அண்மையச்செய்திகள்

Monday 21 March 2016

பேரவையின் நிறுவனர் தலைமையில்.. மேற்கு மண்டல காவல்துறை தலைவர் அலுவலம் முற்றுகை மேற்கு மண்டல ஐ.ஜி வழியாக தமிழக அரசிற்கு கோரிக்கை

பேரவையின் நிறுவனர் தலைமையில்..
மேற்கு மண்டல
காவல்துறை தலைவர் அலுவலம் முற்றுகை
மேற்கு மண்டல ஐ.ஜி வழியாக தமிழக அரசிற்கு கோரிக்கை.
""""""""""""""""""""""""""""""""""""""""""
*தொடரும் சாதிய ஆணவப் கொலைகளை தடுத்து நிறுத்தக் வேண்டும்,
*சாதிக் கலவரங்களை தூண்டிவிடும் கட்சிகள், இயக்கங்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
*படுகொலையான சங்கரின் குடும்பத்தாருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், என்பன குறித்து.

வணக்கம்,
கடந்த 13.03.2016 அன்று உடுமலைபேட்டையில் சாதிமறுப்பு காதல் திருமணம் செய்து கொண்ட பொறியாளர் சங்கர் கௌசல்யா தம்பதி மீது கோரப் படுகொலை தாக்குதல் நடத்தப்பட்டு, தலித் இளைஞர் சங்கர் படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டும், அவரது மனைவி கெளசல்யா படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வருகிறார்.
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 83 ஆணவப் படுகொலைகள் நடந்துள்ளது. இந்த படுகொலைகளிலேயே மிகவும் கோரமான முறையில் பட்டப்பகலில் நடந்துள்ள இந்த படுகொலையால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
இந்நிலையில் சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்குள்ளாகவே மீண்டும் சங்கரின் தம்பியை படுகொலை செய்வோம் என்று கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது என்று அவரது தந்தை நேற்று (20.3.2016) என்னிடம் கூறினார், கொலையாளிகள் மீண்டும் இவ்வளவு துணிவுடன் கடிதத்தின் மூலம் கொலை மிரட்டல் விடுத்திருப்பது, சங்கரின் குடும்பத்தார் மத்தியில் பெரிய அச்சத்தை உருவாக்கியுள்ளது.
படுகாயங்களுடன் தற்போது கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கெளசல்யாவை சந்தித்து சின்ன சின்ன உதவிகள் செய்வதற்கு கூட சங்கரின் குடும்பத்தருக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் சங்கரின் தந்தையார் கூறுகின்றார்.
எனவே,
1) வன்கொடுமைகள் தடுப்புச் சட்ட விதிகளின் படி கொலையாளிகள் அனைவருடைய சொத்துக்களையும் முடக்க வேண்டும்,
2) கொலைக்கு காரணமான குற்றவாளிகளுக்கு, திட்டம் தீட்டிக் கொடுத்ததாக கெளசல்யாவால் கூறப்படும், அவரது தாயார், மற்றும் தாய்மாமன் ஆகியோரையும் இந்த வழக்கில் இணைத்து உடனடியாக கைது செய்ய வேண்டும்,
3) முன்கூட்டியே பாதுகாப்பு கோரி மனுக்கொடுத்திருந்தும் அந்த மனு மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமல், சட்டப்படி புரிய வேண்டிய கடமையை புறக்கணித்து, மெத்தனம் காட்டிய அரசு வருவாய் அதிகாரிகள், மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.
4) மருந்தவமனையில் சிகிச்சை பெற்று வரும் கெளசல்யா தற்போது மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டு நிர்கதியாய் நிற்கின்றார், அவரை காப்பாற்றும் நோக்கில், அரசு முழு கவனம் செலுத்தி அவருடைய கல்வி, பாதுகாப்பு, அரசுப்பணி, ஆகியவற்றிற்கு உத்திரவாதம் அளித்திட வேண்டும்.
5) தொடரும் இதைப்போன்ற சாதிய ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்த தனிச் சட்டம் இயற்ற வேண்டும்,
7) ஆணவக்கொலைகளை தூண்டுவோர் மீது உரிய நடடிக்கை எடுத்து, அவர்களது கட்சி இயக்கத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்யவேண்டும்,
மேற்கண்ட கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மேற்கு மண்டல காவல்துறை தலைவர் ஆகிய தங்களை ஆதித்தமிழர் பேரவை கேட்டுக்கொள்கிறது.
நாள்.. 21.3.2016
இடம்.. கோவை
இவண்,
இரா.அதியமான்
நிறுவனர், ஆதித்தமிழர் பேரவை.













No comments:

Post a Comment