அண்மையச்செய்திகள்

Saturday 31 October 2015

ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் 'அய்யா' அதியமான் கண்டன அறிக்கை

ஆதித்தமிழர் பேரவை
நிறுவனர் 'அய்யா' அதியமான் கண்டன அறிக்கை
"""""""""""""""""""""""''''''''''''''
மது விலக்கை அமல்படுத்த கோரி பிரச்சாரம் செய்த
ம.க.இ.க பொறுப்பாளர் கோவன் அவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறைபடுத்தியதை ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கின்றது.
"""""""""""""""""""""""""
திருச்சியை சேர்ந்த மக்கள் கலை இலக்கிய கழக மைய கலைக்குழு பொறுப்பாளர் மக்கள் இசைப்பாடகர் தோழர் கோவன் அவர்கள் மதுவிலக்கை அமல்படுத்தாத தமிழக அரசை விமர்சனம் செய்து  விழிப்புணர்வு பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

அது அனைத்து வலைத்தளங்களிலும் வெளிவந்துள்ளது. அந்த பாடல் தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களிடமும் ஏக போக வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் அந்த பாடலை பாடியதற்காக தமிழக அரசு, தோழர் கோவன் மீது 124.A, 153.A ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இந்த செயலை ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கின்றது.

தமிழக அரசின் இந்த அடக்குமுறை செயல் என்பது, கருத்துரிமைக்கு எதிராக இந்து மதவெறியர்களால் படுகொலைக்கு உள்ளான பகுத்தறிவாளர்கள் தபோல்கர், பன்சாரே, கல்புரகி ஆகியோரது படுகொலைகளுக்கு இணையான "ஜனநாயக" படுகொலையாகவே! அமைந்துள்ளது,

சட்டமன்றத்திலும் கருத்து சொல்ல உரிமை மறுப்பு, மக்கள் மத்தியிலும் கருத்து சொல்ல உரிமை மறுப்பு என்றால் வாக்களித்த மக்கள் என்ன கிள்ளிகீரைகளா? என்றுதான்! கேட்க தோன்றுகிறது.

ஆதித்தமிழர் பேரவை வெளியிட்ட மதுரைவீரன் நூலுக்கு தடைவிதித்து ஒடுக்கப்பட்டோரின் இலக்கிய படைப்பை முடக்கியது,

செயலற்று கிடக்கும் தமிழக அரசின் நடவடிக்கைகளை கண்டித்து கருத்து சொல்லும் அரசியல் கட்சி தலைவர்கள் மீது அவதூறு வழக்குகளை தொடுப்பது, மாணவர்கள் மற்றும் மக்கள் போராட்டங்களை ஒடுக்குவது, தனது கட்சிக்காரர்களை தூண்டிவிட்டு அராஜகத்தில் ஈடுபடுவது, காவல்துறையை ஏவிவிடுவது, ஜனநாயக போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பது,

போன்ற அடக்குமுறைகளை ஏவிவிட்டு ஜனநாயகத்தின் குரல்வலையை நெறிக்கும் அராஜக செயல்களை விட்டு விட்டு, மக்களுக்காக போராடும் ஜனநாயக போராட்டங்களை அங்கீகரித்து, அவர்களது கோரிக்கைகளின் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்கள் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதுதான் வாக்களித்த மக்களுக்கு தமிழக அரசு செய்யும் ஜனநாயக கடமையாக அமையும்.

எனவே கருத்துரிமையை பறிக்கும் செயல்களை கைவிட்டு தோழர் கோவன் மீது போடப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு சட்டத்தை திரும்பப்பெற்று அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என ஆதித்தமிழர் பேரவை தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

இவண்..
இரா.அதியமான்
ஆதித்தமிழர் பேரவை.

No comments:

Post a Comment