு மீட்பு போர். - ச.சு.ஆனந்தன்.

தொடங்கட்டும் மீண்டும் ஒரு வரலாறு மீட்பு போர்.
"""""""""""""""""""""""""""""""""
ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் பண்பாட்டையும் வரலாற்றையும் அழித்தால் போதும்.
...................
சாக்கிய இனத்தின் வழித்தோன்றல்களான மண்ணின் மைந்தர்கள் பார்பனியத்தை ஏற்க மறுத்து புத்திஸ்ட்டுகளாக இருந்ததால், சக்கிலியர் என்றும், மாதாரி என்றும், பகடைகள் என்றும் பல்வேறு கூறுகளாக சிதறடிக்கப்பட்டனர்.
கிராமப்புறங்களில் பண்ணை அடிமைகளாக நகர்ப் புறங்களில் மலம் அள்ளும் தோட்டிகளாக ஆக்கப்பட்டனர். மாறக பார்பனியத்திற்கு பயன்பட்டவர்கள் சூத்திரர்கள் ஆக்கப்பட்டு அதிகாரம் செலுத்தும் ஆளும் வர்க்கமாக மாறி அதை அப்படியே இன்றளவும் தக்கவைத்து வருகின்றது.
அரசனே ஆனாலும் அறம் தவறி மக்களுக்கு எதிராக நின்ற போது மக்கள் பக்கம் நின்ற மதுரைவீரனை மாறுகால் மாறுகையை வெட்டி வரலாற்றை திரித்து சூழ்ச்சி வலை பின்னிய பார்பினியத்தின் எதிர் குறியீடாக களத்தில் நின்று போராடிய "வீரனை" கடவுளாக மாற்றி கருவறைக்குள் அடைத்தனர்.
வரலாற்றில் இனையில்லா மாவீரனின் படுகொலைக்கு நீதி கேட்டு வீதிக்கு வந்து எதிர் வினையாற்ற வேண்டிய சமூகத்தின் தன்னெழுச்சியை தடுத்து நிறுத்தி இழி சாதியாக்க பார்பனியம் செய்த சூழ்ச்சிதான் மதுரைவீரன் கடவுளாக மாற்றப்பட்டதன் அடிப்படைக் காரணம்.
சாதி ஆதிக்கத்தின் எதிர்க் குறியீடாக
சமூகநீதியின் அடித்தளமாக பார்க்க வேண்டிய மதுரைவீரனை, மதுரை மீனாட்சி கோயிலுக்கு வெளியே கம்பிக்குள்ளே அடைத்து காவல் தெய்வமாக நிறுத்தி வைத்து சாதிய படி நிலையை நிறுவி வெற்றியும் கண்டுள்ளனர்.
அதே அணுகு முறையைத்தான் இப்போது மாமன்னன் ஒண்டிவீரனுக்கும் நம் கண் முன்னே ஏற்படுத்தி இருக்கிறது பார்பினியத்தை உள் வாங்கியுள்ள தமிழக அரசு
தமிழக நிலப்பரப்பில் அந்நியனுக்கு அடிபணிந்து மண்ணுக்காவும், பொண்ணுக்காகவும் தமிழ் மன்னர்கள் தங்களுக்குள்ளேயே மோதிக்கொண்டு வெற்றி கண்டவன் மன்னன் என்றும் இராஜராஜன் என்றும் தனக்கு தானே பட்டத்தை சூட்டிக்கொண்டு தனக்கு தானே பட்டாபிசேகம் செய்து மகிழ்ந்தவனுக்கு வானுயர சிலை அமைத்து. மணிமண்டபமும் கட்டிக்கொடுக்கும் அரசுகள்.
மண்ணை மீட்கும் போரில் ஒரு மணி நெல்லைக் கூட அந்நியனுக்கு வரியாக தர மறுத்து, பரங்கியர்களின் தலையை ஒண்டியாக சென்று பந்தாடிய மாமன்னர் ஒண்டிவீரனுக்கு, மணிமண்டபம் கட்ட மறுத்த போது ஆதித்தமிழர்களின் தலைமகன் அதியமான் தலைமையிலான ஆதித்தமிழர் பேரவை அடுத்தடுத்த தொடர் போராட்டத்தின் வெற்றியாக நெல்லையில் எழுந்தது மாமன்னர் ஒண்டிவீரன் மணிபண்டபம்.
ஆனால் அதையும் அரசியல் காரணங்களுக்காக காலம் தாழ்த்தி திறக்காமல் அடம் பிடித்தது ஆளும் அ.தி.மு.க அரசு. அதன் காரணமாக ஆதித்தமிழர் பேரவையின் நீலச்சட்டை பட்டாளம் நடத்திய சட்டமன்ற முற்றுகையால், கதிகலங்கிப்போய் சமீபத்தில் கலைக்டர் மூலம் சிலை ஒன்றை நிறுவி திறந்து வைத்தது.
மணிமண்டபம் திறக்கப்பட்டதற்கான வெற்றி எண்ணுடையதுதான் என்று அமைப்புக்குள் பலப்பரிச்சை பார்க்கும் நிலையில், அது உண்மையாகவே வெற்றியா? வெள்ளையர்களை எதிர்த்து தாய் மண்னை காத்த முதல் மன்னனாக விடுதலை போராட்டத்தின் எதிர்ப்பு குறியீடாக நிலை நிறுத்தி மாதரிகளும் பகடைகளும் சக்கிலியர்களும் இவ்மண்னை ஆண்ட மண்ணின் மைந்தர்கள் தான் என்ற வரலாற்றை மறைக்க வேண்டியே ஒண்டிவீரனை சிலையாக்கி
பார்பன சூழ்ச்சியால் கருவறைக்குள் அடைக்கப்பட்டு கடவுளின் சிலை போல மணிபண்டபத்தின் உள்ளே வைத்து அடைத்து வெற்றி கண்டுள்ளது. பார்பன அரசு
இப்போது ஒண்டிவீரன் பூஜை செய்யும் கடவுளாகிப் போனார். இனி அவரின் வரலாறு மழுங்கடிக்கப்படும், வரும் தலைமுறைக்கு ஒண்டி வீரன் மாமன்னன் அல்ல மயிரை காணிக்கையாக கேட்கும் கடவுளாக கற்பிக்கப்படும்.
மறைக்கப்பட்ட வரலாற்றை மீட்டெடுக்கும் பணியில் இருக்கும் நம் கண் முன்பாகவே வரலாறு பறிபோவதை அறியாமல் அறியாமால் இன்னும் மவுனமாக இருக்க காரணம் என்ன?நாம் இன்னும் முமுமையாக வரலாற்றை படிக்க வில்லையா? என்ற சந்தேகம்தான் மனதில் எழுகிறது.
இப்படி வரலாறு முழுமைக்கும் வரலாற்றை இழந்த நாம், வரலாற்றை மீட்க போராடிக்கொண்டு இருக்கும் வேளையில், ஒரு பகடைக்கு குதிரையில் அமர்ந்த படி சிலை வைப்பதா? அவன் மன்னனாக இருந்தலும் சக்கிலியன் தானே! என்கின்ற சாதிய ஆதிக்கத்தின் காரணமாக மணி மண்டபத்தின் வெளியே நின்று வீர வரலாற்றை சொல்ல வேண்டிய சிலை. மணிமண்டபத்திற்குள் அடைக்கப்பட்டு இருப்பது. வரலாற்றை மறைக்க முயற்சிக்கும் சதி. அரசின் இச் சதிச் செயலை நாமும் அங்கீகரித்தால், சமூகத்திற்கு நாமும் சேர்ந்தே செய்யும் துரோகம் ஆகிவிடும்.
இதுவரை திறக்கப்பட்ட பிற மண்னர்களின் மணி மண்டபங்களில் உள்ள சிலைகள் அனைத்தும் வெளியே கம்பீரமாக இருக்கும் போது நமது மாமன்னர் ஒண்டி வீரனின் சிலை மட்டும் மணிமண்டபத்தின் உள்ளே வைத்து அவமானப்படுத்துவதை தலைவர் அதியமானின் தலைமையிலான ஆதித்தமிழர் பேரவையாகிய நாம் ஏற்றுக்கொள்ளக்கூடாது
மணிமண்டபம் திறக்கப்பட்டதை வெறும் செய்தியாக பார்பவன் கொண்டாடலாம்! உள்ளே அடைபட்டு கிடக்கும் ஒண்டிவீரனை மாமன்னராக பார்பவன் கொண்டாட முடியுமா?
தொடங்கட்டும் மீண்டும் ஒரு வரலாறு மீட்பு போர்.
என்றும் அய்யாவின் வழியில் ச.சு.ஆனந்தன்.



No comments:

Post a Comment