அண்மையச்செய்திகள்

Wednesday 4 November 2015

வரலாற்று போர் வென்றது வானுயர ஒண்டிவீரன் புகழ் உயர்ந்தது. ஆளும் அரசு பணிந்தது.....அய்யா அதியமானின் வரலாற்று போராட்டம் வென்றது. ------ஆனந்தன்

வரலாற்று போர் வென்றது
வானுயர ஒண்டிவீரன் புகழ் உயர்ந்தது.
ஆளும் அரசு பணிந்தது.....அய்யா
அதியமானின் வரலாற்று போராட்டம் வென்றது. ------ஆனந்தன்


"""""""""""""""""
ஆதித்தமிழர் பேரவையின் அரசியல் பயணத்தில் மீண்டும் ஓர் வெற்றி வரலாறு.
வரலாறு மறுக்கப்பட்ட அருந்ததியர் சமூகத்தின் பல்வேறு வரலாறுகளை மீட்டெடுக்க..
அல்லும் பகலும் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அய்யா அதியமான்

ஒப்பில்லா மன்னன் ஒண்டிவீரனின் வரலாற்றை மீடடெடுத்து புத்தகமாக வெளியிட்டார்.
தலைவர் கலைஞரிடம் கோரிக்கை வைத்து மணிமண்டபத்தை நெல்லை மையப் பகுதியிலேயே கட்டுவதற்கான அடித்தளமிட்டார்.

2010.ல் நெற்கட்டான் செவ்வயல் பாளையத்தில் நினைவு சின்னத்தை உருவாக்கி உலகறியும் வீர வணக்க நிகழ்வை முன்னெடுத்தார்.
அதே நாள் மாலையில் நெல்லை பாளைத்திடலில் அய்யா அதியமான் தலைமையில் மாமன்னர் ஒண்டிவீரன் வரலாறு மீட்பு மாநாட்டை நடத்தினார்.

2011.ல் நெற்கட்டான் செவ்வயல் பாளையத்தில் மாமன்னர் ஒண்டிவீரனுக்கு அய்யா அதியமான் தலைமையில் வீரவணக்கமும், மாலையில் சங்கரன் கோவில் திடலில் மாமன்னர் ஒண்டிவீரனாரின் வீரவணக்க பொதுக்கூட்டம் நடத்தினார்.

2012.ல் அய்யா அதியமான் தலைமையில் நெற்கட்டான் செவ்வயல் பாளையத்தில் மாமன்னர் ஒண்டிவீரனுக்கு வீரவணக்கமும், மாலையில் நெல்லை பாளைத்திடலில் சமூகநீதி தலைவர்களை அழைத்து தன்னுரிமைக்கான மண்ணுரிமை மாநாட்டை நடத்தினார்.

2013. ல். மாமன்னரின் மணிமண்டபத்தை திறக்க  மறுத்த ஆளும் அரசை நிர்பந்தித்து அய்யா அதியமான் தலைமையில் நெல்லையில் மறியல் போரை முன்னெடுத்தார்.

2014.ல். வீரவணக்க நிகழ்வை முன்னெடுத்தார்.

2015...ல் அய்யா அதியமான் தலைமையில் நெற்கட்டான் செவ்வயல் பாளையத்தில் மாமன்னர் ஒண்டிவீரனுக்கு வீரவணக்க நிகழ்வும், மணிமண்டபத்தை உடனே திறக்க வலியுறுத்தியும், குதிரையில் அமர்ந்த படி உள்ள ஒண்டிவீரன் முழு உருவ வெண்கல சிலையை நிறுவ வேண்டும் எனவும் அய்யா அதியமானின் அறிவுறுத்தலின் படி தலைமைச் செயலகத்தை முற்றுகை இட்டு அம்மையாருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.

அதே நாளில் தென்காசியில் அய்யா அதியமான் தலைமையில்
அரசியல் அதிகார உரிமை பொதுக்கூட்டத்தை முன்னெடுதார்.

இப்படி ஆண்டுக்காண்டு அங்குலம் அங்குலமாக அடியெடுத்து, அடிமேல் அடி அடித்து அம்மையாரை ஆட்டங்காண வைத்து,
அய்யா அதியமானின் அறிவுப்பூர்வ அரசியல் யுக்த்திக்கு கிடைத்த வெற்றியே!!
திசம்பர் மாதத்தில் வைக்கப்போகும் சிலை.
அதியமானின் அரசியல் யுக்தி.
தொட்டதெல்லாம் வெற்றி! இனி
தொடுவதும் வெற்றியே!




(நெல்லை ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் வைப்பதற்கு  தமிழக அரசு திருச்சியை சேர்ந்த சிலை வடிவமைப்பாளர் கிசோர்.நாகப்பா அவர்கள் மூலம் வடிவமைத்து வைத்துள்ள மாமனர் ஒண்டிவீரனார் சிலையை பேரவையின் துணை பொதுச்செயலாளர்கள் நெல்லை.மாயா மதுரை கபீர்நகர்.கார்த்திக், மாநில இளைஞர் அணி செயலாளரும், தூத்துக்குடி மாவட்ட செயலாளருமான அருந்ததிஅரசு, நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆதித்தமிழன் ஆகிய நிர்வாகிகள் பேரவை நிறுவனர் அய்யா அதியமான் ஆணைக்கிணங்க இன்று சென்னையில் சென்று பார்வையிட்டனர். )

No comments:

Post a Comment