அண்மையச்செய்திகள்

Friday 11 December 2015

வெள்ளைத்தை சுத்தம் செய்கிறோம் என்ற பெயரில் துப்பரவு பணியாளர்களை அடிமாடாக மாற்றி சாதியை காப்பாற்ற துடிக்கும் அரசு , மாவட்ட ஆட்சியருக்கு எச்சரிக்கை விடுத்திருக்கும் மதுரை , திருச்சி மாவட்ட ஆதித்தமிழர் பேரவை

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி களை சுத்தம் செய்ய செய்ய சென்ற துப்புரவுதொழிலாளின் அவல நிலை.மதுரை மாநகராட்சி தொழிலாளர்கள் 7பேருந்துகளில் 500,பேர மேஸ்திரி சிவசுப்பிரமணி தலைமையில் சென்றுள்ளனர்.ஆழ்வார்பேட்டை அபிராமிபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.அந்த பள்ளியில் குடிநீர்,கழிப்பறை,குழியலறை வசதியின்றி தஆவித்து வருகின்றனர்.மேலும் அவர்களுக்கு இரண்டு வேலை உணவு மட்டும் கொடுக்கப்படுகின்றனர்.பாதுகாப்பு உபகனங்கள் கையுரை,காலுரை மட்டும் கொடுக்கப்படுகிறது.அதிலும் 100நபர்களுக்கு கொடுத்து பத்திரிகைகளுக்கு விளம்பரம் செய்துவருகின்றனர்.அவர்கள் 6நாட்கள ஆகியும் இதுவரை  நோய் தடுப்பூசி போடவில்லை,11,12,15அன்று தடுப்பூசி செலுத்த வந்த மருத்துவர்கள் 10பேருக்கு தான் ஊசி போட்டனர்அதற்குள் மேஸ்திரி  வேலைக்கு நேரம் ஆகிவிட்டது கிளம்புங்கள் என்று அனுப்பி விட்டனர்.மேலும் திப்படியாக 50 ரூபாய் மட்டும் கொடுத்து அதிலே அடிப்படை தேவையான சோப்பு எண்ணைய் போன்ற அத்தியாவாசி வாங்குகின் அவநிலைக்கு தள்ளபட்டுள்ளனர்.மேலும் இதே நிலை நீடித்தால் சென்னையை காப்பாற்ற சென்ற துப்புரவுதொழிலாளிகளுக்கு தொற்றுநோய் பரவி அவர்கள வாங்கும் 115ரூபாய் சம்பளத்திற்கு கொடியநோய்க்கு தள்ளபட்டு குடும்பங்கள் நடுவீதியில் நிற்க வேண்டிய அவலநிலை உருவாகிவருகிறது.ஆதவன்,மதுரை வடக்கு மாவட்டச்செலாளர்.





No comments:

Post a Comment