அண்மையச்செய்திகள்

Tuesday 17 November 2015

செகுடந்தாளி முருகேசனுக்கு நிறுவனர். தலைமையில் வீரவணக்கம்.17.11.2015

செகுடந்தாளி முருகேசனுக்கு நிறுவனர். தலைமையில் வீரவணக்கம்.(((புகைப்படம் மற்றும் காணொளி )))
~~~~~~~~~
கடந்த 17.11.1999 அன்று கோவை மாவட்டம் சோமனூர் அருகில் உள்ள செகுடந்தாளி கிராமத்தில்

புதிதாக திருமணமான முருகேசன் என்ற இளைஞன் தனது கர்ப்பிணி மனைவி கருப்பாத்தாளுடன், மருத்துவனைக்கு  சென்றுவிட்டு அரசுபேருந்தில் செகுடந்தாளிக்கு திருபிக்கொண்டிருந்த போது.

மயக்கமாக இருந்த கர்ப்பிணி மனைவியை காலியாக இருந்த பேரூந்தின் இருக்கை ஒன்றில்  அமரவைத்துள்ளார், அதே இருக்கையில் பக்கத்தில் அமர்ந்திருந்த கவுண்டர் சாதியை சேர்ந்த ஒருவன்.

ஒரு சக்கிலிச்சி என் அருகில் உட்காருவதா! என்று கருப்பாத்தாள் வயிற்றில் எட்டி உதைத்துள்ளான். அதனால் வயிற்றில் இருந்த சிசு கலைந்து ரத்தவெள்ளத்தில் மிதந்தார் கருப்பாத்தாள்.

இது சம்மந்தமான வழக்கைத்தான் திரும்ப பெறச்சொல்லி கவுண்டர்கள் கும்பலாக கூடி மிரட்ட,, மிரட்டலுக்கு அஞ்சிடாத முருகேசன் வழக்கை வாபஸ் பெறமுடியாது! என உறுதியாக இருந்ததனால்.

ஆத்திரம் அடைந்த் சாதிவெறி கவுண்டர்கள் செகுடந்தாளி பஸ் நிறுத்தத்தில் வைத்து கற்களால் அடித்து படுகொலை செய்தனர். 

வழக்கம் போல் குற்றவாளி ஈசுவரன் என்ற சாதிவெறியன் தண்டனையை கழித்து விட்டு தற்போது சுத்ந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கின்றான்,

ஆதிக்கத்திற்கும் அடக்குமுறைக்கும் அடங்க மறுத்து தன் இன்னுயிரை தந்த, அந்த மகத்தான போராளி முருகேசனின் நினைவு நாளில்
அய்யா அதியமான் தலைமையில் மதுவெறி, மதவெறி, சாதிவெறிக்கு எதிராக சபதமேற்று வீரவணக்கம் செலுத்தினர் நீலச்சட்டை போராளிகள்.

தகவல்..
பேரவை, பொதுச்செயலாளர்.

https://youtu.be/10-4jhq6t00





No comments:

Post a Comment