அண்மையச்செய்திகள்

Tuesday 19 January 2016

நாட்டின் மிகப்பெரிய அறிவியல் ஆராய்ச்சி "எழுத்தாளராக" வரவேண்டும் என எண்ணிய தலித் மாணவர் ரோகித் வெமுலா-வின் தற்கொலைக்கு காரணமான அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என ஆந்திர அரசை வலியுறுத்துவதோடு, ரோகித் வெமுலாவிற்கு நேர்ந்த இந்த கொடூரத்தை ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கின்றது.--அய்யா அதியமான் கண்டன அறிக்கை

நாட்டின் மிகப்பெரிய அறிவியல் ஆராய்ச்சி "எழுத்தாளராக" வரவேண்டும் என எண்ணிய தலித் மாணவர் ரோகித் வெமுலா-வின் தற்கொலைக்கு காரணமான அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என ஆந்திர அரசை வலியுறுத்துவதோடு, ரோகித் வெமுலாவிற்கு நேர்ந்த இந்த கொடூரத்தை ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கின்றது.--அய்யா அதியமான் கண்டன அறிக்கை
"""""""""""""""""""""""""
ஆந்திர மாநில ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில், அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் சமூகவியல் துறையில், பி.ஹெச்.டி. இரண்டாம் ஆண்டு படித்து வந்த தலித் மாணவரான ரோகித் வெமுலா, ஆந்திராவின் குண்டூர் பகுதியில் மிகவும் ஏழ்மையான தலித் குடும்பத்தில் பிறந்தவர்.

பல்கலைக்கழக ஆராய்ச்சிக் கல்வியை பயின்று வந்த இவர், மிகப்பெரிய அறிவியல் ஆராய்ச்சி எழுத்தாளராகவும் திகழ்ந்தவர். ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக அம்பேத்கர் மாணவர்கள் கூட்டமைப்பின் (ASA) தலைவராகவும் இருந்து ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான அநீதிகளை எதிர்த்து பல்வேறு போராட்டங்களிலும் தன்னை ஈடுபடுத்தியும் கொண்டவர்.

யாக்கூப் மேமனை தூக்கிலிட்டு கொலை செய்ததை கண்டித்து போராட்டம் நடத்திய காரணத்தினால், பி.ஜே.பி.யின் மத்திய இணைஅமைச்சர் பங்காரு தத்தாத்ரேயா.வின் அதிகார வற்புறுத்தலின் பேரில் இவருடன் சேர்த்து ஆறு மாணவர்களை பல்கலைக்கழகம் இடை நீக்கம் செய்து அறிவித்தது மட்டுமல்லாது, தங்கியிருந்த விடுதியை விட்டு வெளியேற்றி இவர்களுக்கு வந்து கொண்டிருந்த கல்வி உதவித்தொகைகள் அனைத்தையும் நிறுத்தியுள்ளது.

இதனால் மிகுந்த வேதனைக்கு உள்ளான ஆறு மாணவர்களும் பல்கலைக்கழக கட்டிடத்தின் எதிரில் தற்காலிக கூடாரம் அமைத்து தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நியாயம் கேட்டு ஜனநாய வழியில் போராட்டம் நடத்தி வந்துள்ளனர், இவர்களின் போராட்டத்தை கொச்சைப் படுத்தியும், குழப்பங்களை ஏற்படுத்தியும் பி.ஜே.பி.யின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.யைச் சேர்ந்தவர்கள் மிகவும் நெருக்கடி கொடுத்து எதிர் போராட்டம் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் மிகவும் மன அழுத்தத்திற்கு உள்ளான ரோகித் வெமுலா
கடந்த 15.1.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது நண்பர் தங்கியிருந்த விடுதி அறையில் தற்கொலைக்கான காரணம் அடங்கிய கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார், அவர் எழுதிய கடித வரிகளில் "எனது பிறப்புதான்! எனக்கு நேர்ந்த விபத்து" என்று வேதனை கொப்பளிக்கும் காவிய நடையில் எழுதிய எழுத்து நமது நெஞ்சங்களில் குருதியை கொப்பளிக்க வைக்கிறது.

மாணவன் தற்கொலை தொடர்பான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு மத்திய இணைஅமைச்சர் பங்காரு தத்தாத்ரேயா, பல்கலைக்கழக துணைவேந்தர் அப்பாராவ், ஆந்திர மேலவை உறுப்பினர் ராமச்சந்திரராவ், மாணவர்கள் சதீஷ் குமார், ராமகிருஷ்ணா ஆகியோர் மீது, தற்கொலைக்குத் தூண்டுதல் மற்றும் SC/ST வன்கொடுமை தடுப்பு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாணவர் ரோகித் வெமுலா தற்கொலைக்கு காரணமான மத்திய இணை அமைச்சர் பங்காரு தத்தாத்ரேயா உள்ளிட்ட குற்றவாளிகளை, உடனடியாக கைது செய்து சிறையிலடைக்க வேண்டும் என ஆந்திர அரசை ஆதித்தமிழர் பேரவை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்ததிலிருந்து, இந்துமத வெறியர்களால் பயங்கர நிகழ்த்தப்படும் இது போன்ற எண்ணற்ற அநீதிகளுக்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும் என வலியுருத்துவதோடு, இந்த கோர சம்பவத்தை ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கின்றது.

இவண்
இரா.அதியமான்
நிறுவனர்,
ஆதித்தமிழர் பேரவை.
19.1.2016

No comments:

Post a Comment