அண்மையச்செய்திகள்

Wednesday 16 December 2015

கடலூர் பெரியகாட்டு பாளையத்தில் 16.12.2015 அன்று நிறுவனர் ஆற்றிய உரையின் சுருக்கம்.

பெரியகாட்டு பாளையத்தில் 16.12.2015 அன்று நிறுவனர் ஆற்றிய உரையின் சுருக்கம்.
""""''''''"'''''''
மழைவெள்ளப் பெருக்கால் முற்றிலும் அழிவுக்குள்ளான பண்ருட்டி அருகில் உள்ள பெரியகாட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த ஒடுக்கப்பட்ட அருந்ததியர் பறையர் மக்களுக்கு. நிவாரணம் வழங்கி கருத்துரை ஆற்றினார்.
நாங்கள் தாமதாமாக வந்தாலும் உங்களை சந்தித்தாக வேண்டும் என்ற உறுதியின் காரணமாகவே வந்துள்ளோம், இன்று நாங்கள் வழங்கும் இந்த சிறு நிவாரணம் எல்லால் உங்களுக்கான நிரந்தர தீர்வை தந்துவிடாது. நிரந்தரமான தீர்வு அரசுதான் ஏற்படுத்தி தரமுடியும் என்று பேசியதோடு.
ஒரு அடி உழவு நிலம் கூட இல்லாத நீங்கள் ஏன்? இந்த காட்டுக்குள் குடியிருக்க வேண்டும், ஆதிக்க சக்திகளுக்கு அடிமை சேவகம் செய்யவும், அவர்களது வாழ்க்கை தரத்தை மேலும் மேலும் உயர்த்தவும்தான் உங்களது உழைப்பு பயன்படுகிறது.
இதைப்போன்று அடிமை வாழ்வை வாழ்வதால் உங்களது குழந்தைகளின் எதிகாலமும் அடிமைக்கு உள்ளாக்கபடுகிறது. எனவே நமது குழந்தைகளும் நம்மை போன்று அடிமைகளாக வாழ்வதற்கு நாமே காரணமாக இருக்க கூடாது.
எனவே இந்த சிறையை விட்டு வெளியேறி நகர்புரத்தை நோக்கி குடியேறுங்கள், அங்கே அதிகபடியான சம்பளத்தில் நல்ல வேலைகள் இருக்கின்றது.
எதிர்காலத் தலைமுறைகளான நமது குழந்தைகள் வாழ்வு மேன்மை பெற கல்வி ஒன்றுதான் தீர்வாக அமையும், எனவே என்ன விலை கொடுத்தாவது! குழந்தைகளை படிக்க வையுங்ங்கள்.
மேலும் அரசு நமக்காக பல்லாயிரம் கோடி ரூபாய் பணத்தை துணைத்திட்டத்தின் மூலம் ஒதுக்கியுள்ளது. அதை நாம் பெறவேண்டும் என்றால் தொடர்ந்து போராடித்தான் பெறமுடியும்.
ஆக அடிமை வாழ்க்கையில் இருந்து மீள்வதற்கு நகரத்தை ஒட்டிய பகுதியில் இடம் கேட்டு போராடி அதில் அரசே வசதியான வீடுகளை கட்டிக்கொடுக்க வலியுறுத்தி தொடர்ந்து போராடுவோம்!
போராட்டம் ஒன்றுதான் நம்மை சுயமரியாதையான வாழ்க்கைக்கு அழைத்து செல்லும், எனவே அடிமை வாழ்வை உறுதி செய்யும் இந்த கிராம அடிமை வாழ்வில் இருந்து வெளியேறுவோம்,
குழந்தைகளை படிக்க வைப்போம்! தலைமுறை தலைநிமிந்து வாழ உறுதி ஏற்போம்! என்று மக்களிடம் ஆவேசமாக உரையாற்றினார். உங்களது சுயமரியாத வாழ்க்கைக்கு தேவையானவற்றை போராடிப்பெறுவதற்கு. ஆதித்தமிழர் பேரவை எப்போதும் துணை நிற்கும்.
எப்போது வேண்டுமானாலும் எங்களை அழையுங்கள் உங்களுடன் இணந்து போராட தயாராக இருக்கின்றோம். என்று உரையாற்றினார்.
(உரையின் சுருக்கம்) 16.12.2015
தொகுப்பு.. பொதுச்செயலாளர்.

No comments:

Post a Comment