அண்மையச்செய்திகள்

Friday 20 November 2015

நவம்பர்.26 வீரமங்கை ராணி நினைவு நாள். திருச்சியை நோக்கி அணிவகுப்போம்! திருப்பத்திற்கான விதை விதைப்போம்!! ==பொதுச்செயலாளர்

நவம்பர்.26
வீரமங்கை ராணி
நினைவு நாள்.
*****************
திருச்சியை நோக்கி அணிவகுப்போம்!
திருப்பத்திற்கான விதை விதைப்போம்!!

எது வீரம்?
•••••••••••••
நாம்வாழ பிறரை அழித்துக்கொல்வது! வீரமா?
இல்லை...
பிறர்வாழ நம்மை நாமே! அழித்துக்கொள்வது! வீரமா?

சமண,பவுத்த துறவிகளை கழுவிலேற்றி கொலைசெய்த பார்ப்பனியம் செய்த பாதகசெயலா? வீரம்.
இல்லை.!
கழுவிலேற்றி கொன்றாலும் மண்டை பிளந்து மடிந்தாலும் கொள்கை நெறிபிறழாமல் குருதிசிந்தி மடிந்ததுதான்! வீரம்.

ஆகம விதிகளை காப்பதற்கு ஆஷ் கலைக்டரை சுட்டுக்கொன்ற வாஞ்சி செய்த வஞ்சகசெயலா? வீரம்.
இல்லை.!
கர்ப்பிணி பெண்ணை காப்பதற்கு கருணையோடு நடந்துகொண்ட ஆஷின் வாஞ்சையே! வீரம்.

இரட்டை வாக்குரிமையை முறியடிக்க பட்டினிகிடந்து சாவேன் என்று பம்மாத்து காட்டிய காந்தியின் கயமைத்தனமா? வீரம்.
இல்லை.!
தனிஈழ விடுதலைக்கு துளி நீரும் பருகாமல் பட்டினிகிடந்து செத்துப்போன திலீபனின் தீரச்செயல்தான்! வீரம்.

காதலித்தவனின் கழுத்தை அறுத்துவிட்டு எங்கேயோ பதுங்கிக்கொண்டு படம்காட்டிய ராம்.ராஜாக்களின் நரித்தனமா? வீரம்.
இல்லை.!
உயிரைக் கொடுத்து களத்திலேயே பலியாகிப்போன கதலனின் ஆண்மைத்தனம்தான்! வீரம்.

ஊழல்ராணியின் பதவியை மீட்க கல்லூரி மாணவிகளை காவுகொடுத்த காட்டுச்செயலா? வீரம்.
இல்லை.!
வேலுராணியின் உயிர்காக்க தன்னைதானே எரித்துக்கொண்டு வெள்ளை முகாமை சிதறடித்த குயிலியின் தியாகச்செயல்தான்! வீரம்

தன்சமூகம் ஆள்வதற்கு ஊரைக்கொளுத்திய ஆளைக்கொளுத்திய அயோக்கியத்தனமா? வீரம்.
இல்லை.!
தமிழ்ச்சமூகம் வாழ்வதற்கு தன்னையே மாய்த்துக்கொண்ட முத்துக்குமரன், செங்கொடியின் ஈகைச்செயல்தான்! வீரம்.

அனைவருக்கும் உழைத்த அம்பேத்கரை அட்டவணை சாதிக்குள் அடைக்க நினைக்கும் சதிகாரர்களின் சாதிப்புத்தியா? வீரம்.
இல்லை.!
அறியாமையில் மூழ்கிக்கிடக்கும் அவர்களுக்கும் உழைத்திட்ட அம்பேத்கரின் ஜனநாயக பார்வைதான்! வீரம்.

பெரியாரின் கருத்துக்களை எதிர்கொள்ள முடியாமல் அவர் படத்தை செருப்பால் அடிப்பதா? வீரம்.
இல்லை.!
செருப்பால் அடித்தவனிடம் இன்னொறு செருப்பையும் வாங்கிச்சென்ற பெரியாரின் பக்குவமான் பகுத்தறிவுதான்! வீரம்.

அருந்ததியர் இடஒதுக்கீட்டை அழிக்கின்ற நோக்கில் அடக்கப்பட்டோருக்குள்ளேயே, கலகத்தை மூட்டிய க.கியின் பார்ப்பனிய புத்தியா? வீரம்.
இல்லை.!
பகைமூட்டிய பார்ப்பனிய புத்தியை தன்னோடு சேர்த்து எரித்து சாம்பலாக்கிய நீலவேந்தன் ராணியின் சமூகநீதி கொள்கை பிடிப்புதான்! வீரம்.

ஆக...
நாம்வாழ பிறரை அழித்துக்கொல்வது! வீரமல்ல
பிறர்வாழ நம்மை நாமே! அழித்துக்கொள்வதுதான்! வீரம்.

அந்த வீரம் செறிந்த...
பவுத்தநெறி கொள்கையில் பயணப்பட்ட வாரிகளாய்!
வதைபடும் மக்களை உசுப்பிய ஆயுதங்களாய்!
ஆதித்தமிழர்களின் உரிமைகளை காக்க தன்னுயிரை தந்த மாவீரர்கள் நீலவேந்தனுக்கும் ராணிக்கும் என்றும் தலைவணங்கும்! இச்சமூகம்.
•••••••••••••••••••••••
அருந்ததியர் உரிமைகளை காத்திட...
அடக்குமுறை சாதியத்தை அழித்திட...
தன்னைத்தானே மாய்த்துகொண்டு தன்மானத்தை ஊட்டிய வீரமங்கை ராணியின் நினைவு நாளில்...

மதுவெறி, மதவெறி, சாதிவெறிக்கு எதிராக
கருத்துரிமை முழக்கமிடுகின்றார்
'அய்யா' அதியமான்.

நவம்பர்.26.ல்
"""""""""""""""""""''"''''
திருச்சியை நோக்கி அணிவகுப்போம்!
திருப்பத்திற்கான விதை விதைப்போம்!!
___________________
பொதுச்செயலாளர்.

No comments:

Post a Comment