அண்மையச்செய்திகள்

Monday 16 November 2015

அருந்ததியர் மக்கள் மீது கொலை வெறித் தாக்குல் --- ஈழவேந்தன்

அருந்ததியர் மக்கள் மீது கொலை வெறித் தாக்குல் --- ஈழவேந்தன்
""""""""""""""""""""""""""
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் பொள்ளாச்சியிலிருந்து தாராபுரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பொள்ளாச்சியிலிருந்து கிழக்கு சுமார் 16கி.மீ தொலைவில் அமைந்துள்ளது புதுப்பாளையம் கிராமம்
இங்கு கவுண்டர் சாதியினரும், அருந்ததியினர் சாதியினரும் எண்ணிக்கையில் சரிபாதியாக உள்ளனர்.
விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.
தென்னை சார்ந்த தொழில் முக்கிய தொழிலாக உள்ளது
விவசாயம் எப்படி செழிப்பாக உள்ளதோ அதே போல அருந்ததி மக்கள் மீதான வன்கொடுமை களும் செழிப்பாகவே உள்ளது.
நாலெள்ளாம் உழைக்கும் மக்களான அருந்ததி மக்கள் உழைப்பின் களைப்பிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள தங்களின் பகுதியில் கோலி குண்டு விளையாட்டு விளையாடி உள்ளனர்.
கடந்த 4-11-2015 ம்தேதி மாலை சுமார் 5-30 மணிக்கு அங்கே வந்த ஆதிக்க சாதி கவுண்டர் பூமிநாதன் என்பவர் அங்கிருந்த ராஜன், ராஜனின் தம்பி செந்தில் ஆகியோரைப்பார்த்து, ஏன்டா சக்கிலித் தாயோழிகளா இங்க எதுக்குடா குண்டு விளையாடுறீங்க என்று கேட்டு தகறாறு செய்துள்ளார்.இதை தட்டிக்கேட்ட செந்திலை கெட்ட வார்த்தைகளால் திட்டி, உங்கள கொல்லாமல் விடமாட்டேன் என்று சொல்லிக்கொண்டே கீழே கிடந்த மண்வெட்டியால் செந்திலின் தலையில் ஓங்கி அடித்துள்ளார்.இதில் மண்டை உடைந்து ரத்தம் வருவதைப் பார்த்த ராஜன் தம்பியை காப்பாற்ற ஓடிப்போய் பூமிநாதனை தடுத்துள்ளார் தடுக்கச் சென்ற ராஜனுக்கும் அடி விழுந்துள்ளது. மேலும் ராஜனின் மனைவி நிறைமாத கர்பினியான லட்சுமியையும் அடித்து கீழே தள்ளி விட்டான் பூமிநாதன்.
நடந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட ஆதித் தமிழர் பேரவை கோவை மாவட்டச்செயலாளர், ரா.கருப்புசாமி, மாநில துனைப் பொதுச் செயலார் மா.ஈழவேந்தன் ஆகியோர் பாதிக்கப்ட்டவர்களை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவனையில் சிகிச்சை க்கு ஏற்பாடு செய்தனர்.அதோடு குடிமங்கலம் காவல் நிலைத்தில் புகார் கொடுக்க வைத்தனர். முதலில் சாதாரன பிரிவு களில் வழக்கு பதிவு செய்த துறை (IPC 447,324,506(2),)
பேரவை தோழர்களின் வற்புறுத்தலால் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
3 (1) (r) (s) and 3 (2) (v) (a) SC/ST (POY) AMENDMENT ORDINANCE 2014
அன்றே சாதிவெறித்தாக்குதல் நடத்திய பூமிநாதனை உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தற்போது ஆதித் தமிழர் பேரவை தோழர்கள் நம் மக்களுக்கு பாதுகாப்பாக உள்ளனர்.
நம்மக்களிடம் பூமிநாதனின் உறவினர்கள் வழக்கை திரும்ப பெற வற்புறுத்திய போதும் பாதிக்கப்பட்டவர்கள் வழக்கை நடத்துவதில் உறுதியாக உள்ளனர்.
""""""!!"!!!"!""""""""""""""

ஆதித் தமிழர் பேரவை

No comments:

Post a Comment