அண்மையச்செய்திகள்

Monday 14 December 2015

டாஸ்மாக் இல்லாத தமிழகம் உருவாக இனைந்து குரல் கொடுப்போம் வாரீர் வாரீர் ----- மா.ஈழவேந்தன் ஆதித்தமிழர் பேரவை

இன்று பல உழைக்கும் மக்களை குடிக்க வைத்து அதன் மூலம் வரும் வருமானத்தை வைத்து அரசாங்கத்தை நடத்தும் கேவலம் தமிழகத்தில் மட்டுமே நடக்கிறது
அதுமட்டுமல்ல ஏழைத்தாய்மார்களை நடுத்தெருவுக்கு கொண்டு வந்த பெருமை டாஸ்மாக்கையே சேரும்,,
ரேசன் கடையில் கூட்ம் இருக்குதோ இல்லையோ டாஸ்மாக்குல கண்டிப்பாக கூட்டமாக இருக்கு

குடியினால் சாலைவிபத்து மரணங்கள் அதிகம்
அதனால் இன்று எத்தனை குடும்பங்கள் நிராயுதபானியாக நிற்கிறது தெரியுமா....

பல சமூக குற்றங்கள் நிகழ மது முக்கிய பங்காற்றுகிறது

வழிப்பறி,சங்கிலி பறிப்பு,கற்பழிப்பு கொலை போன்ற செயல்களை நிகழ்த்துமுன் குடித்து விட்டுதான் செய்கிறார்கள்

 இந்த குடிகாரர்களை நம்பி முக்கிய தினங்களில் அதிக அளவு மதுவிற்பனை செய்யவும் அரசு தவறுவதில்லை..மக்களை டாஸ்மாக் ஊழியர்களாக மாற்றி  வைத்துள்ள அரசாங்கம் கேவலமானது இல்லையா?

மதுவின் மூலம் வரும் பணம் நாட்டுக்கு அவமானம்  இல்லையா?

ஆகவே மதுவிலக்கை கொண்டுவர போராடுவோம் ......

 டாஸ்மாக் இல்லாத தமிழகம் உருவாக இனைந்து குரல் கொடுப்போம்
வாரீர் வாரீர்
"""""""""""""""""""""""""""
-மா.ஈழவேந்தன்
ஆதித் தமிழர் பேரவை

No comments:

Post a Comment