அண்மையச்செய்திகள்

Thursday 17 December 2015

சாதியும் மதமும் தமிழர்களை பிரிக்கும் சாபக் கேடு! மனிதர்களை பிரிக்கும் பீடை!-------பிரபாகரன் --- ஆதித்தமிழர் பேரவை

சாதியும் மதமும் தமிழர்களை பிரிக்கும் சாபக் கேடு! மனிதர்களை பிரிக்கும் பீடை!
மனசாட்சியே இல்லாமல் இந்த பார்ப்பனிய அரசு சாதிய முறையில் மீட்டு வந்து மீண்டும் எம்முள் திணிக்கிறது! தமிழக உறவுகளே விழித்தெழுங்கள்!
வெள்ளத்தில் காணாமல் போன "சாதி" "மத" பேதங்களை மீண்டும் மீட்டு எடுத்து வந்து தமிழர்களுக்கு இந்த பார்ப்பனிய அரசு பூட்டியுள்ளது.
சென்னையில் சேர்ந்த சுமார் ஒரு லட்சம் டன்னுக்கும் அதிகமான குப்பைகளை அள்ள தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து 9977 துப்பரவு தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு ஒரே நாளில் 55 ஆயிரம் டன் குப்பைகள் அகற்றப்பட்டது'
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெருக்களில் கரையொதுங்கிய நுண்கிருமிகள் பெருக்கெடுத்த துர்நாற்றம் வீசும் கழிவுகளை அதனால் உயிருக்கே பாதிப்பு ஏற்படும் என்று உணர்ந்தும் சென்னை வாழ் மேட்டுக் குடி மக்கள் தாம் இறங்கி வந்து சுத்தம் செய்ய தயங்கும் போது இதற்காகவே மாநிலம் முழுவதிலும் இருந்து அருந்ததிய சமுகத்தை சேர்ந்த தொழிலாளர்களை அரசே நிர்ப்பந்தித்து இந்த பணியில் ஈடுபடுத்தப்படுவது மாபெரும் வன்கொடுமை!!!
" மேட்டுக்குடி வர்க்கம் தன் உயிரே போனாலும் இந்த பணியை இந்த அருந்ததியர்கள் தான் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. இந்த ஒரு தொழிலில் மட்டும் தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 100 % போட்டியில்லாத இட ஒதுக்கீடு உள்ளது."
அந்தந்த பகுதி மக்களே ஒருங்கிணைந்து இந்த பணியை செய்ய முடியாதா? ஏன் மாநாட்டிற்காக கூட்டத்தை கூட்டும் ஆளும் கட்சியும் எதிர் கட்சிகளும் தன் தொண்டர்களை அலை கடலென திரட்டி வந்து நிவாரண உதவிகளை செய்ய முடியாதா? இதற்கு ஏன் அருந்ததிய சமுகத்தினர் மட்டும்?
சென்னையை சுத்தபடுத்தி விடலாம் ஆனால் உங்கள் மனங்களில் உள்ள கழிவுகளை யார் சுத்தம் செய்வது? எத்தனை நூற்றாண்டுகளை கடந்தாலும் இந்த துர்நாற்றம் சென்னையின் சரித்திரத்தில் எதிரொளிக்கும்! இந்த வெள்ளத்தில் சாதி மதம் காணாமல் போனதாக முகநூல் பதிவுகளை கண்ட போது நெஞ்சம் உண்மையில் நெகிழ்ந்து தான் போனது. ஆனால் சாதீயம் என்பது வெள்ளம் வடிந்ததும் தேங்கிய கழிவாய் அப்படியே உள்ளது.
என்னுடைய இந்த வலி மனசாட்சி உள்ளவர்களுக்கு புரியும் என்று நம்புகிறேன்."
******பிரபாகரன்******
ஆதித்தமிழர் பேரவை++++

No comments:

Post a Comment