அண்மையச்செய்திகள்

Sunday 20 December 2015

அம்மாவின் ஆனைக்கினங்க கொலைக்களமாக மாறும் தலை நகரை , போராட்ட களமாக மாற்றி தலை முறை தலை நிமிர-ஆதித்தமிழர்களின் அரசியல் முகவரி அய்யா அதியமான் அழைக்கிறார் --- ஆனந்தன்----ஆதித்தமிழர் பேரவை

அம்மாவின் ஆனைக்கினங்க கொலைக்களமாக மாறும் தலை நகரை , போராட்ட களமாக மாற்றி தலை முறை தலை நிமிர-ஆதித்தமிழர்களின் அரசியல் முகவரி அய்யா அதியமான் அழைக்கிறார்  ---
ஆனந்தன்----ஆதித்தமிழர் பேரவை


 சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியது போல அம்மாவின் ஆனைக்கினங்க பொய்த மழையும் .மழை வெள்ளத்திலிருந்து மக்களை காக்க அம்மாவின் ஆனைக்காக காத்திருந்த அரசு நிர்வாகமும் .....

செம்பரம் பாக்கம் ஏரி வெள்ள மும் வெள்ளத்தால் ஏற்பட்ட குப்பை மேடுகளும் அடித்து வரப்பட்ட சாக்கடை கழிவுகளும் ......... அம்மாவின் ஆனைக்காக காத்திருந்த அரசு நிர்வாகத்திற்கு அம்மாவின் ஆனை வரவில்லை வீட்டுக்குள்ளே சாக்கடை கழிவுகள் தான் வந்தது..........

அம்மாவின் ஆனைக்கினங்க அமைச்சர்களும் அவர்களின் அடிவருடிகளும் ஒரு நாள் இரவில் தொகுதி முமுவதும் பணப்பட்டுவாட செய்வதும் . விடாத மழை வெள்ளத்தில் விடிய விடிய பொருட்களுக்கு அம்மாவின் ஸ்டிக்கர் ஒட்டுவதும் தான் நடந்தது......

அம்மா ஆனையிட வில்லை மழை வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட பிணங்களுக்கு கணக்கில்லை

அம்மாவின் ஆனைக்கினங்க அனைத்து கோயில்களிலும் அர்ச்சனை நடத்துவதும் அமைச்சர்கள் அனைவரும் மண் சோரு தின்று மண்ணில் உருள்வதும் வேல் குத்துவதும் காவடி எடுப்பது ............

அம்மாவின் ஆனை வரததால் மழை வெள்ளத்தில் பாதித்த மக்களை சாக்கடை கழிவுகளில் தவிக்க விட்டு தலைமறை வானதும்

அம்மாவின் ஆனைக்கினங்க காவல் துறை ஏவல் துறையாக மாறுவதும் ஏவலின் உச்சமாக திரை அரங்குகளுக்கும் டாஸ்மார்க் கடைகளுக்கும் காவல் காப்பதும் இடைத்தேர்தலில் விடுமுறை எடுத்து பிரச்சாரத்திற்கு செல்வதும் அம்மையாருக்கு எதிராக பேசினால் அடக்கு முறை செய்வதும் அடியால் வேலை பார்ப்பதும் ....... ...

அம்மாவின் ஆனை வரவில்லை என்றால் அடித்து செல்லப்படும் மக்களை காக்காமல் வேடிக்கை பார்பதும் .........

அரசு விளம்பரத்தில் கிடைக்கும் பணத்திற்கு பத்திரிகை நடத்தும் ஊடகங்கள் அம்மாவின் புகழ் பாடுவதும் சினிமாகரனின் அந்தரங்க வாழ்க்கையையும் நடிகர் சங்க தேர்தல்களையும் விடிய விடிய ஒளிபரப்பி மயிர் பிளக்கும் விவாதம் நடத்தும் ஊடகங்கள்

மழையை பற்றியோ வெள்ளத்தை பற்றியோ வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை பற்றியோ அவர்களின் பாது காப்பு பற்றியோ விவாதம் நடத்த வில்லை

நடு நிலை நாளேடுகளும் ஊடக அறம் பேசும் ஊடகங்களும் அரசின் அறம் கூறித்து பேசமால் ஊமைகளாக மாறிப்போயின

தலை கவசத்திற்கு தன் முனைப்போடு நீதிப்பரிபாலனை செய்யும் நீதித்துறை மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக நீதி வழங்கும் போது மட்டும் அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட மாட்டோம் என சட்ட புத்தக சந்துக்குள் ஒடி ஒழிந்து கொள்கிறது...........

திரைப்படங்களில் தன்னுடைய சொத்தை எல்லாம் ஏழைகளுக்கு எழுதிக்கொடுத்தே சொந்து சேர்த்த நடிகர்களும் திரையில் இரண்டரை மணி நேரத்தில் உள்ளூர் பிரச்சனையில் இருந்து உலகப் பிரச்சனைகள் வரை முடித்துக் கொடுக்கும் நடிகர்கள் வெள்ளம் வந்த போது வெளிநாடு சென்று விட்டனர்

நடிகர் சங்க தேர்தலில் தமிழனுக்கு வாக்களிக்க வில்லை என்றால் வாக்களிக்காதவன் தமிழனுக்கு பிறந்தவன் இல்லை என்ற தமிழன்
தமிழன் பாதிக்கப்பட்ட போது அன்னிய மொழிப்படங்களில் நடித்துக் கொண்டு இருந்தான்

தமிழ் தேசியம் பேசிய தலைமைகள் எல்லாம் தலை நகரம் பாதிக்கப்பட்ட போது தலைமறைவாகிப் போனார்கள்

கட்சத் தீவை மீட்க போராட்டம் நடத்தியவன் எல்லாம் சென்னை தீவான போது பாதிக்கப்பட்ட மக்களை காக்க போராட்டம் நடத்தவில்லை

சென்னை மக்களும் கடலூர் மக்களும் இவர்களின் கட்சி திட்டத்தின் படி தமிழர்கள் இல்லை என்றாகிப் போனார்கள்

சாதிய ஆதிக்கத்தை நிலை நிறுத்த மாவட்டம் தோறும் மாநாடு நடத்தியவர்கள் தன் சொந்த சாதி பாட்டாளிகளை கூட காப்பற்ற வரமால் பாட்டாளி சொந்தங்கள் அனைத்தும் படுத்து துங்க சென்று விட்டனர்

தூய்மை இந்தியா கீளின் இந்தியா பற்றி பேசி நடிந்த அரை டவுசர் சிந்தனை வாதிகள் டவுசர் நனைந்து விடும் என்பதற்காக டவுசர் நளையாமல் விடுகளில் படுத்துக் கொண்டனர்

மாடுகளை காக்க போராட்டம் நடத்திய பூணூல் சிந்தனை கும்பல்களும் கலாச்சாரம் காக்க போராடிய காவிகளும் காவி கட்சி தலைவர்களும் காணாமல் போனர்கள் காட்சி ஊடகங்களில் மூச்சு விடமால் முக்கி பேசி கட்சி வளர்க்கும் கட்சிகள் ஓசை இல்லால் போனார்கள்

உலகத்தமிழனத்திற்காக போராட்டம் நடத்தும் உள்ளுர் தமிழன் போதை பொருட்களை தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமையாளரான தன்னுடைய மகனை கண்டிக்க வக்கில்லாமல்

சென்னை வெள்ளத்தால் அனைத்து மக்களும் பாதிப்பட்டிருப்பது போலவே சென்னையில் பணி புரியும் துப்பரவு பணியாளர்களும் அவர்களின் குடுப்பங்களும் பாதிப்படைந்து இருக்கும் என்கின்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல்

மழை வெள்ளத்தில் தன்னுடைய அத்தனை வாழ்வாதங்களை இழந்தும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நோய் தொற்று ஏற்று விடாமல் தடுக்க

எந்த விதமான உபகரணங்களும் இல்லாமல் குப்பைகளை யும் சாக்கடைகளையும் சுத்தம் செய்யும் துப்புரவு பணியாளர்களை பார்த்து சுத்தமாக பணி செய்ய வில்லை பிளிச்சிங் பவுடர் போட்டு ஏமாற்று கிறார்கள் என்று பொங்கும் வைகோ வின் சிந்தனை சாதிய சிந்தனையே .....

.தன்னுடைய அன்புச் சகோதரி ஜெயலலிதா அம்மையார் துப்புரவு பணியாளர்களுக்கு பணி செய்ய வழங்க வேண்டிய உபகரணங்கள் வழங்கப்படததையோ .முறையான உணவோ குடிநீரோ தங்க இடமோ கொடுக்கப்படமால்

தினமும் இருபது மணி நேரம் கட்டாய பணி செய்து வைக்கப்பட்டதன் காரணமாக ஈரோட்டை சேர்ந்த பழனிச்சாமி என்கின்ற துப்புரவு பணியாளர் இறந்ததற்கு காரணமான ஜெய அரசை கண்டிக்கும் யோக்கியதை இருக்கிறதா .......

விளிப்பு நிலை மக்களின் விடியலுக்காக போராட்டம் நடத்தும் ஏழுச்சி தமிழர் துப்புரவு பணியாளர்களை ஆடு மாடுகளை போல அண்டை மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும் என்று எழுச்சியுரையாற்றுகிறார் ..........

வர்க வேறுபாடுகளுக்காக போராட்டம் நடத்தும் செம்படை தோழர்கள் துப்பரவு பணியாளகளுக்கு பாதிப்பு என்றால் மட்டும் தூரமாக விலகிச் செல்கின்றனர் .......

அம்மாவின் ஆனைக்கு இனங்க மாவட்ட ஆட்சித்தலைவர் கள் எல்லாம் அ.தி.மு.கவின் மாவட்ட செயலாளர்கள் போல செயல்பட்டு மாவட்டம் முமுவதும் இருக்கும் துப்பரவு பனியாளர்களை போலியான வாக்குரிதிகள் கொடுத்து ஆடு மாடுகளை போல (மாநகராட்சி வண்டிகளிலேயே சென்னைக்கு அழைத்து செல்வதும் ............

அம்மாவின் ஆனை வரதாதல் துப்புரவு பணியாளர்களுக்கு முறையான உணவோ குடி நீரோ தங்குவதற்கு இடமோ வேலைக்கு தேவையான உபகரணங்களோ கொடுக்கப் படாமல் தலை நகரம் கொலை நகரமாக மாறுவதும்

அம்மாவின் ஆனைக்கினங்க i.A,s,களும் அரசு அதிகாரிகளும் அவர்களின் அடிவருடிகளும் அதிரடியாக செயல்பட்டு கூவம் நதிக்கரை ஓரம் குடிசை போட்டவனை விரட்டி அடிப்பதும்

அம்மாவின் ஆனை வரததால் அனையின் குறுக்கே கல்லூரிகளும் தொழிச்சாலைகளும் கட்டியவனுக்கு காவல் காத்து ஏவல் பணி செய்வதும் .......

என தொடர்ச்சியாக அருந்ததியர் மக்களின் விரோத போக்கை கண்டிக்கும் முகமாக எதிர்வரும் 2016 சட்ட மன்ற தேர்தலில்
அம்மாவின் ஆட்சிக்கு அய்யா அதியமானின் அரசியல் கொண்டு முடிவுகட்டுவோம் ஆதித்தமிழர் களாக அணியாவோம் தலைமுறை தலை நிமிர ஆதித் தமிழர்களின் தலை மகன் அய்யா அதியமான் தலைமையில் டிசம்பர் --23--ல் தலை நகரில் கூடுவோம்

என்றும் அய்யாவின் வழியில் ஆனந்தன் ...............

No comments:

Post a Comment