அண்மையச்செய்திகள்

Saturday 21 November 2015

தூத்துக்குடி மாவட்ட ஆதித்தமிழர் பேரவை நடத்திய நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் அலுவலகம் முற்றுகை போராட்டம் வெற்றி


தூத்துக்குடி மாவட்ட ஆதித்தமிழர் பேரவை நடத்திய நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் அலுவலகம் முற்றுகை போராட்டம் வெற்றி

நீலசட்டை பட்டாளத்தின் போராட்டத்தின் விளைவாக

நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர்
நீலகண்டன் அவர்கள்

தூத்துக்குடி to திருச்செந்தூர் சாலையை 15 நாட்களில் தற்காலிகமாக சாலையை சீரமைத்து தருவதாக வாக்குறுதி அளித்தார்

வருகிற மார்ச் 2016 க்குள் நிரந்தரமான தார் சாலைபணி முடிக்க படும் என உறுதி மொழி அளித்தார்.

போராடிய தூத்துக்குடி மாவட்ட தோழர்களுக்கு வாழ்த்துக்கள்




 (((முந்தைய செய்தி கீழே  )))

தூத்துக்குடி நெடுஞ்சாலைத்துறையின் அலட்சிய போக்கை கண்டித்து 100 க்கும் மேற்பட்ட ஆதித்தமிழர் பேரவையினர் கோட்டப்பொறியாளர் அலுவகத்தை முற்றுகையிட்டனர்

=>தூத்துக்குடி to திருச்செந்தூர் செல்லும் சாலை குண்டும் குழியுமாக போக்குவரத்து விபத்து ஏற்படுகின்ற நிலையிலும் ,மனித உயிர்களை கவு வாங்கும் அபாயகரமான சாலைகளை  காலம் தாழ்த்தாமல் உடனடியாக சீரமைக்க வேண்டுமென வலியுறுத்தியும் .

=>தூத்துக்குடி மாநகரம் மற்றும் திருச்செந்தூர் செல்லும் சாலை முழுவதும் உள்ள மண் துகள்களால் சுற்றுப்புற சொல்லல் மாசுபடுவதை தடுக்கவும் ,சாலைகளில் படிந்துள்ள மண் துகள்களை உடனடியாக அகற்றிட வலியுறுத்தியும்

=>நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் அலட்சிய போக்கை கண்டித்தும் இன்று 21.11.2015 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆதித் தமிழர் பேரவை சார்பில் கோட்டபொறியாளர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

இதில் ஆதிதமிழர் பேரவையினர் 100கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர் .இந்த பெரும் முற்றுகையால் அதிர்ச்சியடைந்த காவல்துறை அவர்களை கைது செய்து பின்னர் கோரிக்கைளை நிறைவேற்றும் என உறுதி அளித்து விடுதலை செய்தது

No comments:

Post a Comment