அண்மையச்செய்திகள்

Saturday 21 November 2015

மது வெறி - மத வெறி - சாதி வெறியை எதிர்த்து தீபாவளியை புறக்கணித்து தூத்துக்குடி மாவட்ட ஆதித்தமிழர் பேரவை பொறுப்பாளர்கள் அம்மா மதுபான கடையை (டாஸ்மாக்) முற்றுகையிட்டனர்.

 மது வெறி - மத வெறி - சாதி வெறியை எதிர்த்து தீபாவளியை புறக்கணித்து தூத்துக்குடி மாவட்ட ஆதித்தமிழர் பேரவை பொறுப்பாளர்கள் அம்மா மதுபான கடையை (டாஸ்மாக்) முற்றுகையிட்டனர்.

அப்போது ஆதித்தமிழர் பேரவை தொண்டர்களுக்கும் காவல்துறைக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. மேலும், தூத்துகுடி மாவட்ட ஆதித்தமிழர் பேரவை தோழர்கள் இரண்டு குழுவாக பிரிந்து விழிப்புணர்வு துண்டறிக்கையை ஒரு குழு விநியோகித்தது. மற்றொரு குழு திடிரென நகரின் மைய பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டனர்.  
அத்துடன் அங்குள்ள மக்களிடம் மதுவினால் இந்த அரசு மக்களை திட்டமிட்டு சீரழிப்பதை எடுத்துரைத்து, மதுக்கடையை உடனே மூட வலியுறுத்தினர். கொலை நடந்தாலும் வராத காவல்துறையினர், ஓடோடி வந்து தோழர்களிடம் கலைந்து செல்லுமாறு வற்புறுத்தியதை அடுத்து காவல்துறையினருக்கு பேரவையினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு அப்பகுதி பதட்டமாக காணபட்டது.
மேலும், தமிழகம் முழுவதும் முக்கிய தலைநகரங்களில் பேரவை தொண்டர்கள் தீபாவளி புறக்கணிப்பு துண்டறிக்கைகளை பொதுமக்களிடம் விநியோகித்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டது பொது மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.


No comments:

Post a Comment