அண்மையச்செய்திகள்

Saturday 12 December 2015

துப்புரவு பணியாளர்ளுக்கு ஒரு பிரச்சினை என்றால், உடனே! அதியமானுக்கு அழைப்பு கொடுக்கும் சமூகவாதிகளின் மனநிலை! ---பொதுச்செயலாளர் ஆ.நாகராசன்

இப்பதிவு
விமர்சனம் அல்ல நிதர்சனம்.
~~~~~~~~~~~~
துப்புரவு பணியாளர்ளுக்கு ஒரு பிரச்சினை என்றால், உடனே! அதியமானுக்கு அழைப்பு கொடுக்கும் சமூகவாதிகளின் மனநிலை!

தூய்மைத் தொழிலாளர்கள் மட்டும் இல்லையென்றால்! நானும், நீயும் எப்படி? சுகாதாரமாய் வாழமுடியும். என மனதை பிசைய வைப்பவர்களின் மனநிலை!

அர்பணிப்புடன் பணியாற்றும் இவர்களை மதிக்கவும், மரியாதை கொடுக்கவும் தெரியாதவர்கள் மனிதர்களே! இல்லை என! கோபம் கொண்டு பகுத்தறிவுப்பாடம் நடத்துபர்களின் மனநிலை!

குப்பைகளை கூட்டி பெருக்குகின்றோம் பாருங்கள்! என்று புகைப்படத்துடன் விளக்கம் கொடுத்து, வாய்ப்பிருந்தால் நீங்களும் வாருங்களேன்! என்று அழைப்பு விடுக்கும் சிகப்புவண்ண சிந்தனையாளர்களின் மனநிலை!

கையுறையும் காலுறையும் வழங்கு! அடிப்படை தேவைகள் அனைத்தையும் பூர்த்திசெய்! என கோரிக்கை மனு கொடுக்கும் சங்கங்களின் மனநிலை!

துன்பப்படும் தூய்மை தொழிலாளர்களின் துயரங்களை தோலுறித்துக்காட்டி தங்களின் டி.ஆர்.பி யை உயர்த்திக்கொள்ளும் தொலைக்காட்சிகளின் மனநிலை!

இழிதொழில் என்று தெரிந்தும்! எதற்கு செய்யவேண்டும் இவர்கள், என எகத்தாலம் பேசிடும் படித்தவர்களின் மனநிலை!

நடிகர் சிவக்குமாரின் மகன் நடிகர் கார்த்திக் கூட நமது பகுதி குப்பைகளை நாமே! அள்ளிக்கொள்ளலாம் என்று பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்து களத்தில் இறங்கும்போது!
தலித் மக்களின் எழுச்சி காவலர்கள் என்று சொல்லிக்கொள்ளும் தலைவர்கள் துப்புரவு தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் எனவும், தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலத்தில் இருந்தும் அழைத்து வரவேண்டும் எனவும் அரசிடம் கோரிக்கை வைக்கும் மனநிலை!

தவ்ஹித் சமாத் அமைப்பை சேர்ந்த இசுலாமியர் இரண்டாயிரம் பேர், யாரையும் எதிர்பார்க்காமல் குப்பைகளை கூட்டி அள்ளும்போது!
இப் பிறவியில் மலம் அள்ளுபவர்கள், இறந்தபின்பு மோட்ஷத்திற்கு செல்வார்கள் என்று சொல்லும்! "மோடி" கூட்டத்தின் மனநிலை!

இது என்ன மனநிலை?
"""""""""""""""""""""""""""""""""
குப்பைக்கழிவுகளை சுமப்பதோடு! இழிவுகளையும் சேர்த்தே! சுமக்கின்றான்!
"சக-மனிதன்" என்ற சஞ்சலமில்லாமல், உபதேசம் மட்டுமே! செய்துவிட்டு ஒதுங்கிக்கொள்ளும் மனநிலை! இது என்ன? மனநிலை!

இந்த கேள்விகளை நாம், எழுப்பினால் உடனே! கோபம் கொப்பளித்து, இத்தொழிலை நாங்களா? செய்ய சொன்னோம்! இல்லை நாங்கள் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா? என்று கூட கேட்கத்தோன்றும்.

இத்தொழிலை எந்த மனிதனும் செய்யக்கூடாது!
இப்படி ஒரு தொழிலே இருக்கக்கூடாது!
இது ஒரு தொழிலே இல்லை!
என்பதே, எமது நிலைபாடு.

இரட்டைக்குவளையை ஒழிப்பது, இரட்டை சுடுகாட்டை எதிர்ப்பது, கோவிலுக்குள் நுழைய உரிமை கோருவது, இடஒதுக்கீட்டை பாதுகாக்க இடைவிடாது போராடுவது, ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்குகேட்பது என்ற அளவோடு மட்டும்! நின்று போனால்!

காலம் காலமாக கால்வயிறு கஞ்சிக்காக மாண்புகளை மலத்தில் புதைத்துவிட்டு சக மனிதனாலேயே! அவமானப்பட்டு இழிவை சுமந்து கொண்டு அலையும் இவர்களை மீட்டெடுப்பதற்கு யார் வருவது?

அதியமான், மற்றும் அருந்ததியர் தலைவர்கள் மட்டும்தான்! போராடவேண்டும் என எதிபார்ப்பது நியமா?
மலமல்லும் இழிவு அருந்ததியர் சம்மந்தப்பட்டது என்று ஒதுங்கிக்கொள்வது நியாமா?
சக-மனிதன் அடைந்திருக்கும் இழிவை ஒழிப்பது என்பது உங்களுக்கான கடமை இல்லையா?
இப்படி எத்தனையோ கேள்விகள் எம் மனதில் எழுகிறது. என்ன செய்வது?
பொறுத்திருந்துதான்! பார்க்கவேண்டும்.

இப்பதிவை
விமர்சனம் என்று கருதினாலும் அதுதான்! நிதர்சனம்.

அம்பேத்கரிய பெரியாரிய மார்க்ஸிய கோட்பாடுகள் கேட்பதற்கு அல்ல! இழந்த மாண்புகளை மீட்பதற்கு!!

தோழமையுடன்,
ஆ.நாகராசன்
ஆதித்தமிழர் பேரவை.




No comments:

Post a Comment