அண்மையச்செய்திகள்

Tuesday 12 January 2016

தனிசாதி அடையாளம்.. தமிழர்களின் அடையாளமா? -- ச.சு.ஆனந்தன்

தனிசாதி அடையாளம்..
தமிழர்களின் அடையாளமா?
""""""""""""""""""
கள்ளர் மறவர் அகமுடையார் இம் மூன்று சாதிகளைச் சார்ந்தவர்கள் மட்டும்தான் வீரமான தமிழர்களா?
மற்ற சாதியினர் வீரத்தமிழர்கள் இல்லையா?
தமிழக அரசியல் வரலாற்றில் கள்ளர் மறவர் அகமுடையார் இந்த மூன்று சாதிகளின் நலனே ஒட்டுமொத்த தமிழர்களின் நலனாகவும் அவர்களுடைய சாதிப் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் ஒட்டுமொத்த தமிழர்களின் பண்பாடாகவும், கலாச்சாரமாகவும் இங்குள்ள அரசியல் கட்சிகளால் திட்டமிட்டு பரப்பப்படுகின்றது.
மாநில கட்சியிலிருந்து மத்திய கட்சிகள் வரை அனைவரும் முக்குலோத்தோருடைய சாதிய நலனில் மட்டும் அக்கரை செலுத்தும் விதமாக முத்துராமலிங்கத்தேவர் நினைவு நாளை அரசு விழாவாக கொண்டாடுவதும்.
ஆளும் அண்ணா.தி.மு.க தொடங்கி அனைத்து கட்சிகளும் தேவர் சமூகத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அமைச்சர்களாக அரசு அதிகாரத்தில் பங்கேற்க வைப்பதும், இதர சாதியினரை புறக்கணிப்பதும்,
தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. முக்குலத்தோரைத் தவிர இதர சாதியினர் இரட்டை இலைக்கு வாக்களிப்பது இல்லையா? அல்லது அவர்களின் வாக்குகள் எந்த கட்சிக்கும் தேவையில்லையா?
ஆண்ட பரம்பரை என்று பழம்பெருமை பேசும் ஆண்டை சாதிகள் கூட அடக்கியே வாசிக்கின்றது.
தமிழ் தேசியம் பேசுகிற தேசிய "வியாதிகள்" தனித்தமிழ்நாடு கேட்டு போராடிய தந்தை பெரியாரை திராவிட வந்தேரி என்று கொச்சைப் படுத்துவது, தேசியமும் தெய்வீகமும் எனது இரண்டு கண்கள் என்று இந்திய தேசியத்தை உயர்த்திப் பிடித்த முத்துராமலிகத்தேவரை தமிழனத்தின் அடையாளமாக துதிபாடி உயர்த்திப் பிடித்து தமிழ்தேசியத்தை கட்டமைக்கின்றனர்
ஒரு சாதி ஆதிக்கத்தை நிலைநாட்டும் ஜல்லிக்கட்டு விளையாட்டை ஒட்டுமொத்த தமிழர்களின் வீர விளையாட்டாக மாற்றிக்கொண்டே வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு தமிழர்களின் விளையாட்டு என்றால் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது போல் தமிழகம் முமுவதும் கொண்டாடப் படுவதில்லை ஏன்?
தென் மாவட்டத்தில் ஒரு குறிப்பிட்ட சாதி, மாவட்ட அளவில் கூட அல்ல ஒரு குறிப்பிட்ட பகுதியில் தன்னுடைய சாதி ஆதிக்கத்தை நிலை நிறுத்த ஜல்லிக்கட்டு நடத்துவது எப்படி ஒட்டு மொத்த தமிழர்களின் விளையாட்டாக மாறும் தென் மாவட்டத்தில் வசிக்கும் இதர மக்கள் தமிழர்கள் இல்லையா? இல்லை வீரமற்றவர்களா?
தென் மாவட்டத்தை தவிர்த்து வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் ஜல்லிக்கட்டு நடத்துவதில்லை என்பதால் அவர்கள் வீரமான தமிழர்கள் இல்லை என்று, ஜல்லிக்கட்டு ஆதரவானவர்கள் கருதுகிறார்களா?
காளை வளர்ப்பில் தரணி எங்கும் தனி அடையாளத்தை உருவாக்கி இன்றைக்கும் தனி அடையாளத்தோடு விளங்கும் மேற்கு மண்டல காளைகள், குறிப்பாக காங்கயம் காளைகள் வளர்க்கும் பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதில்லை என்பதால் மேற்கு மண்டலத்தில் வசிக்கும் மக்கள் தமிழர்கள் இல்லை என்றோ அல்லது வீரம் இல்லாதவர்கள் என்றோ ஜல்லிகட்டுக்கு ஆதரவாளர்கள் கருதுகிறார்களா?
ஜல்லிக்கட்டு க்கு ஆதரவாக பேசியும் போராடியும் வரும் கட்சிகளும் பதில் கூறுங்கள்!
என்றும் அய்யாவின் வழியில் ச.சு.ஆனந்தன்

No comments:

Post a Comment