அண்மையச்செய்திகள்

Thursday 24 December 2015

24.12.15 இன்று ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள் , தளபதி ஸ்டாலின் அவர்களை சந்தித்த சில மணி நேரத்தில் தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்காக குரல் கொடுத்து தளபதி அவர்கள் தூய்மை பணியாளர்களின் சேவையை பாராட்டி அவர்களு பதவி உயர்வும் தற்காலிக பணியாளர்களை உடனே நிரந்தரம் செய்யவேணும் எனவும் தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளார்

24.12.15 இன்று ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா அதியமான் வருங்கால முதல்வருமான திமுக பொருளாளருமான மதிப்பிற்குரிய தளபதி திரு ஸ்டாலின் அவர்களை சென்னையில் அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்தார்

அதன் போது
விலங்குகளை விட கேவலகாக நடத்தப்படும் தூய்மைத் தொழிலாளர்கள் மாண்புடன் வாழ தி.மு.க தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. தற்போதைய அ.தி.மு.க ஆட்சியில் தூய்மை தொழிலாளர்கள் மோசமாக நடத்தப்படுகிறார்கள், இதை கண்டித்து துப்புரவு பணியாளர்களை மாண்புடன் நடத்த தமிழக அரசை வலியுறுத்தவேண்டும் என நிறுவனர் தளபதி ஸ்டாலின் அவர்களை கேட்டுகொண்டார் .

கேட்டு கொண்ட அடுத்து சில மணி நேரத்தில் தூய்மை பணியாளர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துவரும்  தளபதி திரு .ஸ்டாலின் அவர்கள் தனது முகநூல் பக்கதில் தூய்மை பணியாளர்களுக்காக இந்த அரசு சென்னையில் உள்ள மற்றும் வெளி மாவட்ட தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து சுகாதார மற்றும் அடிப்படை வசதிகள்  உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் எனவும் மேலும் அவர்களின் சேவையை பாராட்டி அவர்களின் கல்வி தகுதி அடிப்படையில் பதவி உயர்வும் தற்காலிக ஊழியர்களாக இருந்தால் பணி நிரந்தரமும் செய்ய வேண்டும் என்று தமிழக அரசை கேட்டு கொண்டுள்ளார்


அவரின் முகநூல் பதிவு கீழே

மழை வெள்ளத்தால் சென்னையில் குவிந்து கிடந்த குப்பைகளை சீர்படுத்த இரவு பகலாக அகற்ற பாடுபட்ட துப்புரவுத் தொழிலாளர்களின் அடிப்படை வசதிகள் அவர்களின் சுகாதார வசதிகள் குறித்து அதிமுக அரசு அக்கறை காட்டாதது வேதனைக்குரியது. இதனால் துப்புரவு தொழிலாளர் பழனிச்சாமி உயிரிழக்க இந்த அரசு காரணமாக இருந்துள்ளது கடும் கண்டத்திற்குரியது. சென்னையில் உள்ள மற்றும் வெளி மாவட்ட தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து சுகாதார மற்றும் அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டு கொள்கிறேன். வெளி மாவட்ட தொழிலாளர்களுக்கு சென்னையில் அவர்களின் பணி முடிந்து விட்டது என்றால் அவர்களை பாதுகாப்பான முறையில் சொந்த ஊர்களுக்கு திரும்ப அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கேட்டு கொள்ளும் அதே நேரத்தில் இதுவரை அவர்கள் சென்னையில் ஆற்றிய சேவையை அங்கீகரிக்கும் பொருட்டு சிறப்பு நேர்வாக நிதியுதவி செய்ய வேண்டும். அவர்களின் கல்வி தகுதி அடிப்படையில் பதவி உயர்வும் தற்காலிக ஊழியர்களாக இருந்தால் பணி நிரந்தரமும் செய்ய வேண்டும் என்று தமிழக அரசை கேட்டு கொள்கிறேன். துப்புரவு தொழிலாளர்களிடம் மனித நேயத்துடன் அதிமுக அரசு நடந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.



விளிம்பு நிலை மக்களான அருந்ததிய மக்களின் வாழ்க்கை முன்னேற சமரசமின்றி  தொடர்ந்து  குரல் கொடுத்துவரும் திமுக தலைவர் கலைஞர்  திரு கருணாநிதி அவர்களுக்கும் தளபதியார் திரு ஸ்டாலின் அவர்களுக்கும் அருந்ததிய மக்களின் சார்பாக ஆதித்தமிழர் பேரவையின்
நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம்

No comments:

Post a Comment